உலகின் சிறிய பைக்கும் ! கடவுள் நம்பிக்கையும்! கதம்ப மாலை!
உலகின் மிகச்சிறிய பைக்கை கர்நாடகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர்
வடிவமைத்து அசத்தியதோடு, அதில் ஒரு ரவுண்டும் வந்து எல்லோரையும் திரும்பி
பார்க்க வைத்துள்ளார்.
மைசூரை சேர்ந்தவர் சந்தோஷ். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் வெறும் 4 கிலோ மட்டுமே எடை கொண்ட எலக்ட்ரிக் பைக் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
மூஷிகா (மூஞ்சுறு) என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த பைக் 12 இஞ்ச் அகலமும், 18 இஞ்ச் உயரமும் கொண்டது. மணிக்கு 12 கிமீ முதல் 15 கிமீ வேகம் வரை செல்லும் திறன் பெற்றது. பேட்டரியில் இயங்கும் இந்த 4 கிலோ எடை கொண்ட பைக்கில் 70 கிலோ எடை கொண்டவர் அமர்ந்து ஓட்ட முடியும். இந்த குட்டி பைக்கை சமீபத்தில் ஓட்டி காட்டி அவர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். யூடியூபில் இதன் வீடியோ இருக்கிறது.
இந்த குட்டி பைக் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அத்தோடு, இந்தியன் புக் ஆஃப ரெக்கார்ட்ஸிலும் அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்த பைக்கை வடிவமைக்க 6 மாதம் ஆனதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கு 18,000 செலவானதாக தெரிவித்துள்ளார்.
வியத்தகு சாதனைதான்! ஆனா உபயோகப்படாத சாதனையாக அல்லவா இருக்கிறது!
""பணம் வேண்டாம். அப்பா தான் வேண்டும்,'' என, முதலிபட்டி ஓம்சக்தி பயர் ஒர்க்ஸ் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, நிவாரண நிதி வழங்கிய அமைச்சர்களிடம், சிறுமி அழுதது பரிதாபமாக இருந்தது.
பட்டாசு ஆலை வெடி விபத்தில் ,உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தலா ரூ.2 லட்சம் ரூபாயை அமைச்சர் பன்னீர் செல்வம் வழங்கினார். 34 குடும்பத்திற்கு நிதி வழங்கப்பட்டது. சிவகாசி ஆர்.டி.ஒ., அலுவலகத்தில் நிவாரண நிதி பெறுவதற்காக, பகல் ஒரு மணியளவில் இறந்தவர்களின் குடும்பத்தினர் அழைத்து வரப்பட்டனர். இரண்டாம்நாள் காரியங்களை முடித்த கையுடன் வந்தவர்களை, ஆர்.டி.ஒ., அறையில் அலுவலர்கள் அமர வைத்தனர். மாலை 5 மணிக்கு தான் அமைச்சர்கள் வந்தனர். அறையில் நுழைந்த அமைச்சர்களை கண்டதும், பாதிக்கப்பட்டவர்கள் கதறி அழுதனர். பின், ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு, நிவாரண நிதி வழங்கப்பட்டது.
தாயாருடன் வந்த ஒரு சிறுமி, ""எங்களுக்கு பணம் வேண்டாம். அப்பா தான் வேண்டும்,'' என கதறி அழுதது. அந்தக் குழந்தைக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் அமைச்சர்கள் தவித்தனர். நீண்ட நேர ஆறுதலுக்கு பின் குழந்தை பணத்தைப் பெற்றுக் கொண்டது. கணவரை இழந்த கர்ப்பிணி பெண், நிதி பெறும்போது கதறி அழுதார். கணவரை இழந்த சண்முகவள்ளி, மூன்று மகன்களுடன் நிதி பெற்றது உருக்கமாக இருந்தது. திருத்தங்கல் ஆதிலட்சுமி, இவரது தாய் லட்சுமி இருவரும் வெடி விபத்தில் உயிரிழந்தனர். இவர்களது நிவாரண நிதியினை வாங்குவதற்கு கூட, உறவினர்கள் யாரும் வரவில்லை. இது போல் விபத்தில் இறந்த மேற்கு வங்கம் கோல்கட்டாவை சேர்ந்த சுனில்,20, செல்லையநாயக்கன்பட்டியை சேர்ந்த மணி நிவாரண தொகை வாங்க யாரும் வரவில்லை. நிதியை வழங்கிய அமைச்சர்
பன்னீர்செல்வம், ""நிதியை வங்கியில் டெபாசிட் செய்து, குழந்தைகளின் கல்வி செலவுக்கு வைத்து கொள்ளுங்கள்,'' என்றார். சம்பிரதாயமாக நிதி வழங்கிய நிகழ்ச்சியை முடித்த அமைச்சர்கள், சிகிச்சை பெற்றவர்களுக்கு நிதி வழங்க மருத்துவமனைக்கு புறப்பட்டனர்.
நிதி வழங்கி விட்டால் போதுமா? அரசாங்கத்தின் கடமை தீர்ந்ததா? வாழ்வாதாரம் தரும் உருப்படியான சில பணிகளை செய்து விட்டு சம்பிரதாயமாக நிதி வழங்கி நீலிக் கண்ணீர் சிந்துவதை தவிர்க்க வேண்டும்! இது போன்ற விபத்துக்களை வரும் முன் காக்கும் விவேகத்துடன் அரசு செயல் ஆற்ற வேண்டும்!
:"ஆட்டிசம்' எனப்படும் உளவியல் ரீதியிலான குறைபாடு உள்ள பெண் ஒருவர், 1,500 துண்டுகள் புதிர் விளையாட்டு அட்டைகளை ஒன்று சேர்க்கும் திறன் பெற்றிருக்கிறார்.
"ஆட்டிசம்' எனப்படும் உளவியல் ரீதியிலான குறைபாடு, நோயாக கருதப்படவில்லை. குழந்தை பிறந்த மூன்றாண்டுகளுக்குள் இதற்கான அறிகுறிகள் தெரியும். இந்த குறைபாடு உள்ள குழந்தைகளிடம் உள்ள குணங்கள் பலவகையாக இருக்கும். இதை நிறப்பிரிகை குறைபாடு என்கின்றனர். அதாவது, இந்த குறைபாடு உள்ள ஒரு குழந்தையிடம் உள்ள குணங்கள், இதே குறைபாடு உள்ள மற்றொரு குழந்தையிடம் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.
இன்று, 166 குழந்தைகளில் ஒரு குழந்தை வீதம் இந்த குறைபாடு பரவி வருவதாகத் தெரிகிறது. அதேநேரம் குழந்தைகளை மட்டுமல்லாமல், வயதுக்கு வந்தவர்களையும் இந்தக் குறைபாடு தாக்க வாய்ப்புள்ளது. இவ்வகையில் பாதிக்கப்பட்டவர் தான்ஐஸ்வர்யா,30. அவரிடம் உள்ள சிறப்புத் திறன், புதிர் விளையாட்டு அட்டைகளை ஒன்று சேர்ப்பதுதான்.பொதுவாக, சராசரியான குழந்தைகள், 50 துண்டுகள் வரை ஒன்று சேர்ப்பர். அதற்கே மணிக்கணக்கில் ஆகிவிடும். ஆனால் "ஆட்டிசத்தால்' பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா, 1,500 துண்டுகளை ஒன்று சேர்க்கும் திறன் பெற்றிருக்கிறார்.
இவரது தாயார் கிரிஜா, இதுபற்றிக் கூறியதாவது:"ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியில் ஐஸ்வர்யாவை சேர்த்தேன். அங்கு சொல்லிக் கொடுக்கும் செயல்களை இவள் வீட்டிலும் செய்ய வேண்டும். அதற்காகவே நானும், சிறப்பு ஆசிரியர் பயிற்சி எடுத்தேன். இவளுக்கு, 10 வயது இருக்கும் போது, பள்ளியில் ஒரு நாள் புதிர் அட்டை பெட்டி கீழே விழுந்து விட்டது. பயந்து அழத்துவங்கியவள் பின், மெதுவாக ஒவ்வொரு புதிர் வடிவங்களுக்கான அட்டைகளையும் சரியான ஒழுங்கில் அடுக்கியிருக்கிறாள்.பத்து, இருபது அட்டை என துவங்கியவள் இன்று, 1,500 புதிர் அட்டைகளை சேர்த்து விடுகிறாள். தினமும் சிலமணி நேரம் இதற்காக செலவு செய்வாள். அது எப்போது வேண்டுமானாலும் இருக்கலாம். திடீரென்று, இரவு 2 மணிக்கு எழுப்புவாள். நாங்களும் கண்விழிப்போம். 500 அட்டைகளை இரண்டு நாளிலும், 1,000த்தை ஐந்து நாளிலும், 1,500 ஐ ஏழு நாளிலும் முடிக்கிறாள்.அதிக அக்கறை வேண்டும்ஏதாவது வேலை சொன்னால் செய்வாள். காய்கறிகளை ஒரே வடிவத்தில் வெட்டுவாள். ஆனால், அவளுக்கு தோன்றும்போது செய்வாள். ஐந்து குழந்தைகளை வளர்ப்பதும், இவளை வளர்ப்பதும் சமம். எப்போதும்ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். ஒரு நாள் கையில் வெட்டுப்பட்டது. துணி, மருந்து எடுத்து வந்தாள். ஆனால், எப்படி கட்டுவது எனத் தெரியவில்லை. இதுதான் இவளது குணம். "ஆட்டிசம்' குறைபாடுள்ள குழந்தைகளை பெற்றோர்தான், அதிக பொறுமையுடன் அக்கறை எடுத்து கவனிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஊனம் ஒரு தடையல்ல! எதையும் சாதிக்க முடியும்! என்று சாதிக்கும் இந்த பெண்ணின் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்!
நம்பிக்கை!
நாத்திகன் ஒருவன் மலை உச்சிக்கு செல்வதற்காக ஏறிக் கொண்டிருந்தான். திடீரென்று அவன் கால் வழுக்கியது. கீழே விழுந்தான். பாறையின் விளிம்பிற்கு மேல் நீட்டிக் கொண்டிருந்த வேரைப் பிடித்துக் கொண்டான். கீழே கிடுகிடு பள்ளம். விழுந்தால் எலும்புக் கூட கிடைக்காது.
வேரைப் பிடித்துக் கொண்டிருந்த அவனது பிடி நழுவிக் கொண்டிருந்தது. நடுங்கிய அவன் கடவுளே ! என்னைக் காப்பாற்று என்று வேண்டினான்.
எந்த உதவியும் வரவில்லை! நாத்திகன் உரத்த குரலில் கத்தினான். கடவுளே இனி உன்னை நான் முழுமையாக நம்புவேன். இவ்வளவு காலம் நம்பாமல் இருந்ததற்கு எனக்கு தண்டனையை தந்து விடாதே! என்னைக் காப்பாற்று! நீ என்ன சொன்னாலும் செய்கிறேன் என்றான்.
அப்பொழுது வானில் இருந்து ஒரு குரல் "நீ என்னை நம்ப மாட்டாய்! என்றது.
கடவுளே! உன்னை நம்புகிறேன். என்னைக் காப்பாற்று என்று வேண்டினான் அவன்.
உன்னைப் பற்றி எனக்கு தெரியும் நீ என்னை நம்ப மாட்டாய்! என்றது மீண்டும் குரல்.
கடவுளே என்னை கை விட்டு விடாதே! உன்னை முழுமையாக நம்புகிறேன்! என்று கெஞ்சினான் அவன்.
சரி! நீ பிடித்திருக்கும் வேரை விட்டு விடு! உன்னைக் காப்பாற்றுகிறேன் என்றது அந்த குரல்.
வேரை விட்டு விட்டால் நான் கீழே விழுந்து விடுவேனே என்றான் அவன்.
அதன் பிறகு அந்த குரல் கேட்கவே இல்லை!
நம்பிக்கையில்லா காரியம் வெற்றி அடையாது! கடவுளிடம் முழு நம்பிக்கை வைக்கவேண்டும்!
போட்டோ கார்னர்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப் படுத்துங்கள்! நன்றி!
தகவல் உதவி} தட்ஸ் தமிழ். தினமலர்.

சிறப்பு திறன்

ஆசிரியர் பயிற்சி

கதம்பமாலை மிகவும் அழகு சுரேஷ். கடைசிக்கதை சூப்பர். எதிலும் நம்பிக்கை வேண்டும்.
ReplyDeleteசெய்திகளை மாலையாக்கி..கண்காட்சியாக வழங்கியமை அழகு..வாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்ல கதம்பம்.
ReplyDeleteகதம்பம் அருமை...
ReplyDeleteமுதல் தகவல் வியப்பாக இருந்தது...
உங்களின் கருத்துக்கள் (Highlighted) அருமை...
கதம்ப மாலை நன்றாகத் தொடுத்து, அருமையாய் அளித்தமைக்கு பாராட்டுதல்கள்! பகிர்விற்கு நன்றி!
ReplyDeleteNAMBIKKAI STORY NANDRAGA ULLATHU
ReplyDeleteஅட
ReplyDeleteஇம்புட்டு தகவல்கள் ஒரே பதிவிலா..?
ReplyDeleteகதம்பமாகத்தந்துள்ளீர்கள். சில சாதனைகளும் வேதனைகளும் கலந்து வாசிக்கும்போது உருக்கமாகத்தான் உள்ளது. நம்பிக்கை கதையும் வெகு அருமை.
ReplyDeleteகதம்பாமாய் தகவல்கள் தந்துள்ளீர்கள். ஒரு சிறப்பான பகிர்வு.
ReplyDelete//பணம் வேண்டாம். அப்பா தான் வேண்டும் //
சிவகாசி தீவிபத்து வேதனையான சம்பவம்.
அந்த பெண்ணின் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்!
நம்பிக்கை கதை அருமை.
வியத்தகு சாதனை.
கதம்பம் கோர்த்த விதம் அழகும் வாசனையும்.நம்பிக்கை கடவுளிலோ எம்மிலோ ஆனால் முக்கியம் !
ReplyDeleteகதம்பமாய் பல தகவல்களைத் தந்துள்ளீர்கள்.சிவகாசிச் செய்தி மனதை வருத்துகின்றது
ReplyDeleteஅறிந்து கொண்டேன் தகவலுக்கு மிக்க நன்றி
ReplyDeleteNIJAM THAAN SATHIKKA VENDUM ENRAAL YAAR VENDUMANALUM SATHIKKALAM
ReplyDeleteNAMBIKKAI THAIRIYAM IRUNTHAAL POTHUM
அன்புடையீர் வணக்கம்.
ReplyDeleteசிவகாசி வெடி விபத்து மட்டுமல்ல இது போன்ற சம்பவங்கள் எங்கு எப்படி நடந்தாலும் வருந்த்தக்கதே,கண்டிக்கதக்கதே.
அதே சமயம் இது மாதிரி நடைபெறும் அசம்பாவிதங்களில் எல்லோரும் கிட்டதட்ட அனைவருமே அரசாங்கத்தைக் குறை சொல்வதே வாடிக்கை.அது எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி.
ஏன் மக்களாகிய நமக்கு பங்கு இல்லையா?
ஒரு வாதத்திற்கு பேசுவோம்.அரசாங்கமும் அதிகாரிகளும் தவறே செய்கிறார்கள்.ஆனால் மக்களாகிய நாம் சரியாக இருக்கலாமே? அங்கு பட்டாசுத் தொழிலை நடத்தும் அதிபர்களும் மக்கள்தானே.
நாம் நடத்தும் தொழிலை நியாயமாகவும்,நேர்மையாகவும் சட்டத்துக்கு உட்பட்டும் தான் இயக்குவேன் என மக்களாகிய நாம் முடிவு செய்து விட்டால் யாருக்கும் லஞ்சம் தந்து செயல்பட வேண்டியது இல்லையே?
ஒரு ரூபாய்க்கு பட்டாசு தயாரித்தால் மூன்று ரூபாய் இலாபம் என்ற பேராசைதானே இத்தனை உயிர் பலிகளுக்கு காரணம்.
ஒரு தொழிலாளி எட்டு மணி நேரம் வேலை,நியாமான கூலி,தகுந்த பாதுகாப்பு இருந்தால்தான் வேலை செய்வேன் என்று முடிவு செய்தால் மற்றொரு சக தொழிலாளி அதை விட குறைவாகவும்,எந்த கட்டுபாடும் இல்லாமல் வேலை செய்கிறேன் என போய் நிக்கிறான்.
அரசாங்கமும் அதிகாரிகளும் கடும் நடவடிக்கை எடுத்தால் அங்குள்ள மற்ற கட்சிகள் (ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும்) தொழிலாளிகளை முடிக்கிவிட்டு வேலை வாய்ப்பு இல்லை,பண்டிகை காலத்தை நாங்களும் எங்கள் குடும்பமும் எப்படி கொண்டாடுவது?சோற்றுக்கே வழி இல்லை என கோசம் போட வைக்கிறார்கள்.
ஆக இதற்கு நிரந்தர தீர்வு அனைவரும் பொறுப்பேற்கவேண்டும்.சட்டத்தின் விதிகளை கடுமையாக அனைவரும் பின்பற்ற வேண்டும்.
நன்றி.வணக்கம்.
கொச்சி தேவதாஸ்
உங்கள் கருத்துக்களொடு உடன் படுகிறேன் சார்! அரசை குற்றம் சொல்வதை விட்டு நாமும் திருந்த வேண்டும்! நன்றி!
Deleteபதிவை படித்து சுவைத்து கருத்திட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்!
ReplyDelete