கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 26

  கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 26


 1. தலைவருக்கு செண்ட்ரல்ல பவர் அதிகம்!
பிரதமர்கிட்டேயா இல்ல அமைச்சர்கள் கிட்டேயா?
நீ வேற நான் சொன்னது செண்ட்ரல் ஜெயில்லன்னு!

 1. பாரதரத்னா விருதை கோடானுகோடி ரசிகர்களை பெற்றிருக்கும் அனுஷ்காவிற்கு தராமல் மாளவிகாவிற்கு தந்ததை வன்மையாக கண்டிக்கிறோம்..!
    தலைவரே! அது மாளவிகா இல்லே மாளவியா!

 1. தலைவர் எதுக்கு இவ்ளோ பெரிய காந்தத்தை முதுகிலே கட்டிக்கிட்டு திரியறார்!
    மக்களை கவர்ந்து இழுக்க முயற்சி பண்றாராம்!

 1. கல்யாணமான புதுசுல என் வொய்ஃப் வாயைத் திறந்து எதையும் பேசவே மாட்டா?
     இப்போ?
   வாயைத் திறந்தா மூடவே மாட்டேங்கிறா!


 1. மன்னா! இளவரசர் தங்கள் மகன் என்பதை நிரூபித்துவிட்டார்!
அடடா! அப்படி மெச்சும்படி என்ன காரியம் செய்தான்?
கோலிவிளையாட்டில் தோற்றுவிட்டு நண்பர்களை ஏமாற்றி ஓடி வந்துவிட்டார்!

 1. மன்னர் அரசு கஜானாவை திறந்துவிடுங்கள் என்று சொல்கிறாரே மக்கள் மீது அவ்வளவு அக்கறையா?
நீ வேறு காலியாக இருக்கும் கஜானாவை எதற்கு பூட்டிவைக்க வேண்டும் என்றுதான் அப்படி சொல்லுகிறார்!

 1. மூணு அடிக்கு பயந்த உன் பையன் இப்ப ஆறு அடிக்கு வளர்ந்திட்டானா? என்னடி சொல்றே?
முன்னெல்லாம் மூணு அடி வாங்கவே பயப்படுவான் இப்ப ஆறு அடிவரைக்கும் அசராம தாங்கறான்னு சொல்ல வந்தேன்!

 1. இவ்ளோ டெஸ்ட் எடுத்தும் ஏதோ ஒண்ணு குறையுதுன்னு சொல்றீங்களே டாக்டர் என்ன அது?
    உங்க பில் அமவுண்ட் ரவுண்டா வராம  கொஞ்சம் குறையுது அதைத்தான் சொன்னேன்!

 1. அவர் யாருக்கிட்டேயும் பல்லைக்காட்டிக்கிட்டு நிற்கமாட்டாரு…!
அதுக்காக டெண்ட்டிஸ்ட் கிட்ட கூட பல்லை காட்டமாட்டேன்னு சொன்னா பல்வலி எப்படி குணமாகும்?

 1. அந்த ஓட்டல் சர்வருக்கு ஆனாலும் இவ்வளவு நக்கல் கூடாது!
    ஏன் என்ன ஆச்சு?
 வடையில நூல் நூலா வருதுன்னு சொன்னா ஊசிப்போனா நூல் வராம என்னவரும்னு கேக்கறான்!

 1. பாம்பை மையமா வச்சு ஒரு படம் எடுத்தாரே டைரக்டர் படம் என்ன ஆச்சு?
பெட்டியை விட்டு வெளியே வரவே இல்லை!

 1. எனக்கு மரியாதை கொடுக்காட்டிக்கூட நான் போட்டு இருக்கிற இந்த காக்கி யூனிபார்முக்காவது மரியாதை கொடுன்னு கபாலிக்கிட்ட சொன்னது தப்பா போச்சு!
    என்ன பண்ணான்?
யூனிபார்மை கழட்டி வாங்கிட்டு போயி மாலை மரியாதை பண்ணிக்கிட்டு இருக்கான்!

 1. காய்கறியெல்லாம் இப்படியா முத்தலும் சொத்தையுமா வாங்கிட்டு வருவீங்க இதைக்கூட ஒழுங்கா வாங்கத் தெரியாதா?
உன்னை செலக்ட் பண்ணி கட்டிக்கிட்டதுல இருந்து என்னோட லட்சணம் தெரியலையா?

 1. வக்கீல் எதுக்கு சட்டப் புத்தகத்தை தண்ணியிலே ஊற வைக்கிறார்?
சட்டத்தை கரைச்சு குடிக்க போறாராம்!

 1. தலைவர் மக்களோட மக்களா குடியிருப்பேன்னு சொல்றாரே எதுக்கு?
டாஸ் மாக் வாசல்ல குடியிருக்கிறதைத்தான் அப்படி நாசூக்கா சொல்றாரு!

 1. புலவரை எதற்கு கட்டிவைத்து சவுக்கால் அடிக்கிறார்கள்?
உலா பாடுகிறேன் என்று ‘பீலா” விட்டுக் கொண்டிருந்தாராம்!


 1. பதுங்குக் குழிக்குள் பதுங்கியிருந்த மன்னரை மணியடித்து யாரோ காட்டிக்கொடுத்தார்களாமே? 
    யாரும் காட்டிக்கொடுக்கவில்லை! அவர் இடுப்பில் இருந்த செல்போன் மணியடித்து தான் மாட்டிக் கொண்டார்!

 1. மாப்பிள்ளை பேங்க் ல வேலை பார்க்கிறார்னு சொல்லி ஏமாத்திட்டாங்களா? எப்படி?
ப்ளட் பேங்க் ல வேலை பார்க்கிறார்!

 1. தலைவர் உடனே ஒரு கிளினிக் ஆரம்பிக்கனும்னு எதுக்கு சொல்றார்?
அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்திட்டாங்களே அதான்!

 1. சின்ன பட்ஜெட்ல படம் எடுக்கணும்னு சொன்னாங்க அதுக்காக இப்படியா?
ஏன் என்ன ஆச்சு?
 செல்போன்ல படம் எடுக்கணுமாம்!

21. சிட்டியிலே க்ரைம் ரேட் கூடிப்போச்சுன்னு மீட்டிங் போட்டாங்களே அப்புறம் என்ன முடிவு பண்ணாங்க?
    மாமூல் ரேட்டை உயர்த்தி கேட்பதுன்னு ஒருமித்து முடிவு பண்ணி இருக்காங்களாம்!

22. உடல் நிலை சரியில்லாத மன்னரை பார்க்க புலவரை அனுப்பியது தவறாக போய்விட்டது!
      ஏன்?
  இரங்கற்பா பாடிவிட்டார்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. வயித்தைப் புண்ணாக்கிடுவீங்க போலிருக்கே!

  ReplyDelete
 2. சென்ட்ரல் ஜெயிலில் இருந்து இரங்கற் பா வரை எல்லாமே அருமை !

  ReplyDelete
 3. அனைத்தும், சரவெடிகள் நண்பரே...

  ReplyDelete
 4. சிரிப்பா சிரிச்சி வயிரு வழி எடுத்துவிட்டது.

  ஒரு அஞ்சலி (சறியான ”லி” உங்கள் பதிவில் அரிந்து கொண்டேன்) கவிதை எலுதுங்கல் என்றேன். அதற்கு என் மேல் எத்தனை வன்மம் காட்டி ஒரு பதிவை எலுதிவிட்டீர்கல். அவ்வலவு அக்கிரோசம் தேவை தானா ? இந்துக்கல் தான் உளக கலவரத்துக்கும் தீவிரவாதத்துக்கும் அடிப்படை. அவர்கல் கோட்பாடுகல் கோனளானது என்ரு உங்கல் தளத்திள் படித்து அரிந்தேன் அதனாள் அது போன்ர அரிவுப் பூற்வமான பதிவுகல் இட உங்கலை வேண்டினேன் அது தவரா ? இடுகை இட்ட அன்ரே பார்த்துவிட்டேன் ஆனா இப்ப தான் கனினை -ஐ கிடைத்து தட்டச்சு செய்ய முடிந்தது. என்ன தான் நன்ராக எலுதினாலும் எலியவர்களை எல்லி நகையாடும் குனம் தவரு சார்.
  ஒரு ரசிகன் இது மாரி எலுதுங்கனு சொள்ரது தப்பாம் அது எந்த ஊறு ஞாயம் சார். வேனா படி இள்ளாங்காட்டி ஓடிப் போங்கிர மாரி ஆனவத்தை நிச்சயம் நான் எதிற்பாற்கவிள்ளை.
  எங்க இயக்குனர் உங்கலைப் பர்ரி புகல்சியா சொன்னதை மட்டும் பகிர்ந்தேன். ஆனா அவரே , தளிர் பக்கத்தில் களை நயம்,இ/ல/ளக்கியம் (சறியான ல/ள வை தேறெடுக்கவும்)எதிற்பார்க்களாம் ஆனா பொது அரிவுக்கு அது தகுந்தது அள்ளா என்பார். உ.ம். நம்ம பிரதம்ர் வெளிநாட்டுக்கு நிதி உதவி கேட்டுப் போவதாக மக்கு மாதிரி நீங்க எலுதியிருந்தீர்களாம்( முதளீடு தான் கேட்கிரார்) அதை எள்ளாம் நான் பிள்டர் பன்னி தான் எலுதியிருந்தேன். நான் உங்கல் மேள் எவ்வலவு நேசத்துடன் இருக்கிறேன் என்பதர்காகவே இதை எப்போ எலுதினேன்.
  என்ரும் உங்கல் நன்பனாக இருப்பேன். தவரா எலுதினால் மன்னிச்சு!
  (பாவம்)பரமு சிவசாமி

  ReplyDelete
  Replies
  1. இத்தனை நாள் எதிர்பார்த்தேன்! இன்று எதிர்பாராமல் வருகை தந்து அசத்திவிட்டீர்கள் நண்பா! எளியவனை எள்ளி நகையாடுவது என் குணம் அல்ல! ஏதோ எனக்குத் தெரிந்ததை எழுதுகின்றேன். பொது அறிவிலும் கொஞ்சம் வீக்குதான்! நான் சொல்லவந்ததை நீங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை! என்னை கட்டாயப்படுத்தி எழுத சொல்லாதீர்கள் என்பதுதான் நான் சொல்ல வந்தது! எனக்கு தோன்றுவதினை நான் எழுதுகிறேன்! பிடித்தால் ரசியுங்கள்! இல்லையேல் விட்டுவிடுங்கள்! என்றுதான் சொன்னேன். மேலும் தீவிரவாதம் அது எப்படி வேர்பிடித்தது இந்து தீவிரவாதிகள் என்றெல்லாம் எழுத வேண்டுமானால் நிறைய படிக்க வேண்டும் நான் அந்த அளவு படிப்பாளி இல்லை! ஏதோ தற்குறித்தனமாக எழுதுகின்றேன். மத சம்பந்தமாக எழுதிய பதிவுகள் கூட உணர்ச்சி வசப்பட்டு எழுதியது என்பதே உண்மை! உங்கள் மேல் எனக்கு கோபம் இல்லை! இவ்வளவு சொன்ன நீங்கள் உங்கள் டைரக்டர் யார் என்பதையும் சொல்லி இருக்கலாம். உங்கள் டைரக்டர் போன்றவர்கள் என் தளத்தை படிப்பதை அறிந்து மகிழ்கிறேன்! தொடர்ந்து வாருங்கள் தவறுகளை சுட்டுங்கள்! இதை எழுது என்று கட்டாயப்படுத்தாதீர்கள்! படைப்பு தானாக வரும்போது ருசிக்கும். கட்டாயப்படுத்துகையில் அதன் சுவை குன்றிவிடும். உதாரணத்திற்கு நான் எழுதிய அஞ்சலிக் கவிதையையே எடுத்துக் கொள்ளலாம். அது தானாக உதித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று எண்ணுகிறேன். இன்று கூட நான் ஒரு பாப்பாமலர் கதையை எழுத வேண்டும் என்று எழுதி இருக்கிறேன்! அது எனக்கு திருப்தி இல்லை! இருந்தாலும் வெளியிடப் போகிறேன்! பிறகொருமுறை திருத்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இன்னமும் சொல்லிக் கொள்கிறேன்! ஆழமான பதிவுகளை என்னிடம் எதிர்பார்க்காதீர்கள்! அந்த அளவுக்கு நான் அறிவாளி இல்லை! கூட நான் சோம்பேறி என்பதால் பதிவு எழுத நிறைய மெனக்கெடுவது இல்லை! இதனால் அந்த மாதிரி எழுதப்போய் தவறுகள் ஏற்படும் என்று எழுதுவது இல்லை! மற்றபடி எனக்கு எந்த ஆணவமும் இல்லை! நன்றி நண்பரே! இதற்குமேலும் புரிந்து கொள்ள மறுத்தால் மவுனமே எனது பதிலாக இருக்கும் நண்பரே!

   Delete
 5. அய்யா வணக்கம்!
  அருமையான நகைச்சுவைகளை அளித்துள்ளீர்கள்!
  நம்ம் பகவான்ஜியே அருமை என்ற பிறகு அடியேன் சொல்ல என்ன இருக்கிறது?
  வாழ்த்துகள் அய்யா!
  நன்றி

  ReplyDelete
 6. நகைச்சுவை துணுக்குகள் எல்லாம் அருமை. சிரித்தேன்.

  ReplyDelete
 7. படித்து, சிரித்து, ரசித்தேன்.

  ReplyDelete
 8. ரசித்தோம்! சிரித்தோம்!!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!