தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

இருள்!
பெரிதாக்கி காட்டுகிறது!
தொலைதூர வெளிச்சம்!


பசி ஆறியதும்
அணைந்து போகிறது!
பற்றிய நெருப்பு!


கிழித்து எறியப்படுகிறது!
வாழ்ந்து முடித்த நாட்கள்!
நாட்காட்டி!


அடக்கி பழகுகிறார்கள்
பெண்கள்
கழிவறைஇல்லா பள்ளி!


விடிய விடிய கச்சேரி!
ரசிப்பதற்கு ஆளில்லை!
வயல் தவளைகள்!


வீழ்ந்ததும்
உயிர்த்தெழுந்தது பூமி!
மழைத்துளி!


இராப்பொழுதில் இடைவிடாத கச்சேரி!
கைதட்டல் வாங்கியது!
கொசு!


வீடு நிறைய வாசனை!
பரப்பிக்கொண்டிருக்கிறது!
கனிந்த பழம்!


ஈரக்கூந்தல்!
உதறின மரங்கள்!
மழை!


அழுக்கு சுமத்தியதும்
அழிந்து போனது
நதிகள்


இருண்ட பொழுது!
அழகாக்கின!
நட்சத்திரங்கள்!


மூடிய அறைக்குள்
கும்மாளமிட்டன 
கனவுகள்!


மொய்த்த கூட்டம்!
விரட்டி அடித்தான் பழக்கடைக்காரன்
ஈக்கள்!


தாழ்ந்தே இருக்கிறது
அன்னையின் மனசு!
குழந்தைக்கு துலாபாரம்!


 அழுதுகொண்டே
உறங்கிப்போனது!
குழந்தையின் பசி!

தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!

தளிரின் விருந்தினர் பக்கத்தில் உங்கள் படைப்புக்கள் இடம்பெற உங்களைப்பற்றிய ஓர் சிறு சுயவிவரத்துடன் உங்களின் படைப்பை 7904596966 என்ற வாட்சப் எண்ணிற்கு அனுப்பி வையுங்கள்! உங்கள் புகைப்படம் அனுப்ப மறக்க வேண்டாம்.  
உயின் பசி!

Comments

  1. மிக அருமையான ஹைக்கூ கவிதைகள். நச் என்று பொருளை உணர்த்துகிறது. நன்றி.

    ReplyDelete
  2. ரொம்ப நல்லாருக்கு சுரேஷ் வாழ்த்துகள்!

    இறுதி ரொம்பவே நல்லாருக்கு...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2