சென்ற வார பாக்யா ஜனவரி 20-26 இதழில் என் ஜோக்ஸ்!

இந்த வாரமும் பாக்யாவில் எனது ஜோக்ஸ்கள் பிரசுரமாகி மகிழ்ச்சியைத்தந்தன. திங்கள் அன்றே புத்தகம் வாங்கிவிட்டாலும் அன்று போனவார ஜோக்ஸ்களை பகிர்ந்து கொண்டதால் இரண்டு நாட்கள் தள்ளி இன்று ஜோக்ஸ்களை பகிர்ந்து கொள்கிறேன்.

பாக்யா தவிர்த்து, குமுதம், விகடன், கல்கி, குங்குமம் இந்து போன்ற இதழ்களுக்கும் படைப்புக்கள் அனுப்பி வருகிறேன். விகடன், குங்குமம் போன்ற பாரம்பரிய இதழ்களில் நகைச்சுவை துணுக்குகள் குறைந்து விட்டது. குங்குமத்தில் இரண்டு வாரங்களாய் நகைச்சுவை துணுக்குகளே வரவில்லை! விகடனில் அதிகபட்சமாய் நான்கு அல்லது ஐந்துதான் வருகின்றது. அந்த வகையில் பாக்யாவில் சன்மானம் வராவிட்டாலும் நிறைய துணுக்குகள் பிரசுரம் ஆகின்றன. 
  ஈன்ற பொழுதும் பெரிதுவக்கும் தன் மகனை 
 சான்றோன் எனக்கேட்ட தாய்!    
               என்பது போல நமது துணுக்குகள் வலைப்பூவில் எழுதி வெளியிட்டு இருந்தாலும் பலரின் பாராட்டுதல்கள் பெற்றிருந்தாலும்  அச்சு ஊடகத்தில் வரும்போது ஒரு தனி மகிழ்ச்சி கிடைக்கிறது. கல்கி கேள்வி பதில் பகுதியிலும் இந்த வாரம் என்னுடைய கேள்வி இடம் பெற்றிருந்தது. இப்படி பத்திரிக்கைகளில் எழுத வேண்டும் என் பெயர் இடம்பெற வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது நிறைவேறிக்கொண்டிருப்பதில் மகிழ்ச்சி.

  ஜோக்ஸ்களை பிரசுரித்த பாக்யா ஆசிரியர் குழுவினர், தொடர்ந்து ஊக்கப்படுத்தும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழும நண்பர்கள். வலைப்பூ நண்பர்கள், குடும்பத்தினர்  அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

ஜோக்ஸ்கள் கீழே!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. உங்களின் ஆசை விரைவில் நிறைவேறட்டும்... வாழ்த்துகள்...

  ReplyDelete
 2. வணக்கம்
  ஐயா

  இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. ஏட்டில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்
  அருமையான நகைச்சுவைகள்

  ReplyDelete
 4. பாக்யா இதழையே வாங்கி உங்கள் நகைச்சுவைகளைப் பார்த்து ரசித்தேன். பாராட்டுகள். தொடருங்கள்.

  ReplyDelete
 5. சில்லறைத் தனமான ஆசை "சில்லறை"த் தனமா எல்லாம் இல்லை! நல்லாவே இருக்கு!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2