ரன் எக்ஸ்பிரஸ்! மிதாலி ராஜ்! பகுதி 3.

 

ரன் எக்ஸ்பிரஸ்! மிதாலி ராஜ்! பகுதி 3.




 உலக்கோப்பை பைனல்! உலகின் வலிமையான அணியான ஆஸ்திரேலியாவை சந்தித்த்து இந்தியா. இந்தியா எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று எல்லோரும் ஆவலோடு போட்டியை பார்த்துக்கொண்டிருந்தார்கள்

 செஞ்சூரியனில் நடைபெற்ற அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் கெரன்ரோல்டன் இந்தியர்களின் கனவை சிதறடித்து சதமடிக்க 215 ரன்களை குவித்து 216 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

  மிகப்பெரும் இலக்கை துரத்திய இந்திய அணி பதட்ட்த்தில் தவறுகளை செய்தது.அனுபவம் வாய்ந்த ஆஸ்திரேலியா துல்லியமாக பந்துவீசி விக்கெட்களை வீழ்த்தியது. இந்தியாவின் பேட்டிங் தூணாக இருந்த மிதாலி எல்பி டபிள்யூ முறையில் வெறும் ஆறு ரன்களுக்கு ஆட்டமிழக்க 117 ரன்களுக்கு ஆட்டமிழந்து உலககோப்பையை இழந்தது இந்தியா. மிதாலியின் கனவு தகர்ந்தது.

அந்த போட்டியில் 7 ஆட்டங்களில் 199 ரன்களை எடுத்த மிதாலியின் ஆவ்ரேஜ் 49.75. அதிகபட்ச ரன் 91. நியுசிலாந்துக்கு எதிராக.

 ஆனாலும் மிதாலி தளர்ந்து போகவில்லை! உலக கோப்பை போனால் என்ன என்று இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதல் முறையாக வென்றெடுத்தார். இங்கிலாந்து மண்ணில் இந்திய பெண்கள் அணி பெற்ற மகத்தான வெற்றியாக இன்றுவரை அது திகழ்கிறது. அதே ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டிகளில் இந்திய அணி பட்டையைக் கிளப்பியது மிதாலி   ஆசியக்கோப்பையை இரண்டாவது முறையாக இந்தியாவிற்கு வென்றெடுத்தார். அந்தத் தொடரில் ஒரு போட்டியில் கூட இந்தியா தோற்கவில்லை என்பது ஒரு சாதனை.

 முதல்முறை! இந்த வார்த்தை மிதாலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் பலமுறை இடம்பெறத்துவங்கியது. பல முதன்முறை சாதனைகளுக்கு சொந்தக் காரியாக உருவாகினார்.  இவர்தான் பெண்கள் கிரிக்கெட்டில் முதன்முறையாக தொடர்ந்து ஏழு அரைசதங்களை விளாசினார்.  . பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக 6000, அப்புறம் 7000 ரன்களை கடந்தவரும் இவரே. டி20 போட்டிகளில் முதன் முறையாக 2000 ரன்களை கடந்த வீராங்கனையும் இவரே  இங்கிலாந்து மண்ணில் 14 அரைசதங்களை அடித்த ஒரே இந்திய வீராங்கனை இவரே.

 இப்படி பல சாதனைகளை போகிற போக்கில் எடுத்துச் சென்றாலும் இவரது கிரிக்கெட் வாழ்வில் சறுக்கல்கள் இல்லாமல் இல்லை. 2008ம் ஆண்டு இங்கிலாந்துக்கு இவர் தலைமையில் சென்ற இந்திய அணி ஒரு போட்டியில் கூட வெல்லாமல் தோல்வியோடு திரும்பியது. மிதாலியின் பேட்டிங் திறமையும் கேப்டன்சியும் விமர்சனத்திற்கு உள்ளானது. மிதாலி கேப்டன் பதவியை இழந்தார். நம்பிக்கை இழக்க வில்லை. இடைவிடாத பயிற்சிகள் மூலம் பேட்டிங் திறமையை மீட்டெடுத்தார்.

 பேட்டிங் புலியான அவர் நீண்ட நாட்கள் அடங்கியிருக்கவில்லை! விமர்சன்ங்களுக்கு திறமையான வீர்ர்கள் தங்கள் பேட்டிங்கால் பதில் அளிப்பார்கள். டெண்டுல்கர் தோனி போன்று மிதாலியும் விமர்சகர்களுக்கு தன்னுடைய பேட்டால் பதில் கொடுத்தார். இவரது திறமையான ஆட்டம் மீண்டும் இவருக்கு கேப்டன் பதவியை பெற்றுக் கொடுத்தது. 2012 இங்கிலாந்து டூரின் முடிவில் 2-3 என்று தொடரை இழந்தபோதும் இவர் அத்தொடரில் 251 ரன்களை குவித்து ஐசிசி பெண்கள் கிரிக்கெட் தரவரிசையில் முதன் முறையாக முதலிட்த்தை பிடித்து அசத்தினார். அதுவரை எந்த இந்திய வீராங்கனையும் தொடாத மைல்கல் அது. அதன் பின்னர், கிரிக்கெட் உலகின் உயரிய சாதனையாக கருதப்படும் விஸ்டன் விருதும் இவரைத் தேடிவந்தது விஸ்டன் விருது பெற்ற முதல் இந்திய வீராங்கனையும் இவரே.

 இப்படி பல சாதனைகளை தன் வசமாக்கிக் கொண்டார். அவர் சாதனைகளுக்கா ஆடவில்லை! அவரது ஆட்டம் சாதனைகளை அவர் வசம் கொண்டுவந்து சேர்த்தது.

ஏற்ற இறக்கங்கள் நிறைந்த்து தானே வாழ்க்கை! மிதாலி 2013ல் கிரிக்கெட் வாழ்வில் உச்சத்தை தொட்டபோதும் இந்திய மண்ணில் நடைபெற்ற உலக கோப்பை போட்டித்தொடரில் முதல் சுற்றோடு இந்திய அணி வெளியேறியது. 2014ல் நடைபெற்ற டி20 போட்டியிலும் அரையிறுதியில் தோற்று வெளியேறியது.

லேடி சச்சின் டெண்டுல்கர் என்று அழைக்கப்படும் மிதாலிக்கு டெண்டுல்கரைப் போலவே உலக கோப்பை இதுவரை வெறும் கனவாகவே அமைந்துவிட்ட்து. டெண்டுல்கருக்கு ஒரு தோனி கிடைத்து 2011ல் கனவு நினைவானது. ஆனால் மிதாலிக்கு அப்படி ஒரு தோனி இன்னும் கிடைக்கவில்லை.

 பல உலக கோப்பை தொடர்களில் ரன்களை குவித்திருந்தாலும் இறுதிப்போட்டியில் சொதப்பி ரன்கள் எடுக்காமல் அவுட் ஆகிவிடுவார் டெண்டுல்கர். இந்தியாவும் தோற்றுவிடும். அதே போலத்தான் மிதாலி, 2005ல் இறுதிப்போட்டி வரை சென்ற அணி, பின்னர் 2009, 2013லும் தோற்றுப் போனது. 2017ல் மீண்டும் உலக கோப்பைத் தொடர் துவங்கியது.

  34 வயது நிரம்பியிருந்த மிதாலி  இம்முறை எப்படியும் கோப்பையை வென்றுவிட வேண்டும் என்று களம் இறங்கினார். வென்றாரா? அடுத்த பகுதியில்.

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!