யோகா உலக கோப்பை: தங்கம் வென்ற கும்மிடி பூண்டி பள்ளி மாணவன்
தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக யோகா போட்டியில், இந்தியா சார்பில்
பங்கேற்று தங்கம் வென்ற மாணவனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே, ஆத்துப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன், ஷகிலா தம்பதியர் மகன் பிரவீன், 12. கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பிற்கு தேர்ச்சி பெற்றுள்ள மாணவன்.அதே பகுதியில் உள்ள கைரளி யோகா மையத்தில், நான்கு ஆண்டுகளாக யோகாசன பயிற்சி பெற்று வருகிறார். கடந்த வாரம் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் பசிபிக் - ஆசியா யோக விளையாட்டு சம்மேளனம் சார்பில் நடந்த 20-20 யோக உலக கோப்பை போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க பிரவீன் தேர்வானார்.ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவன் என்பதால் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., சேகர், டி.ஜே.எஸ்., கல்வி குழுமம் உள்ளிட்டவர்களின் உதவியால் யோகா உலக கோப்பையில் பிரவீன் பங்கேற்றார்.மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் நடந்த தகுதி சுற்றுகளில் வெற்றி பெற்ற பிரவீன் தாய்லாந்து நாட்டில் நடந்த இறுதி சுற்றுக்கு தேர்வானார். ஆஸ்திரேலியா, சீனா, நார்வே, பின்லாந்து, ரஷ்யா, பெல்ஜியம், ஜப்பான், எகிப்து, மலேசியா உள்ளிட்ட, 17 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இறுதி சுற்றில் கலந்து கொண்டனர்.
வயது வாரியாக நான்கு பிரிவு போட்டிகள் நடத்தப்பட்டன. 10 வயது முதல் 15 வயது பிரிவில் பிரவீன் பங்கேற்றார். இரண்டு நிமிடங்களில் 20 யோகாசனம் என்ற 20-20 உலக யோக இறுதி போட்டியில் பிரவீன் தங்கம் வென்றார்.இந்தியா சார்பில் பங்கேற்று தங்கம் வென்ற ஆத்துப்பாக்கம் கிராம மாணவனுக்கு, கிராம மக்கள் ஒன்று திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். கடந்த ஆண்டு தாய்லாந்து நாட்டில் ஆசிய அளவில் நடந்த யோகாசன போட்டியில், பிரவீன் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

டிஸ்கி} தங்கம் வென்ற மாணவனுக்கு வாழ்த்துக்கள்! திறமையான இம்மாணவனை பொது நல அமைப்புக்கள் தத்தெடுத்து இந்தியாவின் திறமையை உலக அரங்கில் பறை சாற்ற உதவலாமே! இந்த செய்தியை படிக்கும் வாசகர்களும் தங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்தி இந்த மாணவனுக்கு உதவலாமே!
தகவல் உதவி} தினமலர்
தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்து கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள் அன்பர்களே!
Comments
Post a Comment