சோலார் ரிக்சா! கடலில் அடங்கும் ஆம்ஸ்ட்ராங்க்! கூகூள் டூடுல்! கதம்ப மாலை!
150கிமீ செல்லும் சோலார் ரிக்ஷா: திருப்பூர் பட்டதாரி கண்டுபிடிப்பு


ஒத்த பைசா செலவில்லாமல் 150கிமீ வரை செல்லும் புதிய சோலார் ரிக்ஷாவை திருப்பூரை சேர்ந்த பட்டதாரி வாலிபர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.
திருப்பூரை சேர்ந்தவர் சிவராஜ் முத்துராமன்(26). எம்பிஏ பட்டதாரியான இவருக்கு ஆட்டோமொபைல் துறை மீது அதீத ஆர்வம். தனது ஆர்வத்தை மனதில் போட்டு பூட்டாமல் செயல்வழியில் காட்ட எண்ணிய அவர் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத புதிய ஆட்டோரிக்ஷாவை வடிவமைத்துள்ளார்.
rickshaw gets an eco makeover

"ஈக்கோ ப்ரீ கேப்"(Eco free cab) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் ரிக்ஷாவில் 3 பேர் வரை பயணம் செய்யலாம். மூன்று மணிநேரம் சார்ஜ் செய்தால் 150 கிமீ வரை செல்லும் வசதிகொண்ட இந்த புதிய ரிக்ஷா அதிகபட்சம் மணிக்கு 45 கிமீ வேகத்தில் செல்லும். சூரிய மின்சக்தி தீர்ந்துவிட்டால் கூட சைக்கிளை ஓட்டுவது போன்று பெடலிங் செய்து ஓட்ட முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பு.
இதுகுறித்து சிவராஜ் கூறுகையில்," இந்த சோலார் ரிக்ஷாவை தயாரி்க்க மூன்று ஆண்டுகள் ஆனது. முதலில் பல தொழில்நுட்பக் குறைபாடுகள் எழுந்தன. அவற்றையெல்லாம் சரிசெய்து தற்போது இதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கிவிட்டேன். வணிக ரீதியில் அறிமுகம் செய்ய வேண்டுமானால் 80,000 ரூபாயில் விற்பனைக்கு கொண்டு வரலாம்.
இந்த ரிக்ஷாவுக்கு பராமரிப்பு செலவு முற்றிலுமாக இருக்காது. எனது இந்த கண்டுபிடிப்பக்கு இந்தியன் புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் கீழ் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய சோலார் ரிக்ஷாவை பெரு நகரங்களில் இயக்குவதற்காக போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் பேசி வருகிறேன்," என்று தெரிவித்தார்.
கார்பன் புகையால் திணறி வரும் பெரு நகரங்களுக்கு இந்த புதிய சோலார் ரிக்ஷா நிச்சயம் வரப்பிரசமாக இருக்கும் என்று கூறலாம்.


வாஷிங்டன்: மறைந்த விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்டிராங்கின் உடல் கடலில் அடக்கம் செய்யப்படவுள்ளது. இதை அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்டிராங். அமெரிக்கரான ஆம்ஸ்டிராங், தனது 82வது வயதில் மரணமடைந்தார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சின்சினாட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அப்போது அவரது மனைவி, பேரக் குழந்தைகள், குடும்பத்தினர், அவருடன் நிலாவுக்குச் சென்ற மைக்கேல் காலின்ஸ், பஸ் ஆல்டிரின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது ஆம்ஸ்டிராங்கின் உடல் கடலில் அடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் அறிவித்தனர். அமெரிக்காவில் கடற்படையில் பணியாற்றியவர்களின் உடல்கள் பொதுவாக கடலில்தான் அடக்கம் செய்யப்படுவது வழக்கம். குறிப்பாக சாதனையாளர்களின் உடல்களை கடலில் புதைப்பார்கள்.
ஆம்ஸ்டிராங்கும் ஆரம்பத்தில் கடற்படையில்தான் தனது பணியைத் தொடங்கினார். எனவே அவரது உடலையும் கடலிலேயே புதைக்கவுள்ளனர். இருப்பினும் எந்த இடத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது என்பது தெரிவிக்கப்படவில்லை.
இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் ஆம்ஸ்டிராங்கின் பேரக்குழந்தைகளில் ஒருவரான பைபர் வான் வேகனன் உருக்கமான உரை நிகழ்த்தினார்.
வாஷிங்டனில் செப்டம்பர் 12ம் தேதி ஆம்ஸ்டிராங்குக்கு இன்னொரு நினைவஞ்சலி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அவரது உடல் அடக்கம் நடைபெரும்.


டெல்லி: ஸ்டார் ட்ரெக் தொலைக்காட்சி தொடரின் 46வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி இன்றைய கூகுள் டூடுளில் அந்த தொடரின் கதாபாத்திரங்கள் வடிவில் டூடுள் போடப்பட்டுள்ளது.
ஸ்டார் ட்ரெக் என்னும் தொலைக்காட்சி தொடரை தேசிய ஒளிபரப்பு நிறுவனம்(என்.பி.சி.) 1966ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதி முதல் 1969ம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் தேதி வரை ஒளிபரப்பியது. இந்த தொடர் எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரபல அறிவியல் தொடர் ஒளிப்பரப்பட்டு 46 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைகிறது. இதை கௌரவப்படுத்தும் விதமாக இன்றைய கூகுள் டூடுளில் ஸ்டார் ட்ரெக் கதாபாத்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. கூகுளின் ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. கூகுளில் உள்ள ஜி என்ற எழுத்து ஸ்போக் கதாபாத்திரத்தையும், அடுத்து உள்ள இரண்டு ஓ எழுத்துக்கள் நியோடா உதுரா மற்றும் கேப்டன் ஜேம்ஸ் டி.கிர்க் கதாபாத்திரங்களையும் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. எல் ஹிகாரு சுலு கதாபாத்திரம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து எழுத்துக்களும் ஒரு ஸ்பேஸ் ஷிப்பில் இருக்கிறது. அதில் இ என்ற எழுத்தை கிளிக் செய்தால் அருகில் உள்ள சிவப்பு நிற கதவு திறந்து வேறு ஒரு அறைக்கு செல்கிறது. அங்குள்ள பட்டனை கிளிக் செய்தால் ஓ மற்றும் இ ஆகிய எழுத்துக்கள் வேறு கிரகத்திற்கு செல்கிறது.
அங்கு வரும் கார்ன் என்ற கதாபாத்திரத்தை ஆயுதம் மூலம் சுட்டுத்தள்ளிய பிறகு இ என்ற எழுத்து மீண்டு ஸ்பேஸ் ஷிப்பிற்கே வந்துவிடுகிறது.

போட்டோ கார்னர்!

 நன்றி} தட்ஸ் தமிழ். தினமலர்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள் நன்றி!

Comments

 1. லேட்டஸ்ட் தகவல் தந்து அசத்தியிருக்கீங்க தளிரண்ணா! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. Eco free cab -இது மாதிரி நிறைய பேர் சைக்கிள், ஸ்கூட்டர், ஆட்டோ எனச் சொல்கிறார்கள், ஏன் மார்கெட்டிற்கு வரமாட்டேன்கிறது என்பது மட்டும் புரியவில்லை.

  \\நீல் ஆம்ஸ்டிராங்-கடற்படையில் பணியாற்றியவர்:\\ இது ஒ.கே.
  \\நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்டிராங்.\\ இதுலதான் டவுட்டு. எனிவே, மறைந்த ஆன்மா சாந்தியடையட்டும்.
  மூன்றாவது செய்தி விளங்கவில்லை, சாரி.............

  ReplyDelete
 3. நல்லதொரு பகிர்வு. முதல் செய்தி எங்கள் பாசிடிவ் செய்திகளிலும் இடம் பெற்றிருந்தது! புகைப்படம் அருமை.

  ReplyDelete
 4. கதம்பம் அருமையாக தந்துள்ளீர்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.தொடருங்கள்

  ReplyDelete
 5. கதம்பம் வாசம் வீசுகிறது!!!

  ReplyDelete
 6. சோலார் ரிக்‌ஷா விற்பனைக்கு வந்தால் உண்மையிலேயே வரப்பிரசாதம்தான்...

  ReplyDelete
 7. திருப்பூர் அன்பரின் கண்டுபிடிப்பு பெருமை சேர்க்கிறது..எங்களுக்கெல்லாம்! தகவல்களுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 8. உண்மையில் பாராட்டவேண்டிய விஷயம் பகிர்வு க்கு அன்பு நன்றிகள் அண்ணா

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2