கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 87
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 87
1.
ஆயிரம்தான்
இருந்தாலும் சொந்தங்க ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுத்து போக வேணாமா?
ஆயிரம் இல்லாததுதாங்க பிரச்சனை!
என்கிட்டே வாங்கின ஆயிரம் ரூபா நோட்டு செல்லாத போயிருச்சுன்னு திருப்பித் தர மாட்டேங்கிறார்!
2.
ஒருத்தர்கிட்டே கைமாத்தா ஒரு ரெண்டாயிரம் வேணும்னு கேட்டுட்டிருந்தியே
கிடைச்சுதா?
கிடைச்சுது! ஆனா மாத்தத்தான்
முடியலை!
3.
அந்த
டைலர் இதுக்கு முன்னாடி வாஸ்து நிபுணரா இருந்தவராம்!
அதுக்காக வாஸ்து பார்த்துதான்
ஜாக்கெட்ல ஜன்னல் வைப்பேன்னு சொல்றது நல்லா இல்லை!
4.
பேங்க்ல
விரல்ல வைக்க வைச்சிருந்த மை நான் கட்டப்போன பணத்துல கொட்டிருச்சு!
அப்புறம்?
கருப்பு பணம் ஆயிருச்சு!
5.
நம்ம
காதல் எங்கப்பாவுக்கு தெரிஞ்சிருச்சு?
அப்புறம்?
இதுவரைக்கும் எத்தனை ரூபாவுக்கு
டாப் பண்ணி இருக்கான்னு கேட்டாரு!!
6.
என்
பொண்டாட்டி சேர்த்துவைச்சிருந்த ப்ளாக் மணி எல்லாம் வெளியே வந்துருச்சு!
அப்புறம்?
அதை மாத்தறதுக்கு என்னை பேங்க்
வாசல்ல வைச்சு லாக் பண்ணிட்டா!
7.
கல்யாண
போட்டோ ஒண்ணுகூட சரியில்லையே என்ன ஆச்சு?
ஆதார் கார்டுக்கு போட்டோ எடுக்கிறவரை
கூப்பிட்டு வந்து எடுத்தா எப்படி இருக்கும்?
8.
கல்யாணத்துக்கு
மெய் வருந்தி கூப்பிட்டும் பலன் இல்லாம போயிருச்சா ஏன்?
மொய் வருகை குறைந்து போயிருச்சே!
9.
மன்னர் நகர்வலம் வருவதற்கு ராணியார் கடிவாளம் போட்டுவிட்டார்களாமே?
மன்னரின் மேய்ச்சல் அதிகம் ஆகிவிட்டதாம்!
10. எதிரிக்கு உங்கள் சிம்மாசனத்தின் மீது ரொம்ப
நாளாய் ஆசை மன்னா!
அப்படியானால் ஒரு விலை பேசி
விற்றுவிடுமோ மந்திரியாரே!
11. எதிரி எல்லா வழிகளையும் அடைத்துவிட்டான்
மன்னா!
தப்பித்துவிடலாம் என்று நான்
கட்டியிருந்த மனக்கோட்டையை இப்படி உடைத்துவிட்டீர்களே தளபதியாரே!
12. உங்களோட பாரத்தை என்கிட்ட இறக்கிவைச்சிருங்கன்னு
சொல்றாரே அவர் யாரு?
எங்க கம்பெனியோட “லோடுமேன்”
13. எனக்கு நிறைய மணியார்டர் வரும்னு சொல்லிக்கிட்டு
இருக்காரே அவர் பெரிய எழுத்தாளரா?
நீங்க வேற அவரோட சம்சாரம் ”மணி”
மேகலை போடற ஆர்டரைத்தான் அப்படி சொல்லிகிட்டுத் திரியறாரு!
14. எதிரியினுடனான போரில் மன்னரின் வாள் பேசியதா?
வேல் பேசியதா?
ஊகும் கால்தான் பேசியது!
15. முதலிரவு அறையில் கணவன்: கண்ணே! நீ இதுக்கு முன்னாடி
யாரையாவது காதலிச்சு இருக்கியா?
மனைவி: அந்த லிஸ்டை சொல்ல ஆரம்பிச்சா
பொழுது விடிஞ்சிரும் பரவாயில்லையா?
16. அந்த டாக்டர் எதுக்கு மல்லுவேட்டியும் பனியனும்
போட்டுகிட்டு ஆபரேஷன் தியேட்டருக்கு போறார்?
அவர் மைனர் ஆபரேஷன் பண்ண போறாராம்!
17. அவர் சில்லறை சில்லறையாய் சம்பாதிச்சு இந்த
வீட்டை கட்டி முடிச்சு இருக்காரு!
அதுக்காக வீட்டுக்கு “உண்டியல்”னு
பேர் வைக்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்லை!
18. புலவரே பாடல்களை ஒப்புக்கு எழுதுகிறீர்கள்
போலிருக்கிறதே!
நீங்கள் கொடுக்கும் ”செப்புக்கு”
தான் எழுதுகின்றேன் மன்னா!
19. மன்னா! அண்டை நாடுடனான நம் உறவில் விரிச்ல்
ஏற்பட்டு விட்டது!
ஏன்?
அண்டை நாட்டு மன்னர் அனுப்பிய
புறாவை சமைத்து பிளந்து கட்டிவிட்டீர்களே!
20. எப்ப கேட்டாலும் உன் புருஷன் லைன்ல இருக்காருன்னு
சொல்லிக்கிட்டிருக்கியே சதா உன்கிட்ட பேசிக்கிட்டே இருப்பாரா?
நீ வேற பேங்க் க்யு, ஏடி,எம்
கியுவுல நின்னுக்கிட்டிருக்கார்னு சொல்ல வந்தேன்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு
குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
அனைத்தும் அருமை சகோ..
ReplyDelete7, 10, 17 ரொம்ப சிரிப்பு :)
சுடச்சுட வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி!
Deleteஎல்லாமே சிரிக்க வைத்தது நண்பரே வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteசிரித்தேன்
ReplyDeleteரசித்தேன் நண்பரே
பாஸ் உங்கள் தனித்த அடையாளம் இந்த ஹாஸ்யம்... தொடருங்கள்..
ReplyDeleteவாழ்த்துகள்
நன்றாக இருக்கிறது
ReplyDeleteசிரிப்பு தொகுப்பு.
அனைத்தையும் ரசித்தேன்.
ReplyDelete