தளிர் விருந்தினர் பக்கம்! “சண்டே கெஸ்ட்” சீர்காழி.ஆர்.சீதாராமன்
வணக்கம் வாசக நண்பர்களே! தளிர் வலைதளத்தில் உங்களை எல்லாம் தொடர்ந்து சந்திப்பதில் கொஞ்சம் சுணக்கம் ஏற்பட்டுவிட்டது. இனி சுணக்கம் விடுபட்டு தொடர்ந்து பதிவுகள் எழுத விரும்புகிறேன். ஏழு ஆண்டுகளை கடந்துவிட்ட தளிரில் கொஞ்சம் மாற்றங்களையும் புகுத்த விரும்புகிறேன். அதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமைகளில் விருந்தினர் பக்கமாக தளிரை மிளிர விட உள்ளேன்.
ஒவ்வொரு ஞாயிறன்றும் விருந்தினர் ஒருவரின் எழுத்துக்கள் தளிரில் இடம்பிடிக்கும்.அத்துடன் உங்கள் மனதினிலும் இடம்பிடிக்கும். விருந்தினர்கள் என் சக வலைப்பூ எழுத்தாளர்கள், மட்டுமில்லாமல் பிரபல பத்திரிக்கைகளில் எழுதும் சிலரும் இந்த பக்கங்களில் இடம் பெற உள்ளார்கள்.
நீங்களும் இந்தப்பகுதியில் உங்கள் படைப்புக்கள், கதை, கவிதை,ஜோக், கட்டுரை எதை வேண்டுமானாலும் எழுதலாம். உங்கள் படைப்புக்களை thalir.ssb@gmail.com என்ற முகவரிக்கோ அல்லது 7904596966 என்ற வாட்சப் எண்ணிற்கோ அனுப்பி வையுங்கள். உங்கள் பதிவுகள் சிறப்பாக இருப்பின் தொடர்ந்து தளிரில் பதிவிடப்படும்.
இன்றைய ஞாயிறு விருந்தினர்
சீர்காழி ஆர் .சீதாராமன். படிப்பு எம். இ. தெர்மல் .
பெரும்பாலான வார மாத இதழ்களில் நகைச்சுவை துணுக்குகளில் இந்தப்பெயரை அடிக்கடி கேள்விப்பட்டிருக்கலாம். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இவர் 1992ல் இருந்து பல பத்திரிக்கைகளில் ஜோக்ஸ், கவிதை, ஹைக்கூ, துணுக்குகள் என பல்சுவை பகுதிகள் எழுதி வருகிறார். தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவின் இரண்டாம் ஆண்டு சந்திப்பிற்கு பெரிதும் பங்காற்றியவர்.கும்பாபிஷேகங்கள் பலவற்றில் கலந்து கொண்டு உதவியுள்ளார். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளவர். வெள்ளி விழா படைப்பாளி சேவா பூஷண் விருது பெற்றுள்ளார் 3000 மேல் படைப்புக்கள் எழுதியுள்ளார். அவருடைய படைப்புக்கள் கீழே!
ஹைக்கூக் கவிதைகள்!
" எண்ணச் சிதறல்
இயலாமையின் பிறப்பிடம்
முதுமை "
" திரைமறைவில் சாமிக்கு நிவேதனம்
திறந்த வெளியில்
பிரசாதம் விநியோகம் "
" கோவில் கதவு அடைத்ததும்
உறங்க வழி கிடைத்தது
சாமிக்கு "
" வெற்றியின் நெடுநாள்
ரகசியம்
கடின உழைப்பு "
" வரவுக்கும் செலவுக்கும்
மோதல்
பற்றாக்குறை "
" அரிசி மூட்டையில் ஓட்டை
பசியாறியது
ஆயிரம் ஆயிரம்
ஜீவன் "
" மழை நின்ற பின்னும்
அடையாளம் காட்டியது
இலையில் வழியும் சொட்டு நீர் "
" வலியும் வேதனையும் புரிந்தது
வெளியில் தெரியவில்லை
பாவ மூட்டை "
" வானத்தில்
நவீன வளைவுகள்
அழகான வானவில் "
" மலையில் பொங்கி வழியும்
நெருப்புக் குழம்பு
எரிமலை "
" திகட்டாத தேன்
அமுதம்
மழலை ரசம் "
" நறுமணத்தின்
மொத்த ஏஜண்ட்
நந்தவன மலர்கள் "
" மனதில் நினைத்ததை
சொல்ல முடியாத தருணம்
மரண நேரம் "
" விழிகள் காட்டிய
புதிய பாதை
மலர்ந்த காதல் "
" எதிலும் முந்தி முந்தி போராட்டம்
இல்லாமையின்
வெளிப்பாடு "
" உறவுகள்
பிரிவுகள் தந்தது
அனுபவ பாடம் "
" வானத்தை பார்வையிட
புனித பயண வாகனம்
வானவூர்தி "
படைப்பாளரின் முகவரி:
- சீர்காழி.ஆர் .சீதாராமன் .
18 A . பட்டேல் தெரு .
தென்பாதி .சீர்காழி .
609 111 .
9842371679 .
தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்! நன்றி!

மிகவும் அருமை பாராட்டுக்குரியது
ReplyDeleteமிகவும் அருமை பாராட்டுக்குரியது
ReplyDeleteWeldon Mr.SITA
ReplyDelete_vasudev
என் இரு வார வெளியூர்ப் பயணத்திறகுப் பின் இன்று உங்கள் பதிவினைக் கண்டேன். உங்கள் வரவு நல்வரவாகட்டும். வலைப்பூவில் உங்களது பதிவுகள் தொடரட்டும். விருந்தினரை அறிமுகப்படுததியமைக்கு நன்றி. அவருக்கு பாராட்டுகள்.
ReplyDeleteவிருந்தினர் அறிமுகம். ஹைக்கூ கவிதையெல்லாம் அருமை.
ReplyDelete