என் இனிய பொன்நிலாவே! பகுதி 16


என் இனிய பொன்நிலாவே!  பகுதி 16
             ‘ப்ரியம்வதா’

முன்கதை சுருக்கம்] மதுவை விரும்பும் அபிஷேக் அவள் வீட்டிற்கு பெண் கேட்டு வரப்போவதாக கூறுகிறான். அதே சமயம் மதுவின் தந்தை அவளை பெண்கேட்டு பிள்ளை வீட்டார் வரப்போவதாக கூற அபிஷேக்கிடம் விவரம் கூறினாள் மது. அவனோ பிள்ளை பிடித்தால் கல்யாணம் பண்ணிக் கொள் என்றான் விளையாட்டாக. அத்துடன் நில்லாமல் தான் அன்று வருவதாக கூறியவன் வந்தும் விட்டான்.

அபிஷேக் அமர்க்களமாக  காரை நிறுத்திவிட்டு இறங்கியதும் விநாயகம் வாசலுக்கு விரைந்தோடினார். பூரணி என்னம்மா பண்ணிகிட்டு இருக்கே? அவங்க வந்துட்டாங்க! வா! வா! என்று அழைத்து விட்டு வாசலுக்கு விரைந்தார். வா! வாங்க மாப்பிள்ளை! அம்மா வரலியா? நீ நீங்க தனியாவா வந்திருக்கீங்க என்று அபிஷேக்கிடம் வினவினார்.
  என்ன இது அபிஷேக்கை மாப்பிள்ளை வீட்டார் என்று கூறுகிறார்! அதுவுமில்லாமல் அவனிடம் குழைந்து பேசுகிறாரே! அப்பாவுக்கு என்ன மூளை குழம்பிப் போய் விட்டதா என்று மிகவும் குழம்பிப் போனாள் மது. உள்ளே இருந்ததால் அவளால் விநாயகம் என்ன பேசுகிறார் என்பதை கேட்க முடியவில்லை.
   வாயெல்லாம் பல்லாக வாங்க வாங்க என்று அபிஷேக்கை வரவேற்றாள் அன்ன பூரணி. மாப்பிள்ளைக்கு ரொம்ப அவசரம் போல இருக்கு! அம்மா பின்னால வர்றாங்களாம் என்றார் விநாயகம் அசடு வழிந்தபடி!
   என்னது மாப்பிள்ளையா! என்ன இது ஒரே குழப்பமாக இருக்கிறதே! அப்பா இவரை மாப்பிள்ளை என்று தவறாக எண்ணி விட்டாரோ என்று அறையினுள் மது குழம்பிப் போனாள்.
  அதற்குள் மாப்பிள்ளை மது ரூமில் தான் இருக்கிறாள் நீங்கள் வேண்டுமானால் போய்.. என்று முடிக்கும் முன்னே அபி குறுக்கிட்டான்.
தேவையில்லை மாமா! நாங்கள் தான் நாள் தோறும் சந்தித்துக் கொள்கிறோமே! என்னைக் கேட்டால் இந்த பங்ஷன் கூடத் தேவையில்லைதான்! ஆனால் சடங்கு சம்பிரதாயம் எல்லாம் முறைப்படி நடக்க வேண்டும் என்று என் அம்மாவின் விருப்பம் அதனால்தான் ஏற்பாடு செய்தேன்.
   பாவம் மது ரொம்பவும் மிரண்டு போயிருக்கிறாள்! வேறு யாரோ பெண் பார்க்க வருவதாக அவள் நேற்று என்னிடம் சொன்ன போது அவள் முகம் போன போக்கு இருக்கிறதே ஹாஹா!  போங்கள் போய் நான் தான் மாப்பிள்ளை என்று சொல்லுங்கள்! என்றான் அபிஷேக் சிரித்தபடி!
   அப்பா நீங்களுமா இப்படி என்னை ஏமாற்றுவது?
 ஏன் நீ மட்டும் ஏமாற்றவில்லையா? எல்லாவற்றையும் சொல்லும் நீ அபியை காதலிப்பதை சொல்லவில்லையே!
  அ.. அது அது வந்து அப்பா! அதை எப்படி சொல்லுவது என்ற தயக்கம் தான்!  மறைக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை என்று கண்கலங்கினாள் மது!
 ச் சூ மது! இதற்கெல்லாம் அழுவாயா! இது நல்ல நாள்! இப்போது அழுது கொண்டிருந்தாள் நன்றாயிராது உன் மாமியார் வரும் போது கண் சிவந்து வீங்கி இருந்தால் நன்றாகவா இருக்கும்! அவர்கள் வரும் நேரம் ஆகிவிட்டது! போ! போய் முகம் கழுவி பிரெஷாக வா! என்று மகளை தேற்றி அனுப்பி விட்டு ஹாலுக்கு வந்தார் விநாயகம்.
  என்ன சொல்கிறாள் மது! இந்த மாப்பிள்ளையை பிடிக்க வில்லையாமா? என்று கிண்டலாக கேட்டான் அபி
  போங்கள் மாப்பிள்ளை உங்களை பிடிக்காமல் போகுமா? எல்லோரும் சேர்ந்து அவளை ஏமாற்றி விட்டோமாம்! முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு நின்றாள்! அது தான் சற்று சமாதானம் செய்து விட்டு வரும்படி ஆயிற்று!. அம்மா எப்போது வருவார்கள் தம்பி! கிளம்பி விட்டார்களா? என்று வினவினார் வினாயகம்.

  எல்லாம் ஒரு சர்ப்ப்ரைஸ் என்றூ சொல்வது தானே மாமா! அம்மா கிளம்பி விட்டார்கள் இன்னும் ஒரு பத்து நிமிடத்தில் இங்கு வந்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன். என்றான் அபிஷேக்.
  மாப்பிள்ளை உங்களை சும்மாவே உட்கார வைத்து பேசிக் கொண்டிருக்கிறேனே! என்ன சாப்பிடுகிறீர்கள்! கூல் டிரிங்க் ஏதாவது? அல்லது காபி என்றார் வினாயகம்.
   இப்போது ஒன்றும் வேண்டாம்! அம்மா வந்து விடட்டும்!  அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வாசலில் கார்வந்து நின்றது. அம்மா வந்து விட்டார்கள் என்று நினைக்கிறேன் என்று அபிசேக் கூறியவாறு எழுந்து வாசலுக்கு சென்றான். வினாயகம் தொடர்ந்தார்.
  மனோன்மனி அம்மாள் ஏற்கனவே பலவீனமானவர்! அவரை பீடித்த இதய நோய் அவரது உடலை இன்னும் பலவீனமாக ஆக்கியிருந்தது. தான் இறக்கும் முன் மகனுக்கு ஒரு திருமணம் முடித்து பார்க்க வேண்டும் என்ற ஆவலே அவரை வழி நடத்திக் கொண்டிருந்தது. சாதாரணமாக கணவர் இறந்த பின் அலுவலகம் வீடு என்ற இரண்டு இடங்களுக்கு மேல் செல்லாத அவர் முதல் முறையாக பெண் கேட்டு இங்கு வந்திருக்கிறார்.
   உடல் நலம் பாதித்திருந்தாலூம் அவர் முகம் களையாக இருந்தது. அவர் இறங்க அவருடன் இறங்கினாள் ஸ்வேதாவின் தாயார்!. இவர் எங்கு இங்கு வந்தார் என்று புருவத்தை உயர்த்தினான் அபிஷேக். அவன் எதிர் பார்க்காத இன்னொன்றும் அப்போது நடந்தது.
    அது ஸ்வேதா அந்த இடத்திற்கு சற்றும் பொருந்தாத ஒரு ஜிகினா டிரஸ்ஸில்  அவள் இறங்க முகத்தை திருப்பிக் கொண்டான் அபிஷேக். ஹாய்! அபி! மாப்பிள்ளைக்கு வெட்கமா! நானில்லை பொண்ணு! ம்ஹும்! அதற்குத் தான் கொடுத்து வைக்கவில்லையே! ஏன் அப்படி திரும்பிக் கொள்கிறாய்! இங்கு வறவேற்பதற்கு கூட நீதானே பெண் வீட்டார் தரப்பில் யாரும் இல்லையா? என்று பேசியவளை மனோன்மணி அடக்கினாள்.
   ஸ்வேதா! நான் உன்னிடம் சொன்னதென்ன? நீ நடந்து கொள்ளும் முறை என்ன? இதற்குத்தான் நீ வர வேண்டாம் என்று சொன்னது? என்றாள்.
  சாரி ஆண்ட்டி! மன்னித்துக் கொள்ளுங்கள்! வந்தவரை வா என்று கூட யாரும் கூற வில்லையே! ஒரு வேளை நம்மை பிடிக்க வில்லையோ என்று நினைத்து கூறிவிட்டேன் ஆண்ட்டி! சாரி ஆண்ட்டி! என்றவள் மனதினுள் பொறுமினாள். அடிக் கிழவி! பலபேர் முன்னிலையில் என்னை அவமானப் படுத்தி விட்டாயே! இந்த கல்யாணம் எப்படி நடக்கிறது என்று பார்க்கிறேன்! எப்படியாவது அபியை மணந்து கொண்டு உன்னை என்ன செய்கிறேன் பார்! என்று கறுவிக் கொண்டாள்.
   இந்த களே பரத்தில் செய்வதறியாது நின்று கொண்டிருந்த வினாயகம் சுதாரித்துக் கொண்டு வாங் வாங்க! வாங்க சம்பந்தியம்மா! உள்ளே வாங்க என்று அழைத்துச் சென்றார்.
    உள்ளே நுழைந்து சோபாவில் அமர்ந்ததும் என்ன மசமசன்னு இருக்கீங்க? பொண்ண வரச் சொல்லுங்க! என்று மனோன்மணி கூறவும் பூரணி மதுவை அழைச்சிட்டு வாம்மா! என்று குரல் கொடுத்தார் வினாயகம்.
  பட்டு சேலை பரபரக்க சர்வாபரண பூஷிதையாக கையில் காபி டிரெயுடன் மது வருவதையே வெறுப்புடன் நோக்கினாள் ஸ்வேதா!

           நிலவு வளரும்(16)

தங்கள் வருகைக்கு நன்றி !  பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!
Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!