அம்மா எனை வாழ்த்திடு! அன்னையர் தின கவிதை!

அன்னையர் தின கவிதை!   அம்மா எனை வாழ்த்திடு!

எண் சாண் வயிறினிலே
எட்டிஉதைத்த என்னை
பத்துமாதம் சுமந்தாய்!
நான் உருவாகும் வேளையிலே
உன் உடல்வலிகள் பொறுத்தாய்!
உண்டிட்ட உணவை எல்லாம்
எனக்காக நீ எடுத்தாய் வாந்தி!
ஒருக்களித்துபடுத்து என் சுவாசம் காத்தாய்!
புள்ளைக்கு ஆகாதென
புதுத் துணி நீ தவிர்த்தாய்!
மேடிற்ற வயிறை தடவியே மகிழ்ந்தாய்!
மூடிவைத்த சிப்பிக்குள் முத்தாய் எனை நீ காத்தாய்!
பிரசவ வலி எடுத்து நீ துடித்த வேளையிலும்
பிஞ்சு நான் உதித்ததும் உன் வேதனைகள் மறந்தாய்!
பாலூட்டி சீராட்டி பாசமுடன் வளர்த்தாய்!
பிள்ளைக்கு பிடிக்குமென பிரமாதமாய்
நீ சமைப்பாய்! அன்றைக்கு பிடிவாதமாய்
நண்பண்வீட்டில் சாப்பிட  உன் முகம் வாடும்!
தந்தையின் கோபத்திற்கு
தடுப்பணை நீ போட்டாய்!
இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் நீ
எனை காப்பாய்!
பிள்ளைக்கு தாய்தானே கடவுள்!
உன் பசியை மறைத்து என் பசி
தீர்த்திடுவாய்! என் மனதை நீ
படம் போல படித்திடுவாய்! உன்
ஆசை என்னவென்று நானறியும் முன்னே
என்  தேவை நீ பூர்த்தி செய்தாய்!
உலகத்தில் ஓர் ஆயிரம் உறவிருந்தாலும்
உயிர்தந்த அன்னை  உன் னை நான் மறக்க இயலுமா?
உலகாளும் மன்னருக்கும்  உயர்ந்தவள்
உய்வித்த அன்னை அன்றோ?
அன்னையர் தின நாளில் அடிபணிகிறேன் 
அம்மா எனை வாழ்த்திடுவீரே!

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்யலாமே! திரட்டிகளில் வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Comments

  1. அன்னையர் தின நாளில் அடிபணிகிறேன்

    இனிய் அன்னையர் தின வாழ்த்துகள்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா?