சகாயம்! ஆஸ்ரா கார்க் மாற்றம்! சில சுவாரஸ்ய தகவல்கள்!

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் மற்றும் எஸ்.பி. அஸ்ரா கார்க் ஆகியோருக்கு இடையே தொடங்கிய ஈகோ யுத்தம்தான் இப்பொழுது இடமாற்றம் வரைக்கும் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் சகாயம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை உளவுத்துறை மூலமாக முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு அஸ்ரா கார்க் கொண்டு சென்றதாகவும் இதைத் தொடர்ந்தே சகாயம் இடமாற்றம் செய்யப்பட்டு கோ ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் பதவிக்கு தூக்கியடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுரை ஆதீனம் விவகாரத்தில், மதுரை ஆதீனத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என மதுரை ஆதீன மீட்பு குழுவினர் மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயத்திடம் மனு அளித்தனர். அதன் மீது விசாரணை நடத்த சகாயம் உத்தரவிட்டதாக கூறப்படுகின்றது. மேலும், நித்தியானந்தாவிற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற போது, அது குறித்து காவல்துறை தலைமையிடம் அஸ்ரா கார்க்கும், சகாயமும் விவாதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதில் இருவரும் இணைந்து செயல்படாமல் ஒருவருக்கொருவர் இஸ்டத்துக்கு செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல் மதுரையைச் சுற்றியுள்ள அமைச்சர்கள் சிலர் சொல்வதை சகாயமும், மதுரை எஸ்.பி. அஸ்ரா கார்க்கும் கேட்பதே கிடையாது. அவர்களை வைத்துக் கொண்டு செயல்பட்டால் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயராக முடியாது என அதிமுக தலைமையிடம் அமைச்சர் ஒருவர் புகார் மனு வாசித்ததாகவும் ஒரு தகவல் உண்டு. இதனால்தான் இருவருக்கும் டிரான்ஸ்பர் கிடைச்சதாகவும் சொல்லப்படுகிறது..

நேர்மையாக தாம் உண்டு வேலை உண்டு என்றிருந்தாலும் பஞ்சாயத்து.. அய்யா ..சாமி என்று ஆமாம் சாமி போட்டாலும் பஞ்சாயத்து.. !

டிஸ்கி} அதிகாரிகள் அமைச்சர்களுக்கு பணிந்து போக வேண்டுமானால் எதற்கு அதிகாரிகள்! படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் நடந்த மோதலில் மீண்டும் படிக்காதவர்கள் வென்று விட்டார்கள்! இப்படியே போனால் நாடு வெளங்கிடும்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்து கமெண்ட் செய்து ஊக்குவியுங்கள் தோழர்களே!

Comments

  1. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் ....என்ன சொல்றிங்க நீங்க

    ?படித்தவன் படிக்காதவன்னு கிடையாது.அப்படினா ப.சி.மன்மோகன்,இவனுன்க எல்லாம் யோக்கியமா?

    ReplyDelete
    Replies
    1. இங்கு படித்தவன் படிக்காதவன் என்பது அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் குறிக்கிறது தோழரே! அதிகாரிகளிலும் மோசமானவர்கள் உண்டு! அரசியல்வாதிகளிலும் நல்லவர்கள் உண்டு! நான் நீங்கள் சொன்ன இரண்டு அரசியல் வாதிகளையும் மறந்து ரொம்ப நாளாகிவிட்டது! கமெண்டுக்கு நன்றி நண்பரே!

      Delete
  2. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மறுபடியும் மறுபடியும் சூதே கவ்வும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2