சிரிப்போ சிரிப்பு! ஜோக்ஸ்!

1.பையன் ஓடி ஓடி சம்பாதிக்கிறான்னு சொல்றீங்களே என்ன பண்றார்?
 ம். பைனான்ஸ் கம்பெனி நடத்தறார்!

2. அந்த டாக்டர் எதிரிகட்சி ஆளுன்னு தலைவர் சந்தேகப்படறாரு!
   ஏன்?
   தினம் தோறும் காலையிலே வாக் போகச் சொல்லறாறாம்!

3. என்னது மாப்பிள்ளையை ஏலத்தில விட்டு இருக்கீங்களா?
 ஆமாம் பையன் ஐ.பி.எல் பிளேயர்!

4.நிறைய இடங்களை வளைச்சு வளைச்சு போட்ட தலைவர் இப்போ எப்படி இருக்கார்?
 சிறைக்கும் கோர்ட்டுக்கும் போயிபோயி ரொம்பவே இளைச்சு போயிருக்கார்!

5. அன்பே என்னை கைவிட மாட்டீங்களே!
  இதே கேள்வியைத்தான் உன் பிரெண்ட் கீதாவும் கேட்டா!

6. சாந்தியை தேடி ஆசிரமத்துக்கு வந்த பொண்ணு இப்ப எப்படி இருக்கு?
    ம்! வாந்தி எடுத்துட்டு இருக்கு!

7. மன்னர் அரிவாளோடு எங்க கிளம்பிட்டார்?
  நாட்டில் முளைத்துள்ள விஷச்செடிகளை களையெடுக்க வேணும்ணு அமைச்சர் சொன்னதை தப்பா புரிஞ்சிகிட்டார் போல!

8.தலைவருக்கு பழைய ஞாபகம் வந்திருச்சுன்னு எப்படி சொல்றே?
  தெருத்தெருவா பிச்சை எடுத்தாவது கட்சியை காப்பாத்துவேன்னு சொல்றாறே!

9. தலைவர் மப்புல உளர்றார்னு எப்படி சொல்றே?
   போட்டியிலே ஜெயிச்சா நாங்க கோப்பையோடு தட்டும் கிண்ணமும் தருவேன்னு சொல்றாறே!
 
10. தலைவர் பேசுனத கேட்டு மக்கள் விழுந்து விழுந்து சிரிச்சாங்களா? ஏன்?
   நாங்க ஆட்சிக்கு வந்தா மின்வெட்டே இருக்காதுன்னு சொன்னாராம்!

11.எல்லா நடிகைகளும் சாமியார் பின்னாடி சுத்தறாங்களே ஏன்?
   மாமியார் பிரச்சனை இருக்காதுன்னுதான்!

12. டீவி டாக் ஷோ  நடத்துனவரை கட்டிக்கிட்டது தப்பா போச்சு!
ஏன்?
 பேசிகிட்டே இருக்கும் போது விளம்பர இடைவேளைன்னு வெளியே கிளம்பிடறாரு!

13.டான்ஸ் மாஸ்டரை லவ் பண்ணாங்களே நடிகை கல்யாணமாயிடுச்சா!
  அந்த லவ் உடான்ஸ் ஆயிடுச்சு!

14. இடைத் தேர்தல்ல போட்டியிட போறதில்லைன்னு தலைவர் சொல்லிட்டாரே ஏன்?
 விடை தெரிஞ்சே ஏன் பரிட்சை எழுதணுங்கிறதுதான்!

15. தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பா போச்சு!
    ஏன் என்ன ஆச்சு!
   வீட்டு பக்கத்துல மெடிக்கல் ஸ்டோர் ஒண்னு ஓபன் பண்ணிட்டார்!

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்து கமெண்ட் செய்யலாமே!
                      

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2