தளிர் ஹைக்கூ கவிதைகள்! 13

துள்ளி துள்ளி வந்து
தள்ளி தள்ளி போகின்றன
கடல் அலைகள்!

அழகான வீடு
அடித்து நொறுக்கப்பட்டது!
சிலந்தி வலை!
உடைத்து உடைத்து பேசினாலும்
உருகுது மனம்!
மழலை மொழி!

கடலில் மிதந்து கொண்டிருந்தது
கவின்மிகு நகரம்!
கப்பல்!

பேசும் மொழி மறந்து
விழி பேசியது!
காதல்!

முத்துக்கள் பூத்தன
முகத்தில்
உழைப்பு


விளக்கேற்றியதும்
அடியில் ஒளிந்து கொண்டது
இருட்டு!

ஈர உடையில் பூமி!
வெட்கி சிவந்த சூரியன்!
பனி!

நான்கு காலிருந்தும்
நடக்க மறுத்தது
நாற்காலி!
 

கண்ணாமூச்சி
ஆடியது கதிரவன்
மேகம்!

ஒளிந்து கொண்டதும்
வெளிச்சம் போட்டது மேகம்!
நிலவு!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2