புகைப்பட ஹைக்கூ 78


 புகைப்பட ஹைக்கூ 78


பொதுவெளியில் முத்தம்
கிளம்பவில்லை யுத்தம்
அணில்கள்!

இதழ்களில் படிந்தது
ஈரம் மட்டுமல்ல இதயமும்!
அணில்கள்!

இதழ்பதித்ததும்
இடம்பதித்தது இதயத்தில்!
அணில்கள்!

அணில்களின் அந்தரங்கம்!
கலைத்தது
கேமராக் கண்!

பெருக்கெடுத்த அன்பு
பெற்றெடுத்தது
முத்தம்!

சங்கமம் ஆகும் முன்
சங்கீதம் இசைத்தன
அணில்கள்!

அள்ளித் தெளித்தது
துள்ளித் திரிந்த அணில்கள்
அன்பு!

இணைந்த கைகள்
இசைத்தது காதல் கீதம்!
அணில்கள்!

கறைபடாமலே
சிறைபட்டன
அணில்கள்!

மெய் மறக்கையில்
மெய் சிலிர்த்தது
அணில்கள்!

முடிவே இல்லா யுத்தம்
முத்தத்தில் தொடங்கின
அணில்கள்!

சிந்தை மயங்கி
சிந்தை கவர்ந்தன
அணில்கள்!

சிறை வைக்கையில்
சிறைபட்டது
அணில்கள்!

அன்பின் மொழி
வசப்பட்டது
அணில்கள்!

விதைபட்ட முத்தம்!
விளைவித்தது அன்பு!
அணில்கள்!

உணர்வில் கலந்ததும்
ஒளியை இழந்தன
அணில்கள்!

காதலர்கள் முத்தம்!
காதலன் பிடித்தான்!
அணில்கள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!Comments

 1. அந்த படமும் அதற்கேற்ற கவிதை வரிகள் அருமை. அந்த படம் அழகு.

  ReplyDelete
 2. அரிமை நண்பரே.... வாழ்த்துகள்

  ReplyDelete
 3. காட்சியும் அருமை
  கவியும் அருமை
  வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 4. "வாயில் குத்திய முள்ளை எடுத்தால் என்ன பேச்சு பேசறாங்க பாரேன்..."

  :))))))

  ReplyDelete
 5. மேலும் மேலும் கவிதைகள் படிக்க விருப்பம் ...
  இது வாசகர் விருப்பம்
  ஸ்வாமிகள் நிறைவேற்றுவாரா?

  ReplyDelete
 6. வணக்கம்
  நன்றாக உள்ளது... பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 7. ஆஹா அணிகள் ...கவிதை...அருமை

  ReplyDelete
 8. அணில்களின் ஹைக்கூ அணிவகுப்பு அருமை சுரேஷ்! நண்பரே! அனைத்துமே!

  ReplyDelete
 9. உங்கலைப் பற்றி உயற்வாக பள விசயங்கலை நான் பகிற்ந்ததுண்டு, உங்கல் எலுத்து திறுடு போனதையும் சொள்ளியதுண்டு ஆனால் நீங்கல் என்னைக் குரிப்பிடுகையிள் எதோ ஒரு அனானி என்ரு மரியாதையே இல்லாமல் உங்கல் பணக்காரத் திமிறை காட்டியிருந்தீர்கல்.

  இருந்தாளும் இன்ரு ஏன் வந்தேன் என்ரு சொன்னாள், ஆஸ்திரேலியா சம்பவத்திக்கு புரவு இந்து தீவிரவாதத்தை ஒரு பிடி பிடித்திருப்பீர்கல் என்ரே வந்தேன் ஆனாள் அதைப் பர்ரி பதிவு எதும் இள்ளே. ஒரு இந்துக்கல் பன்னுகிர அட்டகாசத்தை பாத்தீர்கலா ? அதை உடனே கண்டிக்க ஏன் தயக்கம் ? அவர்கலை நக்கள் பன்னி உடனே ஒரு பதிவு கொடுங்கல். அப்ப வாவது உலகிள் தீவரவாதம் குரையுதா பாப்பம்.
  பரமுசிவசாமி

  ReplyDelete
 10. ஒரு சொள்ளை திரும்ப திரும்ப வரிமுடிவில் போடுவதை ஹோசிமின் கவிதைகல் வடிவம் என்பார் எங்கலு இயக்குநர். தமிழில் ஹோசிமின்கவிதகல் எலுதுவது நீங்கல் மட்டும் தானாம்
  பரமு சிவசாமி

  ReplyDelete
 11. அன்பின் மொழியோடு அனைத்தும் அருமை...

  ReplyDelete
 12. ஒரே படத்திற்கு இத்தனை கவிதைகள் மாற்றி மாற்றி எழுதுவது உங்களுக்கு கைவந்த கலையாகி விட்டது

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2