கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 25

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 25

 1. மன்னருக்கு இவ்வுலக வாழ்க்கை அலுத்துவிட்டது என்று எவ்வாறு சொல்கிறாய்?
    பின்னே போருக்கு அழைப்பு விடுக்கிறாரே!

 1. அந்த டாக்டர் போலி டாக்டர்னு எப்படி கண்டு பிடிச்சே?
     காலிலே ஆணின்னு போனா பிடுங்க கொறடா எடுத்துவரேன்னு சொல்றாரே!

 1. தலைவர் ஒவ்வொரு அடியையும் கவனமாத்தான் எடுத்து வைப்பாரு!
அதுக்காக மேடையேறதுக்கு கூட அடிஅடியா  அரைமணிநேரம் நடந்துவரது கொஞ்சம் கூட நல்லா இல்லே!

4. ஒரு கழுதை கூட குடித்தனம் நடத்தறேன்னு இன்னிக்குத்தான் தெரிஞ்சது…!
     டூ லேட்! நீங்க பொண்ணு பாக்க வரப்பவே ஒரு கழுதைக்குத்தான் வாக்கபடறேன்னு எனக்கு புரிஞ்சுப்போச்சு!


5.      கோடீஸ்வரனானா இவருக்கு பெரிய சினிமா தயாரிப்பாளர் ஆவனும்னு ரொம்ப நாளாவே ஒரு ஆசை!
     பிச்சை எடுக்கணும்னு அவர் ஜாதகத்துல எழுதி இருந்தா யாரால மாத்தமுடியும் விடுங்க!

6.      போலீஸ் ஏட்டு வீட்டுல எதுக்கு கன்னம் வச்சே?
அவருதான் சார் என் பேரு பேப்பர்ல வர மாதிரி ஒரு காரியம் பண்ணனும் சொல்லிக்கிட்டு இருந்தாரு அதான்!


7.      மன்னர் எதற்கு அடிக்கடி ராப்பிச்சை வேடத்தில் நகர்வலம் செல்கிறார்?
அரண்மனை சாப்பாடு சாப்பிட்டு நாக்கு அலுத்துவிட்டதாம்! விதவிதமான சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்கத்தான்!

8.      ஒட்டுமொத்த சீரியலையும் இந்த கதாபாத்திரம்தான் தூக்கி நிற்குது!
அப்ப அந்த கேரக்டர் பயில்வான்னு சொல்லுங்க!

9.      மன்னருக்கு பறவைக் காய்ச்சல் வரப்போகிறது என்று எப்படிச் சொல்கிறாய்?
எதிரி மன்னன் புறா மூலம் தூது அனுப்பி இருக்கிறானே!


10.  வாயில் காப்போனை மன்னர் வேலையைவிட்டு நிறுத்திவிட்டாராமே ஏன்?
    பராக் சொல்லாமல் பராக்கு பார்த்துக்கொண்டு நின்றானாம்!

11.  ஒரு கட்டிங் போட்டுட்டு வண்டி எடுத்ததும் காத்துட்டு இருந்த மாதிரி போலிஸ் பிடிச்சிருச்சு!
அப்புறம்?
ஒரு கட்டிங்க் கொடுத்ததும் வாங்கிட்டு விட்டுட்டாங்க!

12.  தலைவருக்கு பொது அறிவு கம்மின்னு எப்படி சொல்றே?
    இவரு நம்ம சிட்டிங் எம்.எல்.ஏ அப்படின்னு அறிமுகப்படுத்தி வச்சா சிட்டிங் எம்.எல்.ஏன்னு சொல்றே நிந்துட்டே இருக்காரேன்னு கேக்கறாரு!

13.  தலைவரை வசமா கொக்கிப் போட்டு இழுத்து மாட்ட வச்சிட்டாங்களா எப்படி?
பொதுக்கூட்டத்துக்கு மின்சாரத்தை கொக்கிப்போட்டு இழுத்தாருன்னு அரெஸ்ட் பண்ணியிருக்காங்களே!


14.  அந்த பாடகர் பாட ஆரம்பிச்சதும் நிறைஞ்சிருச்சு!
    என்னது சபாவா?
 ஊகும் கேண்டீன்..!

15.  அந்த பாடகர் உச்சஸ்தாயியிலே பாட ஆரம்பிச்சதும்தான் சபாவே கலகலத்தது..
அவ்ளோ ஐக்கியமாயிட்டாளா..!
நீ வேற தூங்கிட்டிருந்தவா எல்லோரும் முழிச்சிக்கிட்டான்னு சொல்ல வந்தேன்!

16.  யாருமில்லாத சபையை எதுக்கு தலைவர் விழுந்து கும்பிடறார்?
சபை மரியாதை தெரியாதவர்னு யாரும் சொல்லிடக் கூடாதாம்!

17.  மரியாதை நிமித்தமா கவர்னரை சந்திச்சேன்னு தலைவர் சொல்றாரே என்ன விஷயம்?
பொங்கல் மரியாதை கேட்டாராம்!

18.  உப்பு சப்பு இல்லாத விஷயத்துக்கெல்லாம் விவாகரத்து கேட்கலாமாம்மா?
பின்ன என்ன வக்கீல்சார்? இவர் மாசம் முழுக்க உப்பில்லாம சப்புன்னு சமைச்சு போட்டா யாரு சாப்பிடறது!

19.  இந்த ஆபரேஷன்ல நல்ல படியா பொழைச்சி வந்தா நான் இந்த டாக்டரை  தெய்வமா கும்பிடுவேன்!
    நீ  தெய்வமா கும்பிடறது இருக்கட்டும்! உன்னை தெய்வமா மத்தவங்க கும்பிட பண்ணிட போறாரு டாக்டர்!

20. மன்னர் ரகசியமாக மானாட மயிலாட பார்ப்பது ராணியாருக்குத் தெரிந்துவிட்டது!
   அப்புறம்!
அப்புறம் என்ன? மன்னரின் டப்பா டான்ஸ் ஆடிவிட்டது!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

 1. அருமையான நகைச்சுவைகள். அதற்கேற்ற படங்கள். சிட்டிங் எம் எல் ஏ நகைச்சுவை நிற்க வைத்துவிட்டது.

  ReplyDelete
 2. ரசித்தேன்
  சிரித்தேன்
  நண்பரே
  நன்றி

  ReplyDelete
 3. வணக்கம்
  நகைச்சுவை எல்லாம் இரசித்தேன். பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. நகைச்வை சுவை...சகோ

  ReplyDelete
 5. சான்ஷே இள்ள சார் என்னா களக்கு கள்க்குரீங்க. சூப்பர் ஜோக்ஸ் அதிளும் கனவன் மனைவி ஜோக் வெரி நைஷ்

  ReplyDelete
 6. சிரிக்க வைப்பது என்பது ஒரு தனிக் கலை
  அந்த கலையைக் கொண்டு மெரினா பீச் சிலை மனிதரையும் சிரிக்க
  வைக்கும் மிகச் சிறந்த ஜோக்ஸ்!
  வாழ்த்துக்கள்!
  அதிலும் சிச்சுவேஷன் ஜோக்ஸ் அருமை!
  மார்கழி மாதத்து மகா சிரிப்பு!
  அன்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. அனைத்தும் அருமை. அதிலும் 4வது சூப்பர்

   Delete
 8. கேரக்டர் பயில்வான் உட்பட அனைத்தும் ஹா... ஹா...

  ReplyDelete
 9. அனைத்தையும் ரசித்தேன் ,கட்டிங்குக்கு கட்டிங் சூப்பர் :)

  ReplyDelete
 10. அனைத்தையும் ரசித்தேன் ,கட்டிங்குக்கு கட்டிங் சூப்பர் :)

  ReplyDelete
 11. நன்பா காளையில் ஒரு முரை வந்து படித்து விட்டு விலுந்து விலுந்து சிறித்த்தேன். ஒவ்வொன்ரும் சிந்தனைய தீண்டும் சிங்கார வன்னமிகு வார்த்தைக் கழவை கொண்ட வசந்த ஆபரனமான் ஜோக் குகள். அத்தனை துரையிலும் நீ வெள்கிராய் நன்பா.

  பரமு சிவசாமி

  ReplyDelete
 12. நன்பா, பிஞ்சுக் கொலந்தைகலுக்கு அஞ்சளி கவிதை எலுதுங்கலேன். ஏன் தான் இப்படி துற்பாக்கியமான நிகல்வுகல் நடக்கின்றனவோ ? நென்சு பொருக்குதிள்ளையே இந்த பொருக்கிகலை நினைத்தாள்.

  பரமு சிவசாமி

  ReplyDelete
 13. அனைத்தையும் ரசித்து சிரித்தோம் நண்பரே!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2