தளிர் ஹைக்கூ கவிதைகள்!தளிர்  ஹைக்கூ கவிதைகள்!

ஓய்வின்றி
சுற்றி வருகின்றன
கடிகாரமுட்கள்!

நிலவு தேய தேய
ஒளி இழக்கிறது
பூமி!

இரைச்சலில்
தொலைந்து போனது
மவுனம்!

காற்றை விற்று
சோறு வாங்குகிறான்
பலூன் விற்பவன்.

நெஞ்சில் ஏறிமிதித்தும்
அழவில்லை அப்பா
குழந்தை!


கருப்பு போர்வையில்
சிகப்பு பொட்டுக்கள்!
நட்சத்திரங்கள்!

வயிற்றில் நெருப்பு
எரியாமல் உலவுகிறது
மின்மினி!

வீடு சுத்தமானது
வீதிக்கு வந்தது
துடைப்பம்!

வானவெளியில்
நகரும் ஓவியம்
மேகம்!

விட்டுப் போக நினைக்கையில்
விடாமல் துரத்துகிறது!
நினைவுகள்!

நீண்ட நேரம் ஓடியும்
மூச்சிறைக்கவில்லை!
மின்விசிறி!

பகலில் வெளிச்சத்தை
தொலைத்தன
மின்விளக்குகள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!.

Comments

 1. அருமையான கைக்குக் கவிதைகள் .பகிர்வுக்கு மிக்க நன்றி
  தொடர வாழ்த்துக்கள் சகோ .

  ReplyDelete
 2. நீண்ட நேரம் ஓடியும்
  மூச்சிறைக்கவில்லை!
  மின்விசிறி!

  பகலில் வெளிச்சத்தை
  தொலைத்தன
  மின்விளக்குகள்!

  ரசித்தேன் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. #இரைச்சலில் தொலைந்து போனது மவுனம்
  நெஞ்சில் ஏறி மிதித்தும் அழவில்லை அப்பா குழந்தை#

  -சூப்பரான ஹைகூக்கள் வண்ணப் பூக்கள்

  ReplyDelete
 4. வானவெளியில்
  நகரும் ஓவியம்
  மேகம்!//

  ரசித்தேன்..ருசித்தேன்..
  தளிர்தேன்!

  ReplyDelete
 5. சூப்பருங்கோ!

  ReplyDelete
 6. //
  நீண்ட நேரம் ஓடியும்
  மூச்சிறைக்கவில்லை!
  மின்விசிறி!
  //

  அழகு!

  ReplyDelete
 7. கவிதை அருமை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. அழ்கிய கவிதை
  எளிமையான நடையில்
  அதுவே தளிரண்ணாவின்
  சிறப்பு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. ஆழமான சிந்தனையில் விளைந்த
  கவிதைகள் அருமையிலும் அருமை
  குரிப்பாக மின்மினிப் பூச்சிகளும் மின் விசிறிகளும்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. குட்டி குட்டியாய் கவிதைகள் அழகு

  ReplyDelete

 11. காற்றை விற்று
  சோறு வாங்குகிறான்
  பலூன் விற்பவன்.ஃஃ
  அருமைஅருமை.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. அருமையான கைக்குக் கவிதைகள் .பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா

  ReplyDelete
 13. கருத்திட்ட அனைவருக்கும் எனது நன்றிகள் தோழர்களே!

  ReplyDelete
 14. அருமையாகவுள்ளது. தொடருங்கள்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா?