கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 90

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 90

 

1.   என்னது?மன்னருக்கு அவை’நடுக்கம்” அதிகமா? என்ன சொல்கிறீர்கள் மந்திரியாரே?
நன்றாக கவனியும் ராணியார் அருகில் இருக்கையில் அவர் கால்கள் உதறிக்கொண்டிருப்பதை கவனியும் தளபதியாரே!

2.   கூட்டணியில இருந்து தலைவர் திடீர்னு தலைவர் விலகிட்டாரே ஏன் ?
கூட்டணிக்காக “உடைச்சவரைக்கும்” போதும்னு சொல்லி அனுப்பிட்டாங்களாம்!
 
3.   கட்சியிலே ஒரு நியு எண்ட்ரிக்குத்தான் நாங்க பொதுச்செயலர் பதவி கொடுத்து இருக்கோம்!
அப்ப அவர் “புதுச்செயலர்”னு சொல்லு!

4.   மன்னா மக்கள் எதிரிக்கு விலை போய் விட்டார்கள்?
எப்படி?
நம் ஏ.டி.எம்களில் எதிரி அவனது பணத்தை நிரப்பி விட்டான் மன்னா!

5.   அந்த கோயில்ல குருக்கள் ட்ரெண்டியா இருக்காரு!
எப்படி சொல்றே?
காணிக்கை வாங்கிறதுக்கு ஸ்வைப்பிங் மிஷினோட இருக்காரே!

6.   மன்னரின் உடை வாளை எவனோ திருடி விட்டானாம்!
யார் அந்த கூறு கெட்டப் பயல்?

7.   தலைவர் எதுக்கு தொண்டர்களை துடுப்புகளோடு படையெடுத்து வாங்கன்னு அறிக்கை விட்டிருக்கார்!
கட்சியை கரை சேர்க்காம விடமாட்டாராம்!
 
8.   எதிரி வர்தாவாய் வந்து கொண்டிருக்கிறானாம் மன்னா!
நாம் “நடா” வாய் காணாமல் போய்விடுவோமா மந்திரியாரே!

9.   ஜல்லிக்கட்டுக்கு ஆதரவா பேசிக்கிட்டிருந்த தலைவர் இப்ப வாயே திறக்க மாட்டேங்கிறாரே!
இப்பவெல்லாம்  தினமும் கட்சிக்காரங்களோட மல்லுக்கட்டவே நேரம் பத்தலையாம்!

10.  நீங்கள் புறாக்களை சமைத்து சாப்பிடும் விஷயம் எதிரிக்கு தெரிந்துவிட்டது போலிருக்கிறது மன்னா!
எப்படி?
புறாவுக்கு பதிலாக கோழியின் காலில் செய்தி கட்டி அனுப்பி இருக்கிறானே!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!Comments

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா?