பாரத ரத்னாக்களும் கடவுளின் ஆஃபரும்! கதம்பச்சோறு! பகுதி 54
மார்கழி மரணங்கள்!
நானும் கவனித்துக் கொண்டு வருகிறேன்!
டிசம்பர் சீசன் சங்கீதத்திற்கு உகந்தது போல மரணங்களுக்கும் ஏற்றது போல! ஒவ்வொரு
வருடமும் டிசம்பர் (மார்கழி) வருகையில் பிரபலங்கள் மறைந்து வருகிறார்கள். இந்த
வருடமும் விகடன் பாலசுப்ரமண்யம், பாலச்சந்தர், கூத்தபிரான் என்று பெரும்
பிரபலங்கள் மார்கழி மாதத்தில் உயிரை விட்டிருக்கிறார்கள். இவர்கள் வாழ்ந்து
சாதித்தவர்கள். வேறுபட்ட துறைகளில் தங்கள் உழைப்பை வெளிப்படுத்தி வெளிச்சத்துக்கு
வந்தவர்கள். இவர்களின் இழப்பால் இன்று வளர்ந்து நிற்கும் அந்தந்த துறைகளுக்கு
பெரிய இழப்பொன்றும் இல்லைதான். ஆனாலும் சம்பிரதாய இரங்கல் தெரிவிப்பது எனில் அந்த
துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று அனைவரும் சொல்வது பழக்கம் ஆகிவிட்டது.
பாலச்சந்தர் திரைப்படங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பரிமாறி சர்ச்சைகளில்
சிக்கியவர். இன்று இறந்தபோதும் அவரைப்பற்றி முகநூலில் இரங்கல் என்ற பெயரில்
உலாவும் சர்ச்சைகள் வேதனைக்குரியது. ஒருவர் இறந்த பின் அவர் நல்லவன், கெட்டவன்,
வியாபாரி, உயர்ந்தஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற வேறுபாடுகள் விவாதங்கள் தேவையில்லை!
இத்தனைகாலம் வாழ்ந்தார் அதில் எத்தனை நல்லது செய்தார் என்று பெருமைகளை பற்றி பேசி
விடைகொடுப்பதே சிறந்த மாண்பு. விகடன் முன்னாள் ஆசிரியர் தனது உடலை
மருத்துவக்கல்லூரிக்கு தானமாக கொடுத்தது பாரட்டத்தக்க ஒன்று. நீண்டகாலம் விகடன்
ஆசிரியராக இருந்து தனது கனவுகளை கலைத்துக்கொண்டு விகடன் வளர உரமாக இருந்தவர் அவர்
என்பது அவரோடு பழகியவர்கள் சொல்லும் கருத்துக்கள் மூலம் தெரிகிறது. வானொலி அண்ணா
கூத்தபிரான் 80களில் இளம்பிராயத்தில் இருந்தவர்கள் யாரும் மறக்க முடியாது. ஞாயிறு
தோறும் சென்னை வானொலியில் மதியம் 2.15க்கு ஒளிபரப்பான சிறுவர் சோலையின் இயக்குனர்
இவர். சென்னையில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளுக்கு வர்ணணைகளும் தந்துள்ளார்.
பிள்ளைகள் எல்லாம் எப்பவும் சிரிச்சிக்கிட்டு இருக்கணும் சந்தொஷமா இருக்கணும்!
என்று நிகழ்ச்சி முடிவில் இவர் சொல்லும் அழகே தனி. பாலச்சந்தரைப் பற்றி
எல்லோருக்கும் தெரிந்திருக்கும். சாதாரண மனிதர்களை கதாநாயகர்கள் ஆக்கிய அவரது
தைரியம் பாராட்டத்தக்கது. என்னுடைய படத்தில் கதைதான் ஹீரோ என்று அவர் பலமுறை
நிரூபித்து இருக்கிறார். இவர்கள் மூவரின் மறைவு கலைத்துறைக்கு கட்டாயம் வருத்தத்தை
தரக்கூடியதே! மூவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்!
பாரதிய ஜனதாவின் தமிழக
ஆட்சிக்கனவு!
திராவிட முன்னேற்ற கழகம் அறிஞர் அண்ணா
தலைமையில் இந்தியாவில் காலூன்றி ஆட்சியை பிடித்த பின் எந்த தேசிய கட்சியும் தமிழக
அரசியலில் எடுபடவில்லை! பின்னர் இந்த கட்சியில் இருந்து பிரிந்த அதிமுக ஆட்சியை
பிடித்ததே ஒழிய காங்கிரஸோ கம்யூனிஸ்ட்களோ இன்னபிற கட்சிகளோ ஆட்சியை பிடிக்க
முடியவில்லை! ஆட்சியை பிடித்த கட்சிக்கு ஒத்து ஊதி தங்களை கொஞ்சம்
வளர்த்துக்கொண்டன அல்லது அழித்துக் கொண்டன. இப்போது அமித் ஷா என்பவர் பாரதிய
ஜனதாவை தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் ஏற்றுவேன் என்று சபதம் போட்டு சில ஆளிழுப்பு
வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார். இதெல்லாம் வேலைக்கு ஆகும் என்று தெரியவில்லை!
மக்களை கவரும் திட்டம் எதுவும் மத்திய அரசால் செயல்படுத்த படவில்லை! இருக்கும்
திட்டங்களையே கலைத்துக் கொண்டு இருக்கிறார்கள். திராவிட அரசுகள் தரும் இலவசங்கள்
பி.ஜே.பிக்கு ஒவ்வாத ஒன்று. கட்சியில்வலுவான தலைவர்கள் இல்லை! மக்களைக்கவரக்கூடிய
செல்வாக்கு மிக்கவர்களும் இல்லை! மக்களோடு மக்களாய் செயல்பட்டு அவர்களுக்கு உதவ
கட்சியினர் யாரும் இல்லை! இந்த நிலையில் பாரதிய ஜனதாவின் கனவு வெறும் கனவாகத்தான்
தோன்றுகிறது. போணியாகாத சில நடிகர்களை இழுத்து கட்சியை இன்னும் அசிங்கப்படுத்திக்
கொண்டு இருக்கிறது பா.ஜ.க.
பள்ளி மேலாண்மைக் குழு!
சென்றவாரம், ஒரு மூன்று நாள் என் பெண்
படிக்கும் பள்ளி சார்பாக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் பள்ளி மேலாண்மைக் குழு
கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள நேர்ந்தது. பள்ளி மேலாண்மைக்குழு என்றால் என்ன?
என்பதில் இருந்து அரசாங்கம் பிள்ளைகள் படிக்க என்னவெல்லாம் செய்கிறது என்பது வரை
அறிந்து கொள்ள முடிந்தது. ஆசிரியர் பயிற்றுநரான திருமதி அமுதாவும், ஆசிரியரான திரு
குமாரும் சிறப்பாக விளக்கினார்கள். பள்ளி மேலாண்மை குழுவில் 50 சதவீதம் பேர்
பெண்களாகத்தான் இருக்க வேண்டுமாம். அதனால் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களில் 90
சதவீதம் பேர் பெண்கள். இறுதி நாளன்று ஏதேதோ டேஸ்க் எல்லாம் கொடுத்தார்கள். கலந்து
கொண்ட பெண்கள் சிறப்பாக செய்தார்கள். இந்த பயிற்றரங்கில் கலந்து கொண்டபோது
ஆசிரியர் பயிற்றுநர் அமுதா கூறிய ஒர் விஷயம் மிகவும் என்னை பாதித்தது. அதே போல
விவாதத்திற்கு வந்த ஒரு பொருள் அரசுப்பள்ளிகள் மாணவர்களை கட்டுக்கோப்பாக
வைக்கவில்லை என்பது. இது குறித்து விரிவாக தனி பதிவில் எழுதுகின்றேன். இந்த
கருத்தரங்கில் தெரிந்துகொண்ட இன்னொரு விஷயம் ஒரு கரு (குழந்தை) உருவாகிவிட்டால்
அது அரசாங்கத்தின் சொத்தாகிறது. அரசாங்கமே இலவசமாய் வளைகாப்பு நடத்துவதில் இருந்து
சத்துமாத்திரைகள் தந்து பிரசவம் பார்த்து செலவிற்கு பணமும் தந்து அனுப்புகிறது.
எனவே என் குழந்தை என் குழந்தை என்று சொன்னாலும் முழு உரிமை அரசுக்கே என்றார்கள்.
பெண் சிசுக்கொலை பற்றி விவாதம் வந்தபொது கிடைத்த தகவல் இது.
டோனி உங்க ஆட்டம் சரியில்லை!
முதல் டெஸ்டில் போராடி வீழ்ந்த அணியாக
இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி தெரியவில்லை! முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடிய
போதும் இரண்டாவது நாளில் விரைவாக வீழ்ந்துவிட்டது. பந்துவீச்சில் முதலில் உமேஷும்
ஷமியும் மிரட்டினாலும் கடைநிலை வீரர்களான ஆஸ்திரேலியர்களை கட்டுப்படுத்த
தவறிவிட்டனர். வாய்ப்பேச்சில் சீண்டுவது ஆஸ்திரேலியர்களுக்கு கைவந்த கலை. இது
நம்மவர்களுக்கு பொருந்தாது. வீணாக ஆஸ்திரேலியர்களை வெறுப்பேற்றியது சரியல்ல!
ஆடத்தெரியாத ரோகித்சர்மா இப்படி வாய் ஆடியது கிரிக்கெட் ஜெண்டில்மேன் கேம் என்று
சொல்வதை கேவலப்படுத்திவிட்டது. கொஞ்சம் கூட போராடத் தெரியாத ஒரு செத்தப்
பாம்பாகத்தான் இந்திய அணி தோனி வழிநடத்துதலில் தென்பட்டது. இதில் ஆடுகளம்
சரியில்லை! உணவு சரியில்லை என்பதெல்லாம் வெறும் சப்பைக் கட்டு! டோனி உங்க ஆட்டம்
சரியில்லை என்பதுதான் என்னோட தீர்ப்பு!
கிச்சன் கார்னர்!
வடகறி என்றாலே வாசனை மூக்கைத்துளைக்கும்!
நாவில் நீர் சுரக்கும். இந்த வடகறியை நான் முதலில் சுவைத்தது பெரும்பேடு
கிராமத்தில் தாமோதர ஐயர் ஓட்டலில்தான். ஒரு கிருத்திகை சமயம் தாத்தா இட்லிக்கு
வடகறி வாங்கித்தந்து சுவைத்தபின் அதன் ரசிகன் ஆகிவிட்டேன். பின்பு பலமுறை இந்த
உணவை சாப்பிட்டும் அந்த டேஸ்ட் வருவது இல்லை! இதோ இன்று ஒரு வடகறி பகிர்வு. தி.
இந்துவில் படித்தது.
கருணைக்கிழங்கு வடைகறி
தேவையானவை: கருணைக்கிழங்கு 200கிராம்,
பொடியாக நறுக்கிய பூண்டு 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன், பொட்டுக்கடலை 8 டீஸ்பூன்,
பெருங்காயம் 1 சிட்டிகை, பொடியாக நறுக்கிய மல்லித்தழை சிறிது, உப்பு, எண்ணெய்,
தேவையான அளவு, தக்காளி, வெங்காயம் தலா 1, பச்சைமிளகாய் 2, தேங்காய்ப்பால் 1கப்,
உப்பு தேவையான அளவு.
செய்முறை:
கருணைக்கிழங்கை தோல் சீவி,
துருவிக்கொள்ளவும். பொட்டுகடலையை ரவைபொல உடைத்துக் கொள்ளவும். துருவிய
கருணைக்கிழங்கை உடைத்தபொட்டுக்கடலை, மிளகாய்த்தூள் பெருங்காயம் பூண்டு இவற்றுடன்
தேவையான உப்பு சேர்த்து பிசையவும். இதை சிறு சிறு வடைகளாக தட்டி சூடான எண்ணெயில்
பொட்டு பொரித்தெடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக
நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய், பூண்டு தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
பிறகு தேவையான அளவு உப்பு தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் உதிர்ந்த
வடைகளை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். சுவையான வடைகறி ரெடி!
பகிர்ந்தவர் மவுலிவாக்கம்
ராஜகுமாரி, நன்றி: தி இந்து, தமிழ்நாளிதழ்.
டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!
விடாமல் வரும் தும்மலை
கட்டுப்படுத்த மிளகை தூள் செய்து இலேசாக நெருப்பில் தூவி அதில் இருந்து வரும்
புகையை சுவாசிக்க தும்மல் நின்றுவிடும்.
ரேசன் கோதுமை பில்ஸ்பெரி
கோதுமை மாவுபோல மெத்தென்று இருக்க வேண்டுமா? கோதுமையை கழுவி உலர்த்தி புடைத்து
அதனுடன் கிலொவிற்கு 100 கிராம் வெள்ளை மூக்கடலை சேர்த்து அரையுங்கள் சப்பாத்தி
செய்தால் மெத்தென்று இருக்கும்.
தண்ணீரில் செல்போன்
விழுந்துவிட்டால் உடனே பேட்டரியை கழற்றி வெயிலில் வைப்பதொடு செல்போனை ஹேர் டிரையர்
மூலம் சுத்தம் செய்தால் ஈரம் விரைவில் காய்ந்து பழுதடையாமல் இருக்கும்.
பல் துலக்கும் பிரஷ்ஷை வாரம்
ஒரு முறை உப்பு கலந்த சுடுநீரில் அலம்பி வைத்தால் சுத்தமாகவும் சுகாதாரமாகவும்
இருக்கும்.
உடல் பருமன் குறைய வேண்டுமா?
தினமும் உணவில் கீரைத்தண்டு, வாழைத்தண்டு,
முள்ளங்கி, அவரைக்காய், கொள்ளு என மாற்றி மாற்றி சேர்த்துக் கொள்ளுங்கள். விரைவில்
பலன் தெரியும்.
கசகசாவை முதல் நாளே ஊறவைத்து
மறுநாள் தேங்காய்ப்பால் விட்டு அரைத்து விழுதை வேர்க்குரு உள்ள இடங்களில் தடவி வர
வேர்க்குரு மறையும்.
கொடுக்கலாமா பாரதரத்னா!
ஒவ்வொரு வருடமும் பாரத ரத்னா விருது அறிவிப்பதும் சர்ச்சைகள் உருவாவதும் தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. இந்தியாவின் உயரிய விருதின் கவுரவம் அரசியல் வியாதிகளால் கொஞ்சம் கொஞ்சமாக கலைக்கப்பட்டு வருகிறது. சென்ற வருடம் டெண்டுல்கருக்கு கொடுத்து காங்கிரஸ் வாங்கிக் கட்டிக்கொண்டது. இந்த வருடம் வாஜ்பேயிக்கு அறிவித்து பி.ஜே.பி சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ளது. வாஜ்பேயி நல்லவர்தான். அனைவரும் மதிக்கும் தலைவர்தான். சிறந்த கவிஞர், பாராளுமன்றவாதி, அரசியல் தலைவர், இந்தியாவின் முன்னாள் பிரதமர் இப்படி எல்லாம் இருந்தும் ஏதொ ஒன்று இடிக்கிறது அவருக்கு ரத்னா பட்டம் தர.அது அவர் மீது பூசப்பட்டு இருக்கும் மதச் சாயம். பி.ஜே.பி யில் இருப்பதால் இவருக்கு தரலாமா? என்று கேட்கிறார்கள். என்னைக் கேட்டால் வருடத்திற்கு மூன்று என்பதை ஐந்தாக்கி கட்சி பேதம் இல்லாமல் ஆளுங்கட்சிக்கு இத்தனை, எதிர்கட்சிகளுக்கு இத்தனை என்று கொடுத்துவிடலாம். ஐந்து என்ன பத்து கூட தேவைக்கேற்ப உருவாக்கி கொள்ளலாம். காசா பணமா விருதுதானே! போனால் போகிறது. இதில் இன்னொரு விஷயம் தெரியுமா? உயர்ந்த விருதுன்னு பேரே தவிர இதனால் பணப்பலன் எதுவும் கிடையாது வெறும் கவுரவம்தான்! இதுக்குத்தான் இத்தனை அக்கப்போர்!
பதிவர் அறிமுகம்:
யாதவன் நம்பி. குழல் இன்னிசை என்ற வலைப்பூவில் எழுதிவருகிறார்
இவர். இயற்பெயர் புதுவை வேலு என்று நினைக்கிறேன்! கவிதைகளுடன் உலகில்
கடைபிடிக்கப்படும் பல்வேறு தினங்களை பற்றியும் எழுதுகின்றார். பிரான்சில் இருந்து
எழுதுகிறார் இவர். குழல் இன்னிசை
படிச்சதில் பிடிச்சது
சிரிக்க மட்டும்..!
ஏர்டெல் நிறுவனர் இறைவனை நோக்கி கடும் தவம் புரிந்தார்,
அவரது தவத்தின் பயனாக கடவுள் அவர் முன் தோன்றி "உனக்கு 10 வாய்ப்புகள்,அந்த 10 முறையும் நீ நினைப்பது நடக்கும்" என்று அருளினார்.
அவரது தவத்தின் பயனாக கடவுள் அவர் முன் தோன்றி "உனக்கு 10 வாய்ப்புகள்,அந்த 10 முறையும் நீ நினைப்பது நடக்கும்" என்று அருளினார்.
பாபா ரஜினி போல் முதலில் இதில் முழு நம்பிக்கை இல்லாத ஏர்டெல் நிறுவனர், 'அந்த பட்டம் தன் கைக்கு வர வேண்டும், அந்த பெண் வந்து தன்னுடன் பேச வேண்டும்' போன்ற சிறு சிறு விசயங்களை சோதித்து 6 வாய்ப்புகளை வீணடித்தார்.
வரத்தின் மீது நம்பிக்கை வந்தது,7வது வரமாக தன் போட்டி நிறுவனமான வோடபோன் நிறுவனர் சிறைக்கு செல்ல வேண்டினார். அதே போல் வோடபோன் நிறுவனர் ஒரு மோசடி வழக்கில் சிறை சென்றார்.
மகிழ்ச்சியடைந்த அவர் மீதமுள்ள 3 வரங்களை தெளிவாக பயன்படுத்த திட்டமிட்டார். அவற்றை பயன்படுத்த தான் உயிரோடு இருப்பது அவசியம் என்பதால் முதல் வரமாக "எனக்கு மரணம் வரக்கூடாது" என்று கேட்ட போதே கார் விபத்தில் சிக்கி அவர் மரணமடைந்தார்.
நேரே கோவத்துடன் கடவுளிடம் சென்ற அவர்,"10 வாய்ப்புகள் தருவதாக சொல்லி 7 வாய்ப்புகள் தான் தந்தாய், 8வது வாய்ப்பை பயன்படுத்தியும் பலிக்காமல் நான் இறந்துவிட்டேன். நீ ஒரு ஏமாற்றுக்காரன்" என்றார்.
கடவுள் பொறுமையாக,"நீ மட்டும் 10 ரூபாய்க்கு கார்டு போட்டா 7 ரூபாய்க்கு தான பேச விடுற..?
கடவுள் பொறுமையாக,"நீ மட்டும் 10 ரூபாய்க்கு கார்டு போட்டா 7 ரூபாய்க்கு தான பேச விடுற..?
"அது மாதிரி தான் இதுவும் 3 வரம் சர்விஸ் சார்ஜ்"
யாரங்கே இவனை நரகத்தில் தள்ளுங்கள்" என்றார். தன் பாவத்தை உணர்ந்தார் ஏர்டெல் நிறுவனர்.......
யாரங்கே இவனை நரகத்தில் தள்ளுங்கள்" என்றார். தன் பாவத்தை உணர்ந்தார் ஏர்டெல் நிறுவனர்.......
( ரிலாக்ஸ் ப்ளீஸ் முகநூல் குழுமத்தில் படித்தது)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்தவும்! நன்றி!
இயற்கையோடு கலந்தவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்
ReplyDeleteகூத்த பிரான் அவர்களின் கணீர் குரல் இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது !
ReplyDeleteபதிவு முழுக்க சுவராஷ்யமான தகவல்கள்.
ReplyDeleteஒருத்தர் செத்த பின்னாடியும் ஓட்டுறாங்கன்னா அவங்க செயல்பாடு அப்படி.
பாரத ரத்னா??!! ஹெ ............ஹே ...........
தமிழக பா ஜ காவுக்கு ரஜினியை இழுக்க முயற்சி பண்றாங்க போலிருக்கு!!
இந்தியா டீமுக்கு இந்திய பிட்ச் தயார் பன்றவனுன்களே எல்லா இடத்திலும் தயார் செய்யணும். இப்போதொதைக்கு இவனுங்க ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அப்படின்னு எங்க போனாலும் உதை தான் வாங்குவானுங்க.
வடகறி முயற்சி பண்றோம்!!
வீட்டுக் குறிப்புகளும் அருமை. Thanks..............
வணக்கம் தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது ...
ReplyDeleteவாழ்த்துக்கள்
அறிமுகம் செய்தவர் குருநாதசுந்தரம்
link is here click now!
அனைத்தும் அருமை...
ReplyDeleteஅரசியல் வியாதிகள், விருது கொடுப்பதில் இருக்கும் போட்டி மனப்பான்மையை நல்ல செயல் செய்து விருது வாங்குவதில் காட்டினால் நன்றாக இருக்கும் இல்லையா....?
ReplyDeleteபூட்டு எங்க ஊருக்கு பெயர் போனது அது போலவே எங்கள் பதிவர் குழுவும் உறுப்பினர்களும் எங்களுக்கு நாங்களே பூட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறோம்.அவதூறாக எழுதுவது இல்லை,பெண்களை இழிவு படுத்தும் பதிவுகளை எழுதுவதே இல்லை என்று .
ReplyDeleteதமிழ் பதிவு எழுதினால் அதில் திராவிட சாயம் இருக்க வேண்டும் அப்போது தான் அருமையான நடுநிலையான கருத்து சார் என்ற சப்பைக் கமண்ட்ஸ் கிடைக்கும் என்று எழுதினால் அல்பமாக தான் எழுத வரும். அதென்ன மார்கழி மரனம் அசட்டுத்தனத்துக்கு அளவே இல்லையா ? அஞ்சலி தனிப் பதிவாக வரவேண்டும் என்பது அடிப்படை மரபு. பதிவிற்கு கீழே பார்த்தால் சின்னத் திரை இயக்குனரின் சில்மிஷங்கள் என்று உம்ம கெளரவத்தை நீரே மட்டையாக்கி வைத்திருக்கிறீர் , அரசியல்வாதிகள் அசிங்கமாம், சொல்றதுக்கு முன்னால் தான் எப்படி இருக்கிறோம் என்று பார்க்கனும் அப்பு. பைரேட்டட் சாப்ட்வேர் இருக்கு யாராவது கீ தந்து ஹெல்ப் பன்னவும் என்று திருட்டுத் தனத்தை வெளிப்படையா சொல்வாராம்.அது சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றம் அய்யா. ஆனால் அரசியல் வாதி மட்டும் அடக்கமா நேர்மையா இருக்கவேண்டுமாம். அரசியல் வாதியும் நேர்மையை துச்சமாக மதிக்கும் சமூகத்தில் இருந்து தான் வருகிறார்கள் அதனால் கசடாக தான் இருப்பார்கள். நடிகைகளை கேவலமாக எழுதுவதை நிறுத்துங்கள் முதலில். சாரிட்டி ஸ்டார்ஸ் ஃப்ரம் ஹோம் என்ற ப்ரேஸ் இருக்கிறது தெரியுமா?
மூஞ்சைக் கழுவிட்டு பதிவு எழுதுங்க எழுத்தாளார் சார் ?!
அடைக்கலசாமி.
கதம்பம் மணத்தது.
ReplyDeleteகதம்பம் கலக்கல்....
ReplyDeleteகதம்பச் சாதம் ருசியாக இருக்கிறது.
ReplyDeleteஅதிலும் வடகறி சூப்பர்.
இந்தியாவில் தான் இப்படி"10 ரூபாய்க்கு கார்டு போட்டா 7 ரூபாய்க்கு பேசுறது".
எனக்கு இந்த கான்செப்ட்டே பெரிய எரிச்சலாக இருக்கும்.
அன்பு நண்பர் "தளீர் சுரேஷ்" அவர்களின் எண்ணங்கள் இங்கு எழுத்தோவியமாகி
ReplyDeleteஇருப்பதை நண்பர் கில்லர்ஜி மூலம் அறியப் பெற்றேன்! அவரது எண்ணத்தில் என்னையும் எழுதோவியமாக வரைந்து இருப்பதை!
நன்றி நண்பரே!
தங்கள் எண்ணத்தில் குழலின்னிசையும் இருப்பது மிக்க மகிழ்ச்சி!
உழைக்க வேண்டும்!
மேலும்
உழைக்க வேண்டும்!
உயர் கருத்தை உலகிற்கு
உணர்த்த வேண்டும்
இக்கருத்தை இன்று எனக்குள் விதைத்தாய் நண்பா!
நன்றி!
புதுவை வேலு
கதம்ப சோறு முதல் மூன்று பேரைப் பற்றிய செய்தியைத் தவிர நல்ல ருசி! அது மரணத்தைப் பற்றியதால்....ஆன்மா சாந்தியடையட்டும். வடகறி செய்வதுண்டு ஆனால் இது புதிது.
ReplyDeleteஏர்டெல் பற்றியது சிரிக்க மட்டும் இல்ல பாஸ் சிந்திக்கவும் வைத்தது. அருமை!