தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

 மொழி மறந்து
  விழி பேசியது!
  காதல்!

குழந்தையோடு
விளையாடுகையில் குழந்தையாகிறது
மனசு!

துள்ளி துள்ளி வந்து
தள்ளி தள்ளி போகிறது
கடல் அலைகள்!

விழுந்தும்
அடிபடவில்லை!
அருவி!

புதைந்த நியாபகங்கள்
தோண்டப்பட்டன!
சந்திப்பில்!

போர்வை விலக்கின
புற்கள்!
கதிரவன் உதயம்!

பச்சை சேலையில்
வெள்ளை ரோஜாக்கள்!
வயலில் கொக்குகள்!

தலையில் 
கொள்ளிவைத்துக்கொண்டன!
தெருவிளக்குகள்!

கண்ணாமூச்சி ஆடியது
கதிரவன்!
மேகம்!

பிறந்ததும்
விழுந்து இறந்தது!
நீர்க்குமிழி!

தாய்ப்பாலுக்கு விலைகூட
தள்ளிக் கட்டப்பட்டது!
கன்று!

நீந்தத் தெரியாது
மூழ்கியது குதிரை!
குளத்தில் நிழல்!


கழுவிவிட்டது வானம்!
நனைந்தது பூமி!
மழை!

உள்ளம் குமுறுகையில்
வார்த்தைகளில் வெடிக்கிறது!
கோபம்!

பறவைகளின் இசையில்
பயிர்களின் நாட்டியம்!
மாலைத் தென்றல்!

வசதிகள் அதிகமாகையில்
சுருங்கிப் போகிறது!
மனசு!

ஒடுங்கும் முதுமையில்
ஓடும் குழந்தையாகிறது!
மனசு!

பாட்டு எசப்பாட்டில்
பயணித்தது இரவு!
பறவைகள்!

இரவில் பூத்தன
மரங்கள்!
மின்மினி பூச்சிகள்!


டிஸ்கி)  தமிழ்த்தோட்டம் என்ற போரமில் 2011ல் நான் எழுதி பாராட்டுப்பெற்ற சில ஹைக்கூக்களை இங்கு பதிவிட்டுள்ளேன்! சிலவற்றை என் முன் பதிவுகளில் படித்திருக்கலாம்! பொறுத்துக்கொள்ளவும்!  வீட்டம்மா வெளியில் சென்றதால் சுமை கூடியுள்ளது! சிந்தனைக்கு நேரமில்லை! சோறாக்க போகனும் ஹிஹி! நன்றி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. அனைத்தும் ரசனை...

  ReplyDelete
 2. அனைத்தும் அசத்தல் தான் வழமை போல.

  ReplyDelete
 3. அருமை நண்பரே
  அருமை
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. கலக்குங்கோ
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. வழக்கம்போல அசத்துகின்றீர்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. இரவில் பூத்தன
  மரங்கள்!
  மின்மினி பூச்சிகள்!

  // என்னை கவர்ந்தது, மின்மினி பூச்சிகள்!

  ReplyDelete
 7. புகைப்டங்கள் அருமை, அதனினும் அருமையான வரிகள். நன்றி.

  ReplyDelete
 8. எல்லாம் நன்றாக இருக்கிறது சகோ. என்னைக் கவர்ந்த டாப் டூ
  //துள்ளி துள்ளி வந்து
  தள்ளி தள்ளி போகிறது
  கடல் அலைகள்!

  விழுந்தும்
  அடிபடவில்லை!
  அருவி!//

  ReplyDelete
 9. இரசித்தேன் நண்பரே அருமை.

  ReplyDelete
 10. வணக்கம்
  ஐயா
  இரசித்தேன் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 11. அனைத்துமே அருமை. நாங்களும் ரசிக்க இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
 12. //மொழி மறந்து
  விழி பேசியது!
  காதல்!/

  விழி பேசியது
  எந்த மொழி
  காதல்

  //புதைந்த நியாபகங்கள்
  தோண்டப்பட்டன!
  சந்திப்பில்!//

  பிரிந்தோம்
  சந்தித்தோம்
  முகநூலில்

  //இரவில் பூத்தன
  மரங்கள்!
  மின்மினி பூச்சிகள்//

  மரங்களில்
  நட்சத்திரங்கள்
  மின்மினி.

  --
  Jayakumar

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2