தளிர் சென்ரியு கவிதைகள்! பகுதி 11
தளிர்
சென்ரியு கவிதைகள்! பகுதி 11
கரைகள்
மாற்றம்
கறைபட்டது
நற்பெயர்!
நாற்றத்தில் கலந்தது
நறுமணம்!
காங்கிரஸில் குஷ்பூ!
வீங்கிப்
போன பொருளாதாரம்!
ஒட்டிப்போனது
ஏழையின்
வயிறு!
நிரம்பிக்
கொண்டிருந்தது
நிறையவில்லை!
உணவுவிடுதி!
கறை
நல்லதுதான்!
சோப்புக்
கம்பெனிக்கு!
ஒளிந்து
விளையாடுகையில்
ஒளியிழக்கிறது
தொழில்கள்!
மின்சாரம்!
மரணங்களால்
மரணித்தன
பள்ளிக்கூடங்கள்!
சுமையாகும்
கல்வி!
அழுத்தத்தில்
மாணவர்கள்!
விலையில்லா
பொருட்கள்
வீடுதோறும்!
விற்பனைக்குவந்தது
குடிநீர்!
கட்டண தரிசனம்!
நிர்ணயிக்கப்படுகிறது
கடவுள் அருள்!
விலைகொடுத்து
வாங்கப்படுகிறது
கடவுள் தரிசனம்!
கரை சேர்க்குமுன்னே
கரைத்துவிடுகின்றன!
மருத்துவமனைகள்!
மரங்கள் மரணம்!
மடியில் அழுதன எழுதுகோல்கள்!
காகிதம்!
சாலைகளுக்கு வழிவிட
சாய்ந்தன
மரங்கள்!
மறைந்து கொண்ட மழை!
உறைந்து போனது
விவசாயம்!
மனைகளைபிரசவித்தன வயல்கள்
மரணித்தது
விவசாயம்!
குடி உயர
கோன் உயருகிறது!
டாஸ்மாக்!
அழுத பிள்ளையிடம்
பால் குடிக்கின்றன!
மருத்துவமனைகள்!
வினையான விளையாட்டு!
விலைபோனது உயிர்!
பிலிப் ஹ்யூஸ்!
தாயின் மடியில் கொலை!
தறுதலையான பிள்ளையால்வேதனை!
தவிக்கும் கல்வித்துறை!
அங்காடியான கோயில்கள்!
விலைபேச அலைமோதும்
மக்கள்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்தவும் நன்றி!
அனைத்தும் மிக அருமை....பேசாம இதையெல்லாம் சுட்டு என் தளத்தில் போடலாம் என நினைக்கிறேன்
ReplyDeleteநன்றி நண்பரே! ஏற்கனவே நிறைய பேர் சுட்டுக்கிட்டு இருக்காங்க! நீங்க சுடுறதில் ஆட்சேபனையே இல்லை!
Deleteஅருமையான கருத்துக்களுடன் கவிதை வாழ்த்துகள்
ReplyDeleteவழமை போல இம்முறையும் அத்தனையும் அருமை!
ReplyDeleteகட்டண தரிசனம்!
நிர்ணயிக்கப்படுகிறது
கடவுள் அருள்!//
இதுவும் இப்படியாயிற்றே என வருந்தியது மனம்!
அருமை! வாழ்த்துக்கள் சகோதரரே!
அனைத்துமே இன்றைய வாழ்வியல் யதார்த்தங்கள்
ReplyDeleteநன்றி நண்பரே
அனைத்துமே அருமை... பாராட்டுகள் சுரேஷ்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteகவிதையின் வரிகள் முகத்திரையை கழிக்கும் வரிகள்.. சொல்லவேண்டிய விடயத்தை மிக தெளிவாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் சகோதரர்
ReplyDeleteஅனைத்து அருமை. அதிலும்
ஒளிந்து விளையாடுகையில்
ஒளியிழக்கிறது தொழில்கள்!
மின்சாரம்! // அழகான சிந்தனை.
குடி உயர
ReplyDeleteகோன் உயருகிறது!
டாஸ்மாக்! // நிதர்சனமான உண்மை. சம்பந்தப்பட்டவர்களுக்கு சரியான குட்டு.
சமூக அவலங்கள் பலவற்றைக் காட்சிப் படுத்தியிருக்கிறது தங்களின் வரிகள் ஒவ்வொன்றும். வித்தியாசமான சிந்தனை. சமூகம் அறிந்து கொள்ள மற்றும் சிந்திக்க வேண்டிய விசயங்களைத் தாங்கிய பதிவுக்கு நன்றிகள்..
ReplyDeleteசோப்புக் கம்பெனிக்கு உட்பட அனைத்தும் அருமை... உண்மை...
ReplyDeleteஅனைத்தும் அருமை சுரேஷ். அதிலும்
ReplyDeleteகுடி உயர
கோன் உயருகிறது!
டாஸ்மாக்!
மிக மிக அருமை. வாழ்த்துக்கள்.
காங்கிரசில் குஷ்பூ ....அருமை !இவங்க எதுக்கு ஆளில்லா கடையில் டீ ஆற்ற நினைச்சாங்களோ தெரியலே !
ReplyDeleteஒவ்வொரு வரியும் அருமை.
ReplyDeleteaஅனைத்தும் நன்று. சில மிக சிறப்பாக இருக்கின்றன.
ReplyDeleteஆஹா அனைத்துமே அருமை! அதுவும் ஓப்பனிங்கே செம! கலக்கறீன்ங்க! சுரேஷ்!
ReplyDelete