தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

உப்பைத் தின்றாலும்
இனிப்பைத் தந்தன
மழைமேகங்கள்!

குளித்து முடித்ததும்
புத்தாடை உடுத்தின கட்டிடங்கள்!
பாசி!

உருக உருகப்
பெருகியது நீர்!
மழை!

பின்னல் போட்டதும்
கலைத்துப்போட்டார்கள்!
சிலந்தி!

வாசமில்லா இடத்தில்
வாசம் செய்தது!
சிலந்தி!

தோற்றாலும்
முயற்சித்துக்கொண்டே இருக்கிறது!
குழந்தைகள்!

கல்லை உடைத்ததும்
பிறந்தது கலை!
சிலை!

இருண்ட வீடு
விளக்கேற்றியது
நிலா!
 
வண்டுகள் மொய்த்தாலும்
வதங்கவில்லை!
நிலா!

கவன ஈர்ப்புத் தீர்மானம்
கொண்டுவந்தது குழந்தை!
அழுகை!

சிரித்தால் சொர்கம்!
அழுதால் நரகம்!
குழந்தை!

பொதுவெளியில்
இதழோடு இதழ்பதித்தது
வண்ணத்துப்பூச்சி!

வண்ணங்கள்வாங்க
மலர்களிடம் பேச்சுவார்த்தை!
வண்ணத்துப்பூச்சி!

உறுதியாக இருந்தும்
வழுக்கிவிடுகின்றன
பாறைகளில் பாசிகள்!
 
மூடி மறைத்தது!
ஆழத்தை!
குளத்து நீர்

பதுக்கல் பொருட்கள்!
அபகரிக்கப்பட்டன!
குளத்துமீன்கள்!

காய்ந்து போனது ஈரம்!
உதிர்ந்தது!
காலில் ஒட்டிய மண்!நிலாக்குளியல்!
கண்விரித்து களித்தன!
அல்லிமலர்கள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments


 1. நிலாக்குளியல்!
  கண்விரித்து களித்தன!
  அல்லிமலர்கள்!//
  அனைத்தும் அருமை.

  ReplyDelete
 2. அனைத்தும் அருமை ரசித்தேன். அதுவும் குழந்தைகள் சம்பந்தமான வரிகள் சூப்பர்.

  ReplyDelete
 3. குழந்தைகள் செம...வண்ணத்துப்பூச்சி அழகு...

  ReplyDelete
 4. வணக்கம்
  அனைத்து கவிதைகளும் மிக அருமையாக உள்ளது அதற்கு தகுந்தால் போல் படங்களும்... பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 5. அனைத்தும் அருமை நண்பரே...

  ReplyDelete
 6. siru siru varigalil ovvondrum asathal kavithaigal ! super !

  ReplyDelete
 7. ரசித்தேன்
  மகிழ்ந்தேன்
  நன்றி நண்பரே

  ReplyDelete
 8. // உப்பைத் தின்றாலும்
  இனிப்பைத் தந்தன
  மழைமேகங்கள்!//
  அருமை அருமை அருமை

  ReplyDelete
 9. சுவாமிகளே எங்கேயோ போய்டீங்க...

  ReplyDelete
 10. அனைத்தும் ரசிக்கத் தக்கவை...

  ReplyDelete
 11. உப்பைத் தின்றாலும்
  இனிப்பைத் தந்தன
  மழைமேகங்கள்!

  குளித்து முடித்ததும்
  புத்தாடை உடுத்தின கட்டிடங்கள்!
  பாசி!//

  சுரேஷ் !!! அருமை அருமை!

  ReplyDelete
 12. அனைத்து வரிகளுமே மிகவும் சிறப்பாக உள்ளன. ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு முன் வந்து நிற்கின்றது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2