இந்த வார குமுதம் இதழில் எனது ஒரு பக்க கதை!

சிறுவயதில் இருந்தே பத்திரிக்கைகளில் எழுதி பெயர் வரவேண்டும் என்பது ஒரு ஆசையாக இருந்தது. எழுத்தார்வம் காரணமாக இளந்தளிர், சின்னப்பூக்கள், தேன்சிட்டு என கையெழுத்துப்பிரதிகள் அப்போது எழுதி வெளியிட்டு மகிழ்ந்ததுண்டு. அவ்வப்போது சில கதைகள் பத்திரிக்கைகளுக்கு அனுப்பி அவை பிரசுரம் ஆகாமல் திரும்பும் போது மனசு வலிக்கும். அப்புறம் பத்திரிக்கைக்கு அனுப்புவதை தவிர்த்து வந்தேன். 2011 முதல் வலைப்பூவில் எழுத ஆரம்பித்தேன். 

   நண்பர்கள் ஊக்கம் காரணமாக 2014 முதல் மீண்டும் பத்திரிக்கைகளுக்கு எழுத ஆரம்பித்தேன். பாக்யா வார இதழ் என் படைப்புக்களை வெளியிட்டு எனக்கு ஊக்கம் தந்தது. தொடர்ந்து, ஆனந்தவிகடன், கல்கி, காமதேனு, குமுதம் என பல்வேறு இதழ்களில் ஒன்றிரண்டு படைப்புக்கள் வந்தாலும் இன்னும் மனநிறைவு ஏற்பட வில்லை.

   குமுதத்தில் வாட்சப் கதைகள் என்ற போட்டி வைத்தனர், அதில் எனது கதை தேர்வு பெற்றது. தொடர்ந்து மறுமாதமும் என்னுடைய இன்னொரு கதை வந்தது. அதைத் தொடர்ந்து இந்த மாதம் இந்த வார இதழில் எனது ஒரு பக்க கதை வியாதி இடம்பெற்றுள்ளது. குமுதத்தில் இப்படி ஒரு தொடர்ச்சியான வாய்ப்பினை பெற்றிருப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.  
    இத்தகைய எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். என் வளர்ச்சியில் என்றும் மகிழும் வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பின் நன்றிகள். இந்த வார குமுதத்தில் வந்த கதையை கீழே தந்துள்ளேன்! வாசித்து கருத்து பகிருங்கள்! நன்றி!

Comments

  1. முதலில் மனமார்ந்த வாழ்த்துகள் சுரேஷ்.

    இதோ கதையை வாசித்துவிட்டு வருகிறேன்..

    கீதா

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள், சுரேஷ்! உங்கள் நடை எனக்குப் பிடித்திருந்தது.
    முடிவு தான் ரொம்பவும் சிம்பிளாக முடிந்து விட்ட மாதிரி ஒரு உணர்வு. ஆனால் ஒரு பக்க கதைகளுக்கு இவ்வளவு போதும்.
    இந்த மாதிரி கொஞ்சம் பிரசுரம் ஆனதும் அடுத்து இரண்டு பக்க மூன்று பக்க கதைகளுக்குப் போகலாம்.

    ReplyDelete
  3. ஹா ஹா ஹா ஹா ஹா செமை செமை...அதுவும் முடிவு வரி அசத்தல் சுரேஷ். ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க. உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறவும் வாழ்த்துகள்!

    கீதா

    ReplyDelete
  4. ஒரு புறம் மின்னிதழ். மற்றொரு புறம் பஞ்ச், சிறுகதைகள் என உங்களின் எழுத்துப்பணி பிரமிக்க வைக்கிறது. இச்சிறுகதை நான் நினைத்ததுபோலவே முடிந்தது.

    ReplyDelete
  5. மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்...

    ReplyDelete
  6. கதை அருமை. வாட்ஸாப் சம்பந்தப்பட்டு ஏதாவது வருமோ என்று பார்த்தேன்!

    குமுதத்தில் வந்ததற்கு வாழ்த்துகள்.

    முனைவர் ஜம்புலிங்கம் ஸார் கருத்தை வழிமொழிந்து நானும் பாராட்டுகிறேன்.

    ReplyDelete
  7. மிக்க மகிழ்வு தோழர்

    ReplyDelete
  8. நானும் சிறுவயதில் (17 வயதில்) பத்திரிகைகளுக்கு படைப்புகள் எழுதி அனுப்பியுள்ளேன் . அதில் ஒன்றிரண்டு பிரசுரமாகியும் உள்ளன.எழுத வேண்டும் என்ற ஆர்வம் நான் 5 - ஆம் வகுப்பு படிக்கும் போதே என்னை தொற்றிக்கொண்டது .... தங்களின் ஒருபக்க கதை அருமை ... தங்களை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி !!!
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2