நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்!
நொடிக்கதைகள்!
பகுதி 28
1.
பதுக்கல்!
“ இப்படி அவனவன் கட்டுக்கட்டா புதுநோட்டை பதுக்கி
வைச்சிட்டான்னா அப்புறம் சாமான்யனுக்கு எங்க சார் பணம் கிடைக்கும்?” என்றவர் வங்கியில்
இருந்து எடுத்து வந்த நோட்டை செலவழிக்கத் தயங்கி அப்படியே எடுத்து பீரோவில் வைத்தார்.
2.
கோணம்!
புயல் நகரையே அழிச்சிட்டு போயிருச்சு! எல்லா மரமும்
சாய்ஞ்சு போச்சு! எல்லாம் நாசம்! என்று சொன்னவரை மறித்து “நமக்கு பழைய நினைவுகளை கிளறி கொடுத்துட்டு போயிருக்கு இயந்திரமாய்
சுழன்றவர்களை கொஞ்சம் மனிதனாய் மாற்றியிருக்கு என்றார் மற்றவர்!
3.
ஆப்பு!
வார மாத இதழ்களை செல்போன் ஆப்பில் படித்துக் கொண்டிருந்தார்
அப்பா!
4.
படிப்பு
வாசனை!
பெட்டிக்கடையில்
தினசரி வார இதழ்களை விற்றுக்கொண்டிருந்தவரிடம் புத்தகத்தை வாங்கி இதுல என் கவிதை வந்திருக்கு
இதோ பாருங்க! என்று ஆசையோடு காண்பிக்கையில் “எனக்கு எழுத படிக்க தெரியாது தம்பி!” என்றார்!
5.
பாலாபிஷேகம்!
தன் அபிமான நடிகரின் கட்-அவுட்டிற்கு குடம் குடமாக
பாலாபிஷேகம் நடத்திக்கொண்டிருந்தவன் குழந்தை பாலுக்கு அழுது கொண்டிருந்தது.
6.
கெட்ட அங்கிள்!
கடைசிவரை செல்போன் லாக் ஓப்பன் செய்து கொடுக்காத
நண்பர் எழுந்து சென்றதும் குழந்தை சொன்னது அந்த அங்கிள் ரொம்ப கெட்ட அங்கிள் போனே விளையாட
கொடுக்கலை!
7.
நடிப்பு!
அறுபதை கடந்த போதும் பதினாறோடு டூயட் பாடிக்கொண்டிருந்தவரை
ரசித்துக் கொண்டிருந்தனர் ரசிகர்கள்!
8.
மெத்தை!
ஊர் ஊராய் சுற்றி மெத்தை வியாபாரம் செய்து வீடு
திரும்பியவன் படுத்து உறங்கினான் கட்டாந்தரையில்!
9.
பாரம்!
மூட்டை தூக்கியவன்
வலி மறக்க குடித்துவிட்டு வீடு செல்ல அவனையும் சேர்த்து சுமந்தவள் குடிக்க கஞ்சி கூட
பிடிக்காமல் வெறுமனே படுத்தாள்.
10. செல்ஃபி!
திருமண மண்டபத்தில் மணமக்களோடு செல்ஃபி எடுத்துக்
கொள்ள முண்டியடித்துக் கொண்டிருந்தது கூட்டம்.
11. பைத்தியங்கள்!
என் பொண்டாட்டி
ஒரு சீரியல் பைத்தியம்! என்று சொல்லிக்கொண்டிருந்தவரின் பொண்டாட்டி என் புருஷன் ஒரு
வாட்சப் பைத்தியம் என்று சிநேகிதியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.
12. சபதம்!
வருடம் ஆரம்பிக்கையில் போட்ட சபதம் நிறைவேறாமலே
புது ஆண்டு பிறக்க பழைய சபதம் காலாவதி ஆகி புது சபதம் பிறப்பெடுத்து விட்டது.
தங்கள் வருகைக்கு
நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
அனைத்தையும் ரசித்தோம்.
ReplyDeleteபல உண்மைகள்...
ReplyDeleteஅருமை.
ReplyDeleteஅனைத்தும் அருமை.... பாராட்டுகள்.
ReplyDeleteமுதல் இரண்டும் நடைமுறையைச் சொல்கிறது. அனைத்தும் அருமை.
ReplyDeleteஅனைத்தும் அருமை
ReplyDelete