தோனியின் அதிர்ஷ்டம் தொடருமா? ஓர் அலசல்!


தோனியின் அதிர்ஷ்டம் தொடருமா? ஓர் அலசல்!

ஐபிஎல் சீசன் 5ல் அட்டகாசமாய் முதலிடத்தில் டெல்லியும் இரண்டாமிடத்தில் கல்கத்தாவும் அமர்ந்து விட சுதாரித்துக் கொண்ட மும்பையும் மூன்றாமிடம் பிடித்துக் கொண்டது. நான்காம் இடத்திற்குத்தான் எத்தனை போட்டி! பஞ்சாப், ராஜஸ்தான், பெங்களூரு என அனைத்தையும் தன் அதிர்ஷ்டத்தால் பின் தள்ளி நான்காம் இடம் பிடித்துள்ளது சென்னை! வேறு எப்படி சொல்வதாம்? பங்கேற்ற பதினாறு லீக் போட்டிகளில் 8ல் மட்டும் வென்று ஒரு போட்டி கைவிடப்பட 17 புள்ளிகளுடன் கொஞ்சம் ரன் ரேட்டை மட்டும் வைத்துக் கொண்டு இருந்தது  சென்னை அணி. அதுவும் பஞ்சாப்க்கு எதிரான தனது கடைசி லீக்கில் மோசமாக தோற்ற போது சென்னை அணியின் ப்ளே ஆப் வாய்ப்பு  சுத்தமாய் மங்கி போனது. ஆனாலும் மீண்டும் ஒருமுறை தோனியின் அதிர்ஷ்டமோ இல்லை மேட்ச் பிக்ஸிங்கோ கை கொடுக்க உள்ளே நுழைந்திருக்கிறது சென்னை.
      தோனிக்கு எப்போதுமே கொஞ்சம் அதிர்ஷ்டம் அதிகம் தான்! இந்திய அணி ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனைத் தேடிக் கொண்டிருக்க அந்த சமயத்தில் தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் கிற்கும் தோனிக்கும் தான் இந்திய அணியில் போட்டி இருந்தது. சமயத்தில் கார்த்திக் சொதப்ப தோனிக்கு வாய்ப்பு வழங்கப் பட்டது. இந்த சமயத்தில் டெண்டுல்கர் காயம் காரணமாக துவக்க வீரர் பிரச்சனை ஏற்பட பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் இவர் துவக்க வீரராக களமிறங்கினார். முதல் சில போட்டிகளில் சொதப்பலாக ஆடினார் தோனி! கீப்பிங்கும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை! அப்போது தான் அதிர்ஷ்ட தேவதை இவருள் புகுந்தது விசாக பட்டினத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ருத்ர தாண்டவம் ஆடி சதம் அடித்து வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டார்.
    பின்னர் படிப் படியாக வளர்ந்தாரா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும் டி20 உலக கோப்பை உருவானது! டெண்டுல்கர் இவரை கேப்டனாக முன் மொழிய கிரன் மோரே வழி மொழிந்தார். அந்த தொடரிலும் இவர் பேட்டிங்கில் பெரிதாக சாதிக்கவில்லை என்றாலும் வழிநடத்துதலில் புதிய பரிமாணத்தை காட்டினார். பாகிஸ்தான் உடனான இறுதி போட்டியில் கடைசி ஓவரைஒரு புதிய வீரருக்கு வழங்கினார். அந்த போட்டியில் மிஸ்பா அடித்த கேட்ச்சை ஸ்ரீகாந்த் மிஸ் செய்திருந்தால் இவரது கிரிக்கெட் வாழ்வே அஸ்தமித்து இருக்கும். ஆனால் அதிர்ஷ்டம் கை கொடுக்க கோப்பை வென்றார் தோனி. தொடர்ந்து ஒருநாள் அணி கேப்டன் ஆனார். டெஸ்டுக்கும் கேப்டனாகி உலக கோப்பையும் வென்று விட்டார். இது எல்லாவற்றிலும் அவரது உழைப்பு 50 சதவீதம் இருந்தால் அதிர்ஷ்டம் 50 சதவீதம் இருந்தது.
    ஐபிஎல் போட்டிகளிலும் அதேதான்! முதல் தொடரில் இறுதி போட்டியில் கோட்டை விட்டார் ராஜஸ்தானிடம், அடுத்த தொடரில் அரையிறுதி வரை வந்தார் எல்லாம் அதிர்ஷ்டம் தான். ஏனேனில் சென்னை அணி ஒரு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதே இல்லை. பேட்டிங்கில் ஹைடனையும் ரெய்னாவையும் நம்பியிருந்தது. பந்து வீச்சில் சொல்லிக் கொள்ளும்படி யாரும் இல்லை. இந்த நிலையில் தான் அஸ்வின் அவதாரம் எடுக்க மூன்றாவது சீசனில் கோப்பை தட்டினார் தோனி. அதுவும் பைனலுக்கு செல்ல பஞ்சாப்பை வென்றாக வேண்டிய சூழலில் அன்று பஞ்சாப் 200 ரன்களை குவிக்க முரளி விஜய் வழியாக அதிர்ஷ்டம் அடித்தது தோனிக்கு. அதுவரை முரளி விஜய் அப்படி ஒரு ஆட்டம் ஆடி பார்த்தது இல்லை. ஆனால் அன்று அசத்தலான சதம் அடித்து அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.
     நான்காவது சீசனில் மைக் ஹசி சீரான ஆட்டம் கை கொடுக்க சுழலில் அஸ்வின் ஜகாதி அசத்த போலிங்கரின் துல்லியமான வேகம் கை கொடுக்க கோப்பை வென்றது சென்னை. இந்த தொடரிலும் அதிர்ஷ்டம் பலமுறை சென்னை பக்கம் இருந்தது கண்கூடு.
   இப்போது சென்னைக்கு மீண்டும் தோனியின் அதிர்ஷ்டம் கை கொடுக்குமா என்பது கேள்வி? ப்ளே ஆப்பிற்கு தகுதி பெறாது டெக்கானை எளிதாக பெங்களூரு வென்று விடும் என்றே நினைத்தேன். ஆனாலும் வழக்கம் போல தோனியின் அதிர்ஷ்டம் மீண்டும் கை கொடுத்துள்ளது. பரிதாபமாக வெளியேறி சென்னைக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது பெங்களூரு.
   நாளை நடை பெறும் ப்ளே ஆப்பிள் தோற்கும் அணி வெளியேறிவிடும். அதுசென்னையாக இருக்க கூடாது என்று சென்னை ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஆனால் எதிர்த்து விளையாடக் கூடிய மும்பை அணி லேசு பட்டதல்ல! ஜாம்பவான்கள் டெண்டுல்கர், ஹர்பஜன், அதிரடி போலார்டு போன்ற ஆல்ரவுண்டர்களை கொண்டுள்ள அணி. இந்த முறை இந்த அணியிடம் இரண்டு முறை தோற்றுள்ளது சென்னை. இதற்கு பதிலடி கொடுக்குமா சென்னை. தோனியின் அதிர்ஷ்டம் கை கொடுக்குமா? இதில் வென்றாலும் இன்னும் ஒரு போட்டியில் வெல்ல வேண்டும் அப்புறம்தான் இறுதி போட்டி!
     இறுதி போட்டிக்குச் செல்ல அதிர்ஷ்டம் மட்டும் போதுமா? திறமை வேண்டாமா? திறமையோடு இருக்கும் டெல்லி கொல்கத்தா, மும்பை இவைகளோடு அதிர்ஷ்ட சென்னை மோதுகிறது! கைகொடுக்குமா அதிர்ஷ்டம்! பொறுத்திருந்து பார்ப்போம்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

Comments

  1. I think this time also we can go into finals with help of vijay.coz vijay plays better in knock out for chennai. And also dhoni has bravo to make massive score.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2