கும்கி! மாமத யானை அல்ல!


கும்கி! மாமத யானை அல்ல!



இன்று என் இரு சக்கர வாகனத்தினை சர்வீஸ் செய்ய பொன்னேரி சென்றேன். சர்வீஸ் விட்ட பிறகு மூன்று மணிக்கு வந்து எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள். அப்போது 11 மணிதான். அதனால் தியேட்டருக்கு செல்லலாம் என்று நினைத்தேன். கௌரியில் நீதானே என் பொன்வசந்தம் சக்தி வேலில் ஒரு ஆங்கில படத்தின் தமிழாக்கம். வெற்றிவேலில் பார்த்தால் கும்கி.
   விமர்சனங்களை படிக்கும் போதே பார்க்கத்தோன்றிய படம்! பிரபு சாலமன் மைனாவில் மனசை இழுத்திருந்ததால் உள்ளே நுழைந்தேன். தியேட்டரே மாறி இருந்தது. பரவாயில்லை 30 ரூபாய்தான் டிக்கெட்.  சந்தோஷமாக உள்ளே நுழைந்தேன். ஏசி பெட்டிகள் வைத்திருந்தும் வேலை செய்யவில்லை! இருந்த ஒன்றிரண்டு  மின்விசிறிகளும் ஓடவில்லை! சேர்கள் ஓட்டை இத்தனை குறைகள் இருந்தும் படத்தில் ஒன்றி போவதால் தெரியவில்லை!
     அதிலும் லஷ்மி மேனன் வரும் காட்சியில் எல்லாம் விசில் காதை பிளக்கிறது. அம்மணி அத்தனை அழகாய் இருக்கிறார். சாண்டில்யன் கதைகளில் வரும் இளவரசி போல இருக்கிறார்.அவரை அழகாக காட்டிய ஒளிப்பதிவாளர் அந்த ஆதி காட்டையும் அருவியையும் மலையோர கிராமத்தையும் நம் கண்முன்னே உயிரோடு நிறுத்துகிறார்.
   தம்பி ராமையா மனசாட்சியோடு பேசியே நம்மை சிரிக்கவைக்கிறார். நெல்வயலில் பால் முத்தி விட்டது கொம்பன் யானை வந்துரும் என்று சொல்லும்போது அது வந்தா நமக்கு பால்தான் என்று டைமிங் காமெடியில் அள்ளுகிறார்.
  பிரபுவின் மகன் விக்ரம் பிரபுதான் ஹீரோவாம்! பிரபு ரேஞ்சுக்கு இல்லை! காதல் செய்ய தெரியவில்லை! இருந்தாலும் யானைப்பாகனுக்கு இந்த அளவுக்கு போதும் என்று இயக்குனர் விட்டிருக்கலாம் போல! ஒரளவுக்கு பொறுந்தி வருகிறார். இயக்குனருக்கு இந்த மாதிரி தாடிக்கார முரட்டு இளைஞர்களைத்தான் பிடிக்கும் போலிருக்கிறது. இவர் ஓக்கே ரகம் தான் ஓகோ அல்ல!
  மலைவாசி தலைவராக பசுபதி அவருடைய அண்ணணாக நடிப்பவர்கள். தம்பி ராமையாவுடன் சேர்ந்து கலக்கும் அந்த தம்பி என எல்லோருமே நன்றாக நடித்துள்ளார்கள். வசனங்களும் பளிச் சென்று இருக்கின்றன. தியேட்டரில் விசிலும் கைதட்டலும் அதிர்கின்றன.
    இவ்வளவு சொல்லியும் இசையை சொல்லாவிட்டால்! இமான் இதில் மீண்டும் ஒரு புதிய சகாப்தம் படைத்து இருக்கிறார். அனைத்து பாடல்களும் அருமை! பின்னணியும் மிகச் சிறப்பு! ஒரு ரவுண்டு வருவார் போல!
  க்ளைமேக்ஸில் முடிவு சரியில்லை என்று பெரும்பாலோர் சொல்லியிருந்தனர். காதலர்கள் பிரிவது சரியாகத்தான் தோன்றுகிறது 200 வருட கட்டுப்பாட்டை மீறுவது மாற்றுவது எல்லாம் சினிமாவில்தான் நடக்கும் நிஜத்தில் நடக்காது! பிரிந்ததில் தவறில்லைதான்! ஆனால் கொம்பன் யானையிடம் இருந்து விக்ரமை காப்பாற்றும் கும்கி(மாணிக்கம்) இறப்பதும் தம்பி ராமையா மற்றும் அவருடன் இருந்தவர்கள் இறப்பதாக காட்டி விக்ரமை தனிமை படுத்தியதை தவிர்த்திருக்கலாம்!
     ஊர் ஊராய் சுற்றி வேடிக்கை காட்டும் யானைக்கு வீரம் உடனே வராது! அதனால் மதம் பிடித்து இருப்பது போல காட்டிய இயக்குனரின் திறமையை பாராட்டலாம்.  மொத்தத்தில் கும்கி ஒரு மாமத யானை அல்ல! ஆனால் மதயானைதான்!
ஆமாம்  கும்கின்னா என்னான்னு தெரியுமா? காட்டிலிருந்து ஊருக்குள் புகும் காட்டு யானைகளை விரட்ட பயன்படும் யானைக்கு பேர்தான் கும்கியாம்!
  இந்த விசயத்தை இப்போது தான் கற்றுக் கொண்டேன்! ஒருதடவை பார்ப்பதில் தவறில்லை!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. //தம்பி ராமையா மனசாட்சியோடு பேசியே//

    அட சூப்பருங்க

    கலக்கல் விமர்சனம்

    ReplyDelete
  2. இப்போ தான் சினிமா விமர்சனம் எழுதுறீங்கன்னு நினைக்கிறேன்; நடுநிலையோடு எழுதிருக்கீங்க தொடருங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2