தளிர் ஹைக்கூ கவிதைகள்பறித்துச்செல்கிறது!
தடுப்பாரில்லை!
பழுத்த இலைகளை காற்று

தொட்டிக்குள் அடங்கிவிடுகிறது

வளர்ச்சி!
வாஸ்துமீன்!

எல்லோரும் உறங்குகையில்

விழித்துக்கொண்டிருக்கிறது!
இரவு!

நல்வரவு சொன்னதும்

மிதித்தபடி கடந்தார்கள்!
மிதியடி

மழைவிட்ட இரவில்

நிரந்தரமாய் அணைத்துக்கொண்டது!
குளிர்!

மொழி தெரியா பாடல்!

ஈர்க்கிறது!
இசை!

அழுகிறது குழந்தை!

சாப்பிட மறுக்கிறது
பொம்மை!

பசித்துக்கொண்டே இருந்தது

நிறையவே இல்லை!
கோயில் உண்டியல்!

அடித்ததும் ரசித்தார்கள்

கோவில் திருவிழாவில்
மேளம்!

வெட்ட வெட்ட

வளர்ந்துகொண்டே இருக்கிறது!
தீவிரவாதம்!

நாள் முழுக்க உண்ணாவிரதம்!

யாரும் முடித்து வைக்கவில்லை!
ஏழையின் பசி!

மறைந்த சூரியன்!

மலர்தூவி அஞ்சலி செய்தன
மரங்கள்!

எதிர் வீட்டின் அழகு!

மறைத்துக்கொண்டிருந்தது!
தன் வீட்டு அழுக்கு!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து செல்லலாமே! நன்றி!

Comments

 1. அனைத்தும் அருமை சுரேஷ்!

  கீதா

  ReplyDelete
 2. அருமையான துளிப்பாக்கள்
  தொடருங்கள்

  ReplyDelete
 3. வணக்கம் சகோதரரே

  சிறியதாக இருந்தாலும் நிறைவான கருத்தை கூறும் அனைத்தும் அருமை. மிகவும் ரசித்தேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
 4. தளிர் ஹைக்கூ கவிதைகள் நிறைவு.

  ReplyDelete
 5. அனைத்தும் அருமை வலைப்பக்கமும் வந்து எங்களை கவனித்து கொள்ளுங்கள்

  ReplyDelete
 6. நல்ல ஹைக்கூக்கள்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2