கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 103

 கொஞ்சம் சிரியுங்க பாஸ்!

கட்சிக்குள்ளே நிறைய “ரவுடிகளை” சேர்த்துக்கிட்டிருக்கலாம்..! அதுக்காக “ரவுடிகள் அணி”ன்னு ஒண்ணு உருவாக்கணும்னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு...!


”திண்ணைப் பிரச்சாரம்” பண்ணணும் சொன்னதை தொண்டர்கள் தப்பா புரிஞ்சிகிட்டாங்க போலிருக்கு...!
ஏன்?
ஒவ்வொரு ஹோட்டல் டீக்கடையா போய் ” பஜ்ஜி வடை”
”தின்னுட்டு பிரச்சாரம் பண்ணிக்கிட்டிருக்காங்க!



தலைவருக்கு கோயில் கட்டி சிலை வைச்சு எல்லாம் கும்பிட ஆரம்பிச்சிட்டாங்களே...!
பதவி போயிட்டாலும் உண்டியல், அர்ச்சனைன்னு வருமானம் தானா வருங்கிற நினைப்புதான்!


அந்த முன்னாள் கிரிக்கெட்டர் செஞ்சுரியா அடிச்சு குவிச்சவர்..!
அப்புறம்!
இப்போ பேசத்தெரியாம பேசிட்டு மக்கள் கிட்டே “இன் ஜுரி” ஆகிட்டிருக்கார்!



நம்ம தலைவர் வாழும்போது பேசினதை செஞ்சு முடிச்சு அசத்திட்டீங்க தலைவரே!
எதை சொல்றீங்க!
ஊழலுக்கு சமாதிகட்டுவோம்னு சொன்ன அவருக்கே சமாதி கட்டி அசத்திட்டீங்களே அதைத்தான்!


தலைவர் ஒரு சீட் ரெண்டு சீட் எல்லாம் வாங்க மாட்டேன்னு சொன்னது தப்பா போச்சு..!
ஏன்? என்னாச்சு..?
ஒண்ணு ரெண்டு சீட் கூட கொடுக்காம இதயத்திலே இடம் கொடுக்கறோம்னு சொல்லிட்டாங்களாம்!


தலைவர் இன்னும் பழசை மறக்கலை போல..!
ஏன்?
கொடியேத்தி முடிச்சதும் “சல்யூட்”னு சொன்னதும் பட்டுன்னு தரையிலே விழுந்து கும்பிட்டுட்டார்...!

குடியரசு தின விழாவுக்கு கொடியேற்ற தலைவரை கூப்பிட்டது தப்பா போச்சு?
ஏன் என்னாச்சு?
கொடியேத்தி முடிச்சதும் இது எந்த கட்சிக் கொடி?ன்னு கேட்டு மானத்தை வாங்கிட்டாரு...!


தலைவர் எப்பவுமே " அதிகார மையத்திலேயே" இருந்து பழக்கப்பட்டவரு..!

அதுக்காக" கட்சியின் மிளகாய் பட்டாசே"ன்னு பேனர் வைக்கிறதெல்லாம் ஓவராத்தான் இருக்கு!

அந்த ஸ்விட் மேலே " கேப்" போட்டு கொண்டு வராங்களே அது ஏன்?

அது " ரசகுல்லா" வாம்!



அந்த ஸ்கூட்டிபொண்ணு பின்னாடியே எதுக்குய்யா போனே?



" வளைவுகளில் முந்தாதீர்"நு போர்டில போட்டிருந்ததே சார்

அவர் போலிச்சாமியார்னு தெரிஞ்சும் அரெஸ்ட் பண்ண ஏன் இண்ட் ரெஸ்ட் காட்டமாட்டேங்கிறாங்க?
அவர் கொடுக்கிற கமிஷனை வட்டிக்கு விட்டு இண்ட் ரெஸ்ட் அதிகமாம்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்! நன்றி!

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2