சனிப்பெயர்ச்சி!
சனிப்பெயர்ச்சி!
உலகமே
கிரகங்களால் ஆளப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு
குணம் உண்டு. அது சஞ்சரிக்கும் ராசி காலத்தை பொருத்து பலன்கள் கணிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு கிரகமும் பெயர்ச்சி அடைந்தாலும் சனி, ராகு-கேது, குருப் பெயர்ச்சி மட்டுமே
பெரிதாக கவனிக்கப்படுகிறது. அதிலும் சனிப்பெயர்ச்சி மட்டும் பெரிதும் விஷேசமாகச்
சொல்லப்படுகிறது.
சனியை மந்த காரகன், மந்தன், என்றெல்லாம்
சொல்வார்கள். அதற்கேற்ப சனியானது ஒரு ராசியில் இரண்டரை வருடங்கள் இருக்கின்றது.
இப்படி பன்னிரண்டு ராசிகளையும் சுற்றி வர முப்பது வருடங்கள் எடுத்துகொள்கிறது. ஒரு
ஜாதகருக்கு பூரண ஆயுள் இருப்பின் அவரது ராசியில் மூன்று முறை சனி சுற்றி வரும்.
இதை முதல் 30 வருடம் மங்கு சனி, அடுத்தது பொங்கு சனி, கடைசி 30 போக்கு சனி என்பர்.
பொதுவாக சனியை பற்றி தீமையாக சொன்னாலும் அது
நமக்கு நன்மையே செய்கின்றது. பள்ளியில் பாடம் நடத்தும் ஆசிரியர் நல்லது சொல்வது
மாணவனுக்கு பிடிக்காது. வாத்தியாரை குறை சொல்வான். அவர் கெட்டவர் என்பது போல
பேசுவான். ஆனால் ஆசிரியர் மாணவனின் நன்மைக்கே இப்படி கண்டிப்பாக நடந்து
கொள்கிறார். அதே போலத்தான் சனிபகவானும் அவரது பெயர்ச்சியில் ஏழரைசனி, அஷ்டமசனி, அர்த்தாஷ்டம சனி,கண்ட சனி
என்று சில இடங்களில் நமக்கு துன்பத்தை கொடுத்து நம்மை நல்வழிப்படுத்துகிறார்.
தீயவழிக்கு செலுத்தினாலும் அதனால் ஏற்படும் விளைவுகளை உணர்த்தி நம்மை நல்லவழிக்கு
திருப்புகின்றார்.
பகுத்தறிவாளர்கள் இந்த பெயர்ச்சி பற்றி
எல்லாம் கவலைப்படுவது இல்லை! மனம் சொல்வதை செய்வார்கள். சிலர் அதையும் ஆராய்ந்து
செயல்படுவார்கள். அவர்களுக்கு எங்கு எதில் சனி இருந்தாலும் கவலை இல்லை. துன்பமும்
இன்பமும் நாமே உருவாக்கிக் கொள்வது என்பது அவர்களின் சித்தாந்தம்.
ஆனாலும் துன்பம் எப்படி வருகிறது என்று
ஆராயும் போது சில கிரகங்கள் சில இடங்களில் அமர்ந்தால் சில கிரகங்களை பார்த்தால்
இந்த பலன்கள் என்று ஜோதிடம் சொல்லுகின்றது. இவை நிரூபிக்கப்பட்டும் இருக்கின்றன.
மக்களிடையே இன்று ஆன்மீக விழிப்புணர்வு
ஏற்பட்டு வருகிறது. இடையில் மங்கியிருந்த ஆலயங்கள் ஒளிபெற்று புணரமைப்பு அடைந்து
வருகிறது. ஜோதிடம் போன்றவற்றின் மீதும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இத்தகைய
காரணங்களால் இன்று சனிப்பெயர்ச்சி பல ஆலயங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
புத்தகங்களிலும் இணையத்திலும் சனிப்பெயர்ச்சி பலன்கள் படிக்கப்படுகிறது. அதில்
சொல்லப்பட்ட பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. பல ஆலயங்களில் கூட்டம் நிரம்பி
வழிகின்றது.
ஆனாலும் இந்த சனிப்பெயர்ச்சி குறித்து
கவலைப்படுவதற்கு ஏதும் இல்லை! பலன்களில் நமக்கு சரியாக இல்லையே என்று
பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை! நமக்கு நல்ல பலன்கள் என்று சந்தோஷப்படுவதும்
தேவையில்லை! ஒரு கிரகம் ஒரு ராசியைவிட்டு மற்றொரு ராசிக்கு மாறியுள்ளது. அதற்கென
பொதுவான பலன்களே பத்திரிக்கைகளில் தரப்பட்டுள்ளது. உங்களின் ஜாதகம் தசாபுக்தி
அடிப்படையிலேயே விரிவான பலன்கள் கிடைக்கும். எனவே மகிழவோ பயப்படவோ ஒன்றும் இல்லை.
இன்று 16-12-14 மதியம் 2.34க்கு வாக்கிய
பஞ்சாங்கப்படி துலாம் ராசியில் இருந்து விருச்சிகத்திற்கு பெயர்ச்சி அடைந்துள்ளார்
சனி.
நல்ல
பலன்கள்: மிதுனம், கன்னி, மகரம்
மத்திம
பலன்கள்: கடகம், கும்பம், மீனம்.
கெடுபலன்கள்:
மேஷம், ரிஷபம், விருச்சிகம், தனுசு,சிம்மம், துலாம்
சனிப்பெயர்ச்சி
தினமான இன்று அருகில் உள்ள சிவாலயங்களுக்குச்சென்று சனிபகவான் சன்னதியில் எள்
தீபம் ஏற்றி வழிபடுதல் சிறப்பாகும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு
உதவுதல், காகத்திற்கு அன்னமிடல் முதியோர்களுக்கு உதவுதல் கெடுபலன்களை குறைக்கும்.
விநாயகர்,
ஆஞ்சநேயர் வழிபாடு, சனிகாயத்ரி ஜபம் போன்றவை கெடுபலன்களை குறைக்கும்.
கோளறுபதிகம்
படித்தல் கிரகங்களின் கெடுபலன்களை தவிர்க்கும்.
மொத்தத்தில்
இறைவழிபாடும், நம்பிக்கையும் நம்மை நல்வழியில் செலுத்தும்.
தங்கள்
வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்
ReplyDeleteநன்றி நண்பரே
நல்ல பகிர்வு சகோதரரே!
ReplyDeleteஅனைவருக்கும் நலமே அமையப் பிரார்த்திக்கின்றேன்!
நண்மையே விளையட்டும்
ReplyDeleteநல்ல பகிர்வு சகோதரரே... எல்லாருக்கும் சனி பகவான் நன்மை பயக்கட்டும்...
ReplyDeleteநல்ல பயன் தரும் பதிவு அருமை !
ReplyDeleteநல்லதொரு பதிவு
ReplyDeleteதுன்பம் வாழ்வை உணர வைக்கும்...
ReplyDelete