வருஷத்துக்கு ஆறு சிலிண்டர்தான்! மண்ணுமோகன் ஆப்பு!
மண்ணு மோகன் சிங்கு கையில ஆட்சிய கொடுத்திட்டு படாத பாடு பட்டுகிட்டு இருக்கோம் நாம! ஆவுன்னா வெளிநாடுக்கு போயி சுத்தி பாத்துட்டு ஜாலியா இருக்கிற மனுசன் இப்ப நம்ம ஜனங்களுக்கு வெச்சிட்டாருப்பா பெருசா ஆப்பு!
ஒரு வாரமாவே பெட்ரோல் உயருது காஸ் விலை உயருது! டீசல் விலை உயருதுன்னு பேச்சா இருந்தது. நேத்து நம்ம மண்ணு மோகனு திடீர்னு ஒரு அறிவிப்பை வெளியிட்டு ஆப்பு வெச்சிட்டாரு! நடுத்தர மக்கள் பாடு இனி அதோ கதிதான்!
பொருளாதார மாமேதையான அவரு கண்டு பிடிச்சு வெளியிட்ட அறிவிப்புல
டீசல் விலையை லிட்டருக்கு அஞ்சு ரூபா உயர்த்திட்டாரு! ஏற்கனவே காய்கறி மளிகை பொருட்கள் விலை தாறுமாறா இருக்கு! இப்ப பண்டிகை காலம் வேற ஆரம்பிக்க போற சமயத்திலே இன்னும் தாறுமாறா விலை ஏறப்போகுது இந்த அறிவிப்பால!
அதோடு விட்டிருந்தா பரவாயில்லை! நம்ம சோத்துக்கும் உலை வச்சிட்டாரு மன்னு மோகனு! இனிமே வருசத்துக்கு ஆறு சிலிண்டர் மட்டும் தான் மானிய விலையில தருவாராம்! ஏழாவது சிலிண்டர்ல இருந்து மானியம் இல்லாமத்தான் தருவாராம்!
மானிய விலையில் அரசு தரும் சிலிண்டரின் விலை 386.50. இது ஏஜென்சிகளை பொருத்து 450 ரூ வரை விற்கப்படுகிறது! ஏழாவது சிலிண்டர் வாங்குனும்னா 733. 50 கொடுத்து வாங்கணும்! நம்ம எஜென்சி காரங்க ரவுண்டு பண்ணி 750 ஆக்கிடுவாங்க! ஏறக்குறைய இரு மடங்கு விலை! இதுல ஒரு சலுகையாம் இந்த விலை கொடுத்து எத்தனை சிலிண்டர் வேணும் னாலும் வாங்கிக்கலாமாம்! அடங்கொக்க மக்கா! 400 ரூபா கொடுத்து வாங்கவே கஷ்ட படற நடுத்தர மக்களை கொஞ்சமும் நினைச்சு பாக்காமா இந்த மன்னு மோகனு இப்படி பண்ணி போட்டாரே!
நல்லா வருவீங்கடா!
நடுத்தர மக்களுக்கு மேலும் மேலும் கஷ்டம்...
ReplyDeleteஎல்லாம் அனுபவித்துத்தான் ஆகனும் சார்
ReplyDeleteஏழைகள் வாழ்வில் என்றுமே போராட்டம்தான் !...:(
ReplyDeleteஓட்டு போட்ட விளைவு நம்மளையே இப்படி ஆட்டுகிறது....
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
ivanunga eppa than thiruthuvanga ....????
ReplyDeleteellorukume kastam thaan
ReplyDeleteஏஜென்சிக் காரங்க 750 ரூபாய் பண்ண மாட்டாங்க.... 800 ரூபாய் பண்ணிடுவாங்க!
ReplyDeleteஏழை மேலும் ஏழையாவான்!
ReplyDeleteவறுமை நம்முள் வசதியாய் வாழ்கிறது! எனும் வரிகள் ஞாபகம் வருகிறது!
ReplyDeleteகொடுமை.
ReplyDeleteஒரு நடுத்தர வர்க்க குடும்பத்திற்கு ஆறு சிலிண்டர்கள் போதும் என நான் நினைக்கிறேன்... தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் அய்யா???
ReplyDeleteஅந்த மனுசனும் பாவம். சோனியாவுக்கு தலையாட்டியே ஒன்ஜிபோய்ட்டார்...
வயிறு எரியுது
ReplyDelete//இதுல ஒரு சலுகையாம் இந்த விலை கொடுத்து எத்தனை சிலிண்டர் வேணும் னாலும் வாங்கிக்கலாமாம்!//
ReplyDeleteஆஹா, என்ன தாராளம்?