தளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்!
ஈரம் காய்ந்ததும்
வெடிப்பு விட்டன
நிலங்கள்!
வெள்ளுடை அணிந்த
பூமி!
சூரியன் மறைவு!
பனிமூட்டம்.
வாசலில் காத்திருக்கின்றன
கழட்டிவிட்ட எஜமானர்
வரும்வரை
காலணிகள்!
நிழலாய் காத்தன!
வளரவிடவில்லை!
மரத்தின் அடியில்
பயிர்!
அறுவடையான வயல்கள்!
மேய்ச்சலுக்கு
வந்தன
கால்நடைகள்!
மண்ணில் சமைத்து
விளையாட்டு
பசியே எடுக்கவில்லை!
குழந்தைக்கு
உண்ணாமலே ருசித்தது
குழந்தை சமைத்த
மண்சோறு!
சுகாதாரத் துறை
அமைச்சர் வருகைக்குப்பின்
குவிந்து கிடந்தது
சாலைமுழுக்க நெகிழிக்
குப்பைகள்!
வளைந்த கிளை!
நிமிரவே இல்லை!
உடைந்து போனது
வளர்ச்சி!
அழகான மிதியடி!
உள்ளே மறைந்து
கொண்டிருந்தன
அழுக்குகள்!
நேரத்தை விழுங்கி
நேசத்தை வளர்க்கின்றது
முகநூல்!
இருண்ட வானம்
வெளிப்பட்டதுபொத்தல்கள்
நட்சத்திரங்கள்
தகித்துக் கொண்டிருந்தது
நிழல் படாத இடங்களில்
வெயில்.
விருட்சம் ஒன்றை
விதைத்துவிடுகின்றது
பறவையின் எச்சம்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
ஒவ்வொரு சிந்தனையும் அருமை...
ReplyDeleteஅனைத்து ஹைக்கூ கவிதைகளும் நன்று. பாராட்டுகள் சுரேஷ்.
ReplyDeleteஅருமை
ReplyDelete