ரன் எக்ஸ்பிரஸ்! மிதாலிராஜ். பகுதி 4.

 

ரன் எக்ஸ்பிரஸ்! மிதாலிராஜ். பகுதி 4.

 2017 உலககோப்பை போட்டியில் இந்திய பெண்கள் அணி இளம் வீர்ர்களோடு களம் இறங்கியது. மிதாலிராஜ் அனுபவ வீராங்கணையாக ஜொலித்தார்.




முதல் சுற்றில் முதல் நான்கு போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி கண்ட இந்திய அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது. கடைசி சுற்றுப் போட்டியில் நியுசிலாந்துக்கு எதிராக மிதாலி 109 ரன்களை விளாச இந்தியா 265 ரன்களை குவித்த்து. பதிலுக்கு நியுசிலாந்து வெறும் 79 ரன்களில் சுருண்டுவிட 187 ரன்கள் வெற்றி உலக கோப்பையில் பெரும் வித்தியாசத்திலான வெற்றி என்ற சாதனையுடன் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்திக்கத் தயாரானது இந்தியா.

 2005ல் இறுதிப்போட்டியில் தோற்ற வடு இன்னமும் இருக்க இந்தப் போட்டியில் வென்றே தீரவேண்டும் என்ற முனைப்பில் இறங்கியது இளம் இந்திய அணி. ஆஸ்திரேலிய அணியோ நாம் வென்ற அணிதானே இது! வழக்கம்போல வெற்றி பெற்று பைனலுக்கு செல்லப்போவது நாம்தான் என்று கெத்தாக களம் இறங்கியது.

அவர்களின் கணிப்பை பொய்யாக்கினார் மிதாலி. அவரது வழி நடத்துதலில் இந்தியா சிறப்பாக ஆட ஆஸ்திரேலிய அணி சொதப்ப ஆரம்பித்த்து. ஹர்மன்ப்ரித் கவுரின் அசுர ஆட்டத்தில் நொறுங்கிப் போனது ஆஸ்திரேலிய அணி. இந்திய ஓபனர்கள் சொதப்பினாலும் மிடில் ஆர்டரில் மிதாலி மற்றும் தீப்தி ஷர்மா துணையோடு ஓர் அசத்தலான கனவு ஆட்டத்தை ஆடினார் ஹர்மன்பிரித் கவுர். அவர் 115 பந்துகளில் 171 ரன்களை குவிக்க  இந்தியா 281 ரன்களை குவித்தது.

 இமாலய இலக்கு! 2005ல் தோற்ற இந்தியாவா இது? அசந்துபோனது ஆஸ்திரேலியா. அது அவர்களின் ஆட்டத்திலும் எதிரொலித்த்து. ஷிக்கு பாண்டே,தீப்திஷர்மா துல்லியமாக பந்துவீச ரன்களை எடுக்க ஆஸ்திரேலியா திணறியது. இறுதியில் 245 ரன்களுக்கு ஆட்டமிழக்க 36 ரன்களில் இந்தியாவிடம் வீழ்ந்தது.

நான்கு முறை உலகச்சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய ஆனந்தத்தில் பைனலுக்குச் சென்ற இந்தியா இங்கிலாந்தை சந்தித்தது.

லண்டன் லார்ட்சில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 228 ரன்களில் ஆட்டமிழந்த்து. இந்திய பெண்கள் துல்லியமாக பந்து வீசினர். 228 ரன்களை எளிதாக கடந்துவிடலாம் என்ற இந்திய பெண்களை இங்கிலாந்து பெண்கள் அடக்கி ஆளத் துவங்கினர். ஒருபுறம் விக்கெட் விழ ஓபனர் பூணம் ராத் நிலையாக ஆடினார். இந்தப்போட்டியில் துரதிருஷ்ட வசமாக மிதாலி ரன் அவுட் ஆகி 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரது கனவும் இந்தியாவின் கனவும் தகர்ந்து போனது. ஹர்மன்பிரித் போராடியும் 8 ரன்களில் இந்தியா தோல்வியைத் தழுவியது. இது இன்னும் மிதாலிக்கு ஆறாத வடுவாக நெஞ்சில் நிலைத்திருக்கிறது.

2017ம் ஆண்டு .சிசி அறிவித்த இந்திய பெண்கள் அணியில் மிதாலி ராஜ் இடம்பிடித்தார். ஆனாலும் உலக கோப்பை நினைவாகவில்லை.

2018ம் ஆண்டு உலக்கோப்பை டி 20 போட்டிக்கு கேப்டனாக மிதாலி ராஜ் தேர்வு ஆனார். ஆனால் அந்தக் கோப்பையும் கை நழுவியது. டி 20 போட்டிகளில் 2000ரன்களை குவித்த (ஆண்கள் பெண்கள்)முதல் பெண் வீராங்கணை என்ற சாதனை படைத்த மிதாலி 2019ம் ஆண்டில் டி,20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகின்றார்.

சமீபத்தில் அவர் மிகவும் மெதுவாக ஆடுவதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டியபோது மிதாலி ராஜ் சொன்னது. அடுத்தவர்களுடைய அங்கீகாரம் எனக்குத்தேவையில்லை.அணியில் எனக்கான பொறுப்பை உணர்ந்துள்ளேன். அடுத்தவர்களை சந்தோஷப்படுத்த நான் ஆடுவதில்லை.என்னுடைய அணி நிர்வாகம் எனக்குக் கொடுத்த பொறுப்பை நிறைவேற்றுவதற்காகவே விளையாடுகின்றேன். என்னுடைய பயிற்சியாளரின் அறிவுரைப்படி நான் விளையாடுகிறேன். அணியின் மொத்த பேட்டிங்கும் என்னை சுற்றியே இயங்குகிறது. மேல்வரிசை வீர்ர்கள் ஆட்டமிழந்துவிட்டால் நான் நிதானமாக விளையாடவேண்டியுள்ளது. இலக்கை நெருங்கும் வரை நான் களத்தில் இருந்தாக வேண்டும் என்றார்.

இந்திய மகளிர் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி 3வது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலக சாதனை

இரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒரு நாள் போட்டி வொர்செஸ்டரில் நேற்று நடந்தது. இதில் சிறப்பாக விளையாடி 75 ரன்களை அடித்த கேப்டன் மிதாலி ராஜ் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 10, 273 ரன்களை கடந்து உலகில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னர் இங்கிலாந்து முன்னாள் வீராங்கனையான சார்லோட் எட்வார்ட்சின் முதலிடத்தில் இருந்த நிலையில் அவரை முந்தி மிதாலி ராஜ் பெருமை பெற்றுள்ளார்.

 

இந்நிலையில் மிதாலியின் சாதனை குறித்து பிசிசிஐ புகழாரம் தெரிவித்துள்ளது. பிசிசிஐ வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிக ரன் அடித்த வீரர் சச்சின் மற்றும், சர்வதேச மகளிர் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் மிதாலி என்று பெருமைக்கொண்டுள்ளது. பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “ உலக மகளிர் கிரிக்கெட்டில், 3 விதமானப் போட்டிகளிலும் அதிகமான ரன்களைக் குவித்த வீராங்கனை எனும் பெருமையை மிதாலி ராஜ் பெற்றுள்ளார். இங்கிலாந்துவீராங்கனை சார்லோட்டி எட்வார்ட்ஸ் சாதனையை மிதாலி முறியடித்துள்ளார்எனத் தெரிவித்துள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை எனும் பெருமையைகடந்த மார்ச் மாதம் மிதாலி எட்டினார்.



 

மிதாலி ராஜ், மகளிர் கிரிக்கெட்டில் அதிகமான போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனை எனும் பெருமையை தக்கவைத்துள்ளார்.

இதுவரை 217 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7304 ரன்களை குவித்துள்ளார் மிதாலி ராஜ். அதில் மொத்தம் 7 சதங்களும், 58 அரை சதங்களும் அடங்கும். அவரின் சராசரி 51.80. மேலும், சர்வதேச அளவில் 89 டி20 போட்டிகளில் 2364 ரன்களை சேர்த்து, அதில் 17 அரை சதங்களும் விளாசியிருக்கிறார். பொதுவாக மகளிர் கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகள் அரிதானது, அதனால் இதுவரை அவர் 11 டெஸ்ட்டில் விளையாடி 669 ரன்களை எடுத்துள்ளார். அதில் மொத்தம் 4 அரை சதங்களாகும். இப்போது மிதாலி ராஜ்க்கு 38 வயதாகிறது. மகளிர் டி20 உலகக் கோப்பையுடன் மிதாலி ராஜ் ஓய்வுப் பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மகளிர் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்றுத்தந்த கேப்டன் என்ற சாதனையையும் மிதாலியின் வசம் இருக்கிறது. கேப்டனாக இருந்த 140 போட்டிகளில் 84 வெற்றிகளை பெற்றுள்ளார் மிதாலி.

 


 

ரன் எடுக்கும் தாகம் இன்னும் குறையாத மிதாலிக்கு இன்னும் ஒரு உலக கோப்பை மட்டும் கையில் ஏந்தாதது குறையாக இருக்கிறது.  

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2