சசி பெயர்ச்சி சில ருசிகர தகவல்கள்! கோடிகள் சுருட்டியது அம்பலம்!


சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னணியில், மேலும் பல சம்பவங்கள் நடந்துள்ள விவரம், .தி.மு.., வட்டாரத்தில் இருந்து வெளிவரத் துவங்கியுள்ளது. சசிகலா உட்பட 14 பேர், .தி.மு..,வில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று, மேலும் இருவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கையின் பின்னணி குறித்து, வெளிவரும் தகவல்கள்: .தி.மு.., ஆட்சிக்கு வரும்போது, ஜெயலலிதாவிடம் சசிகலா உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி, சசிகலாவின் உறவினர்கள், வெளியில் பணம் பெற்றுக் கொண்டு, அரசில் முக்கிய காரியங்களைச் சாதிப்பது, வழக்கமான நடைமுறையாக இருந்தது. ஆனால், இந்த முறை, முக்கிய பொறுப்புகள் அனைத்திலும், தங்கள் ஆதரவாளர்களை உட்கார வைத்து, ஜெயலலிதாவின் தயவு இல்லாமலேயே, இவர்கள் நேரடியாக உத்தரவு பிறப்பித்து, காரியங்களை சாதித்தது தான், அவர்களது ஆட்டத்திற்கு முடிவு கட்டியுள்ளது. பணம் "பத்தும்' செய்யும்: குறிப்பாக, கோவையில் இருந்து ஆட்டிப் படைத்த ராவணனைப் பிடித்தால், என்ன காரியம் வேண்டுமானாலும் முடிக்கலாம் என்ற, "இமேஜ்' உருவானது. அதற்கேற்ப, "பல லட்சங்களைப்' பெற்றுக் கொண்டு, எந்தப் பதவிக்கும் ஆட்களை நியமிப்பது, மாறுதல் அளிப்பது என, அனைத்துக் காரியங்களும் அங்கிருந்து நடந்துள்ளன.
பணம் கொடுத்தால் போதும்,காரியம் நடந்துவிடும். மணல், டெண்டர் உட்பட அனைத்திலும், அவரது ஆதிக்கம் இருந்துள்ளது. தி.மு.., ஆட்சியில், 65 பாயின்ட்களாக இருந்த டெண்டர் மதிப்புகள், 125 பாயின்ட்களாக உயர்த்தப்பட்டன.அதற்கு, பெரும் தொகை கைமாறியது. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு, மணல் கடத்த, அனுமதி பெற்றுத் தந்துள்ளனர். மணல் மூலம், மாதம் கோடிக்கணக்கில், தொடர் வருவாயும் பெற்றதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. டீலா நோ டீலா: எதிர்க்கட்சியைச் சேர்ந்த, "டிவி'யின் கேபிள் நெட்வொர்க்கிற்கு, தொந்தரவு கொடுக்காமல் இருக்க, பல கோடி ரூபாய் கைமாறியதாகவும், அந்த "டிவி'யைச் சேர்ந்தவர்கள் மீது வழக்கு தொடர்ந்தபோது, அவர்கள் வழக்கில் இருந்து வெளிவரவும், வழக்கை அப்படியே கிடப்பில் போடவும், பேரம் பேசப்பட்டு, பெரும் தொகை கைமாறியதாக கூறப்படுகிறது. மாவட்ட அரசு நிர்வாகங்களில், முக்கிய பொறுப்புகளில் ஆட்களை நியமிக்க, கட்சிப் பொறுப்புகளில் ஆட்களை நியமிக்க என, 50 லட்சம், 20 லட்ச ரூபாய் என, தொகைகள் கைமாறி உள்ளன. கடந்த சட்டசபைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களில் சீட் வாங்கவே பணம் கொடுத்துள்ளனர். பலர், அமைச்சர் பதவி பெறவும் பணம் கொடுத்துள்ளனர். பி..,க்களாக வருவதற்கும் பணம் கொடுத்துள்ளனர். தேர்தலில் துவங்கி, கடந்த மே மாதம் ஆட்சி அமைந்தது முதல், ஏழு மாதங்களில், இதுவரை சசிகலா உறவினர்கள் சம்பாதித்த தொகை, பல ஆயிரம் கோடி ரூபாய் என்று கட்சியினர் கணிக்கின்றனர். இந்தப் பணம் போன இடம் எங்கே என்ற கேள்வியை .தி.மு.., தொண்டர்கள் தற்போது எழுப்புகின்றனர். தொடராத முடிவு தானே: சசிகலா மற்றும் அவரது உறவினர்களை, ஜெயலலிதா, பலமுறை வெளியேற்றியுள்ளார். ஆனால், அவர்கள் வெவ்வேறு உருவத்தில், கட்சிக்குள் மீண்டும் நுழைந்து, ஆதிக்கம் செலுத்திய வரலாறு உண்டு. எனவே, அதுபோல மீண்டும் திரும்பி விடக்கூடாது என்று, .தி.மு..,வினர் பயப்படுகின்றனர். இந்த முடிவு நிரந்தரமா என்பதில், .தி.மு..,வினர் மத்தியில் மட்டுமல்லாது, தமிழக மக்களே முழுமையாக நம்ப முடியாமல் இருக்கின்றனர். உண்மையில் சொல்லப் போனால், ஜெயலலிதா , ஜெயா "டிவி'யில் தோன்றி, நான் எடுத்த முடிவு தான் என உறுதிபடத் தெரிவித்தால், அவர் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் என்று, பெரும்பாலான மக்கள் கூக்குரலிட காத்திருக்கின்றனர்.


குவிகிறது வாழ்த்து: ஆனால், சசிகலா குடும்பத்தினரை வெளியேற்றியதும், தேசிய அளவில், முதல்வருக்கு நெருக்கமான தலைவர்கள் பலர், தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வாழ்த்து தெரிவித்ததாகவும், "யு ஹேவ் டேக்கன் குட் டெசிஷன்' என்று பாராட்டியுள்ளதாகவும் தெரிவதால், இந்த முறை ஜெயலலிதா எடுத்துள்ள முடிவு, நிரந்தர முடிவாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
நன்றி தினமலர்





Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2