கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 79
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 79
1.
என்ன
சொல்றீங்க உங்க வொய்ஃப் முழு அடைப்பு போராட்டத்திலே இறங்கிட்டாங்களா?
சரக்கு அடிச்சுட்டு வீட்டுக்கு போனா கதவை அடைச்சிட்டு
திறக்க மாட்டேங்கிறாளே!
2.
தலைவர்
வீட்டுல ரெய்டுல நிறைய “ப்ளாக் மணி” சிக்கிருச்சாமே அப்புறம் என்ன ஆச்சு?
கட்சியை விட்டு”ப்ளாக்” பண்ணிட்டாங்க!
3.
உள்ளாட்சி
தேர்தலுக்கான வேலைகள்ல தலைவர் மும்முரமா இறங்கிட்டாரா எப்படி?
ரெண்டு
கண்டெயினர் லாரிகளை முன்கூட்டியே புக் பண்ணி வைச்சிருக்காரே!
4.
அந்த
டாக்டர் போலி டாக்டர்னு எப்படி சொல்றே?
உடம்பு கொஞ்சம் வீக்கா இருக்கு டாக்டர்னு சொன்னா
டவர் கிடைக்க அப்பப்ப வெளியே வரணும்னு சொல்றாரே!
5.
வேலைக்காரியை
சேர்த்து விட்டதுக்கு உன் பொண்டாட்டி கோபிச்சுக்கிட்டாங்களா ஏன்?
வாட்சப்
குருப்ல இல்லே சேர்த்துவிட்டேன்!
6.
சுயம்வரத்தை
திருத்து என்று பேஸ்புக்கில் மெசேஜ் வருகிறதே இளவரசிக்கு சுயம்வரம் எதுவும் நடத்தவே
இல்லையே மந்திரியாரே!
மன்னா அது சுயம்வரம் இல்லை! சுயவிவரம்!
7.
ரத
கஜ துரக பதாதிகள் எல்லாம் எங்கே போய்விட்டார்கள்…?
வாட்சப்
குருப் சாட்டிங்கிற்கு போய் விட்டார்கள் மன்னா!
8.
புலவர்
ஏன் வருத்தமாய் இருக்கிறார்?
மன்னரை
பாடி பரிசில் கேட்டதற்கு ஆதார் அட்டையை கேட்கிறார்களாம்!
9.
நம்ம
தலைவர் கட்சி பேதம் எல்லாம் பார்க்க மாட்டார்!
அதான் பல கட்சிகள்ல பல பதவிகளை அனுபவிச்சிட்டு வந்தாரா?
10. மாப்பிள்ளை ரொம்பவும் தமிழ் உணர்வு மிக்கவர்!
அதுக்காக விருந்துல மைசூர் பாக்கு போடக்கூடாது மதுரை
பாக்குதான் போடனும்னு சொல்றது நல்லா இல்லை!
11. கொள்ளையடிக்கிறதுக்கு வசதியா வீட்டை திறந்து
போட்டுட்டு எல்லோரும் என்ன பண்ணிகிட்டு இருந்தீங்க?
போக்கிமான்
கோ விளையாடிக்கிட்டு இருந்தோம்!
12. மாப்பிள்ளை தொழில்ல அள்ளிக்குவிக்கிறார்னு
சொல்றீங்களே என்ன தொழில் செய்யறார் தரகரே!
குப்பை அள்ளறதுதான்!
13. அந்தப்புரத்திற்கு தினமும் ராப்பொழுதில்
சென்றாயாமே ஏன்?
அங்க 4ஜி சிக்னல் கிடைச்சுது மன்னா!
14. என் பொண்ணு கண்ணுல தண்ணியே பார்க்க முடியாதுன்னு
சொல்றியே மாப்பிள்ளை அவ்ளோ நல்லவரா?
இல்லை இல்லை மாப்பிள்ளை கர்நாடகா காரர்!
15. ஒத்துவரலைன்னா கல்யாணத்தை கேன்சல் பண்ணிடலாம்னு
சொல்றீங்களே எதுக்கு ஒத்து வரலை?
மேளக்கச்சேரிக்கு ஒத்து ஊதறவர் வரலையாம்!
16. எவ்வளோ நேரமா முயற்சி பண்றேன் ஏடி.எம். ல
இருந்து பணம் எடுக்க முடியலையே!
நல்லா பாருங்க! நீங்க ஏடி.எம் மிசின்ல சொருகியிருக்கிறது
ஏடி.எம் கார்டு இல்லை ஆதார் கார்டு!
17. வீடு புகுந்து கேக்காம கொள்ளாம சக்கரையை
எடுத்துக்கிட்டு போறியே நியாயமா இருக்கா?
நீங்கதானே சொன்னீங்க பொழுது சாஞ்சப்புறம் எதுவும்
கடன் கேட்டு வந்து நிக்காதேன்னு!
18. எதிரி பயங்கர டெரராக இருப்பான் போலிருக்கு
மன்னா!
எப்படி?
பாதாளச்
சிறையில் வாட்சப் வீடியோக்களாக போட்டு தெறிக்க விடுகிறானாம்!
19. புலவர் பாடும் போது தாளம் தப்புகிறது மன்னா!
நாம் தான் தப்பிக்க முடியவில்லை! பாவம் அதாவது
தப்பித்து போகிறது விட்டுவிடுங்கள் மந்திரியாரே!
20. எதிரி கண்ணாமூச்சி ஆடுகிறான் மன்னா!
அது ஓல்டு ஆட்டம்! நான் போக்கிமான் ஆடுகிறேன் தளபதியாரே!
தங்கள்
வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
super jokes :)
ReplyDeleteஅனைத்தையும் ரசித்தேன் சுரேஷ்.
ReplyDeleteஅனைத்தையும் ரசித்தேன். அருமை. கன்டெய்னர் இங்கேயுமா?
ReplyDeleteஅனைத்தும் ரசித்தேன்.....
ReplyDeleteரசித்தேன் சகோதரா...
ReplyDeleteவிரைவில் தொகுப்பாக்குங்கள்...
20 நகைச்சுவை என்பதை 10 என்று ஆக்கினால் பதிவும் ரெண்டாகும் படிக்கவும் நீளம் குறைவாய் இருக்குமே... இது எனது கருத்துத்தான்...