தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

1.மறைந்து முத்தம்
 காட்டிக்கொடுக்கின்றன கால்கள்!  
 ஆற்றுமீன்கள்!

2.கரையக்கரைய
 வெளுக்கிறது பூமியின் அழுக்கு!
 மேகம்!

3.எதிரியின் ஊடுறவல்
 ஆட்டம்கண்டது உடல்!
 குளிர்!

4.சலித்தது
 மிஞ்சவில்லை நீர்!
 மேகங்கள்!

5.குளத்தில் இறங்கி குளித்தாலும்
 வாடிக்கொண்டிருந்தது
 மரங்கள்!

6.நனைந்த மரங்களை
 துவட்டி விட்டது காற்று!
 மழை!

7.அருகில் இருந்தும்
 தூர நிறுத்துகிறது!
 எண்ணங்கள்!
 
8.ஒளிக்குப் பின்னே
 ஒளிந்துகொண்டது இருட்டு!
 விளக்கு!

9.ஈரத்தடங்கள்!
 எளிதாய் அழித்தது
 காற்று!

10.கைகொடுத்தவனை
 கழற்றிவிட்டார்கள்!
 துணிக்கிளிப்புகள்!

11.காற்றுவிரட்டுகையில்
 பூமியிடம் அடைக்கலமாகின்றன
 பூக்கள்!

12.அழுத்தம் அதிகமானதும்
  வெடித்தது மேகம்!
  மழை!

13.தாயான குழந்தைமடியில்
  சுகமாய் உறங்குகின்றது
  பொம்மை!

14.காணாமல்போன சூரியன்!
  கதறி அழுதது வானம்!
   மழை!

15.பிடித்தவர்களிடம்
  பிடித்துப்பார்க்கிறது குழந்தை!
  அடம்!

16.படிக்காமலேயே நிறையக்
  கற்றுக்கொடுக்கிறது
  குழந்தைகள்!

17.குளிரெடுத்த பூமி!
  போர்த்திக்கொண்டது
  பச்சைப்போர்வை!

18.வாட்டி வதக்கினாலும்
  ருசிக்கவில்லை!
   மார்கழிப்பனி!

 19.புதைத்துக்கொண்டன
   குழந்தைகளிடம்
   கற்பனை சுரங்கங்கள்!

 20.சுவற்றுக்கும்
    முகவரி தந்தன
    குழந்தைகள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. 18.... உண்மை!

    எல்லாமே அருமை.

    ReplyDelete
  2. அனைத்துமே அருமை நண்பரே ஹைக்கூ எல்லாமே...... ஹைலெவல், டாப் 10

    ReplyDelete
  3. அனைத்தும் அருமை
    குறிப்பாக
    //பிடித்தவர்களிடம்
    பிடித்துப்பார்க்கிறது குழந்தை!
    அடம்!//
    //சுவற்றுக்கும்
    முகவரி தந்தன
    குழந்தைகள்!//
    இரண்டும் அட்டகாசம்

    ReplyDelete
  4. அனைத்துமே அழகிய,
    அருங்கருத்துக்களை உள்ளடக்கிய
    உயர்ந்த கவிதைத் துளிகள்!
    குறிப்பாக...

    சுவற்றுக்கும்
    முகவரி தந்தன
    குழந்தைகள்!- அருமை

    குழலின்னிசைக்கு
    முகவரி தந்தன
    "தளீர்" வலைப் பூ - பெருமை

    நன்றியுடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  5. அனைத்தும் அருமை. அதுவும்

    "//ஒளிக்குப் பின்னே
    ஒளிந்துகொண்டது இருட்டு!
    விளக்கு!

    தாயான குழந்தைமடியில்
    சுகமாய் உறங்குகின்றது
    பொம்மை!//"

    சூப்பர். குழந்தைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. குளத்தில் இறங்கி குளித்தாலும் வாடிக்கொண்டிருக்கிறது மரங்கள்.. அருமை.
    வாட்டிவதக்கினாலும் ருசிக்கவில்லை மார்கழிப்பனி.. செம..
    ஈரத்தடங்கள் எளிதாய் அழித்தது காற்று.. எல்லாமே அருமை.

    ReplyDelete
  7. அருகில் இருந்தும் தூர நிறுத்தும் எண்ணங்கள் கவிதை மட்டுமல்ல. உண்மையும்கூட. சிறிய கவிதைகளில் பெரிய கருத்துக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. ரசித்தேன்...

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. அனைத்துமே அ;ருமை சுரேஷ்! கலக்குகின்றீர்கள்!

    ReplyDelete
  10. எனக்குக் கவிதையே வராது. அதிலும் ஹைக்கூ சுத்தம்....! இவற்றைப்படிக்கும் போது புதிர் மாதிரி கேள்வி கேட்பதும் வரும்பதிலும் ஹைக்கூ என்று கருதப் படுமா.என்று தெரிந்து கொள்ளத் தூண்டுகிறது

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2