கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 98



1கவிஞர்கிட்டே மெட்டு இதோ பாட்டு கொடுங்க! இதோ மெட்டு பாட்டு கொடுங்கன்னு சுத்தி சுத்தி வந்தவங்கள்ளாம் என்ன பண்றாங்க?






” மீ..ட்டூ! மீ..ட்டூ!”ன்னு ட்விட்டர்ல ஹேஷ் டேக் போட்டுகிட்டு இருக்காங்க...!











2.பொண்ணுக்கு மியுசிக்லே ஆர்வம் அதிகம்னு சொன்னாங்க!


அப்புறம்...!


கல்யாணம் பண்ணப்புறம்தான் தெரிஞ்சது “மியுசிக்கலி”யிலே ஆர்வம் அதிகம்னு!






3.கல்யாண வீட்டுல ஒருத்தரை மட்டும் தடபுடலா கவனிக்கறாங்களே என்ன விஷயம்?

சும்மாவா அஞ்சு லிட்டர் பெட்ரோல் மொய் எழுதி இருக்கிறாராம்!







4.புலவரே உங்கள் பாட்டில் கூர்மை இல்லை…!

மன்னா….! உங்களை புகழ்ந்து பாடி பாடி வரிகள் எல்லாம் மொக்கையாக போய்விட்டது மன்னா!










5.அரசவைப் புலவர் மீது பாடகி பாலியல் குற்றச்சாட்டு வைத்தாரே என்ன ஆயிற்று?




மீ டுவிலிருந்து புலவரை மீட்டு வர பெரும்பாடு ஆகிவிட்டதாம்!










6.நம் மன்னர் சுத்த பயந்தாங்கொள்ளி.....!

அதற்காக தீபாவளி வெடிக்கு கூட பயந்து பதுங்கு குழியில் புகுந்து கொள்வதெல்லாம் அதிகமா தெரியுது!










7.நாட்டில் போர் ஏதும் இல்லையே… மன்னர் எதற்கு இத்தனை பதுங்கு குழிகள் வெட்ட சொல்கிறார்?

ராணியாரிடம் இருந்து தப்பித்து ஒளிந்து கொள்ளத்தான்!






8.தலைவர் ஜாமீன் எதிர்பார்த்துகிட்டு இருந்தாரே கிடைச்சுதா...?


தீபாவளி பலகாரமா குளோப் ஜாமூன் தான் கிடைச்சுது!






9.அரசவைப் புலவர் மீது மீ-டூ குற்றச்சாட்டு எழும்பியதும் அரசர் ஒன்றும் கேட்கவில்லையாமே...!


கேட்டால் புலவர் வீ.டூ என்று கோர்த்துவிட்டுவாரே என்ற பயம்தான்!






10.இது என்ன புதுசா வந்திருக்கிற மீ டூ வெடியா?


ஆமாம் ஒரு திரியை பத்த வைச்சா போதும் ஒண்ணு வெடிச்சு முடிச்சதும் அடுத்தது தானாவே வெடிக்கும்!






11.எங்க வீட்டுல தீபாவளிக்கு ஸ்விட் செஞ்சாங்கண்ணா ஒரு வாரம் ஆகும் சாப்பிட்டு முடிக்க!


அவ்வளவு நிறைய செய்வீங்களா?


ஊகும்! அவ்வளோ நாள் ஆகும் வாய்க்குள்ள சிக்கினதை வெளியிலே எடுக்க!






12. நம் மன்னர் பயந்த சுபாவம்...!


அதுக்காக தீபாவளி வெடிக்கு கூட பயந்து பதுங்கு குழியிலே புகுந்துகிறது கொஞ்சம் கூட நல்லா இல்லை!






13. மாப்பிள்ளை விஜய் ரசிகராம்!


இருக்கட்டும்! ஆனா “தல தீபாவளி” கொண்டாட மாட்டேன்னு அடம்பிடிக்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்லை!






14. டைரக்டர் சார் நாம எடுத்த படத்தோட கதை என்னுதுன்னு ஒருத்தர் கேஸ் போட்டிருக்கார் சார்!


கதையே இல்லாம எடுத்துட்டிருக்கோமேன்னு நினைச்சேன்! நல்ல வேளை ஒரு கதாசிரியர் கிடைச்சுட்டார்!






15. எதிரி புயலென புறப்பட்டு வந்துவிட்டான் மன்னா...!

ஒரு ரெட் அலெர்ட் கூட கொடுக்காமலா மந்திரியாரே...!




16. அவங்க பேங்க் மேனேஜர் சம்சாரமாம்!

இருக்கட்டுமே ஆனா அதுக்காக நகை இரவல் கேட்டால் கூட அதுக்கும் வட்டி வசூல் பண்றது ஓவரா இருக்கு!







தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!




















Comments

  1. அனைத்தும் ரசித்தோம் சுரேஷ்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2