தளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்!
1.  
காய்ந்தவயல்கள்!
எரிந்து போனது 
உழவன் உயிர்!
2.  
தடுத்தார்கள்
உடைபட்டது
ஜல்லிக்கட்டு!
3.  
ஈரம்
கசிகிறது!
விழிகளில் கண்ணீர்!
4.  
ஊடுறவல்
தெரிந்தும் தடுக்கவில்லை!
விழிகள்!
5.  
கிராமங்களின்
அழகு!
மறைத்துக் கொண்டிருந்தன!
தொழிற்சாலைகள்!
6.  
விடியவிடிய
உறங்கியே கிடக்கிறது!
அறியாமை!
7.  
துணை
வந்தவன்
கழட்டிவிடப்படுகிறான்
வாசலில் காலணி!
8.  
நீரோடவில்லை!
வேறோடாமல் போனது!
விவசாயம்!
9.  
தூக்கில்
தொங்கியவர்களை
மீட்டெடுத்தான் வாசகன்!
வாரப்பத்திரிக்கைகள்!
10. நிலவு வந்ததும்
புன்னகைத்தன 
அல்லிமலர்கள்!
11. விளைந்த முத்துக்கள்!
    களவாடியது சூரியன்!
      பனித்துளி!
12. கயிறு இல்லாமல்
   ஊஞ்சல் கட்டியது!
   சிட்டுக்குருவி.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை
பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
 



 
 
அருமை
ReplyDeleteஅனைத்தும் அருமை நண்பரே...
ReplyDeleteஅழகு வரிகள் ...
Simply superb
ReplyDeleteஅருமை சுரேஷ் அதுவும் 12 டாப்...
ReplyDeleteரசித்தேன்...
ReplyDeleteஅனைத்தும் அருமை....
ReplyDeleteஓவ்வொன்றும் அருமை. குறிப்பாக "விடிய விடிய உறங்கி கிடக்கிறது அறியாமை" மிக அற்புதம்..!
ReplyDeleteஊடுறுவல் - ஊடுருவல் எது சரி?
எல்லாம் நன்று. ஊடுருவல் தான் சரி, தங்கம் பழனி!
ReplyDelete