ஓர் அப்பாவி பதிவரின் தண்ணி அடிச்ச அனுபவம்! பாகம் 2
ஓர் அப்பாவி பதிவரின் தண்ணி அடிச்ச அனுபவம்! பாகம் 2
என்னோட முதல் பதிவ படிச்சிட்டு சூப்பரா மொக்கை போட்டீங்க என்று பாராட்டிய??! எல்லோருக்கும் நன்றி! அது சும்மா கலாய்ப்பு! இப்ப சொல்ல போறது நிஜமோ நிஜம்! திரில்லோ திரில்! அப்ப நான் ஒன்பதாவது படிச்சிக்கிட்டு இருந்தேன்!. என்ன ஒன்பதாவதிலேயா? என்று வாயை பிளக்காதீர்கள்! அவனவன் அதிர்ஷ்டம் உங்களுக்கு வாய்க்கலை எனக்கு வாய்ச்சது! காதுல புகை விடாதீங்க முதல்ல உங்க வயித்துல ஒரு பாட்டில் தண்ணியை ஊத்தி எரியறதை அணைங்க! எங்க விட்டேன்? ஆங்!
அப்ப நானு ஒன்பதாவது படிச்சிட்டிருந்த சமயம்! சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டதும் அவனவன் தண்ணி அடிச்சிட்டு இல்ல பாட்டில பையில வச்சிகிட்டு கிளம்புவாங்க நமக்கு இந்த தண்ணி பாட்டில் எடுத்துட்டு போறதுல விருப்பமே இருந்தது இல்ல! ஏன்? அது ஒரு சுமை! ஏற்கனவே பாடச்சுமை புத்தக சுமை! சாப்பாட்டு சுமைன்னு ஏகப்பட்ட சுமைங்க இதுல இந்த தண்ணி சுமையை வேற சுமக்கணுமாண்ணு சுமக்கறது இல்லை. அது அன்னிக்கு பெரிய தப்பா போயிடுச்சு!
வழக்கமா ஸ்கூல் சப்ளையாவுற தண்ணி அன்னிக்கு கட் ஆயிடிச்சு! ஏதோ ப்ராப்ளம் பசங்க தண்ணி கிடைக்காம இங்கேயும் அங்கேயுமா? டாஸ்மார்க்க மூடிட்டாஅலையற குடிமகன்கள் போல கடை கடையா திரிஞ்சாங்க! ஆனா ஒரு பயலும் இல்லாதா குறையா பசங்கள விரட்டி அடிச்சாங்க!ஏன்னா நம்ம பசங்க அப்படி! அப்படி ஒரு சில்மிசம் அக்கம் பக்கத்தில பண்ணியிருக்காங்க! எப்படியொ மதிய வேளையை தண்ணி இல்லாம சமாளிச்சிட்டேன் நான்!
சாயங்காலம் ஸ்கூல் விட்டப்புறம் எனக்கு கை கால்லாம் நடுங்க ஆரம்பிடுச்சி! நாவறண்டு போக எப்படியோ தட்டு தடுமாறி ஒரு டீக்கடைவாசலுக்கு வந்து அண்ணே கொஞ்சம் தண்ணி கிடைக்குமா அண்ணே என்று கேட்டேன்! அவர் என்னை ஒரு புழுவை பார்ப்பது போல பார்த்தார். வந்துட்டானுங்களா! என்று முணுமுணுத்துக் கொண்டே ஒரு ஜக்கில் சிறிது தண்ணிரை முகர்ந்து தந்தார். நெடு நாள் பட்டினி கிடந்தவன் போல அதை குடித்து முடித்தேன் அடியில் சிறிது மிச்சம் இருந்ததை பக்கத்தில் விசிறிவிட்டு திருப்பி ஜக்கை கொடுக்கும் போது அவர் பிடித்துக் கொண்டார்.
ஏண்டா இதுக்குதான்லே நான் தண்ணி கொடுக்கிறதே இல்லே! ஏண்டா தண்ணிய அந்த பக்கம் வீசுனே யார் மேலயாவது தெரிச்சா யாருலே பதில் சொல்றது? என்று முறைத்தார்.
யாரும் இல்லேன்னே பார்த்து தான் வீசுனேன்! அப்ப வேணுமின்னு பார்த்து தான் செஞ்சியா? எம்புட்டு கொழுப்புலெ உனக்கு உனக்கு போயி!
இல்லேன்னு மிச்சம் இருந்தது அதான தெரியாம?
என்னலே தெரியாம? மிச்சமிருந்தா தெருவில வீசுவியா? அதான் ஒரு பயலுக்கும் உதவறது கிடையாது!
இல்லேன்னே! தெரியாம பண்ணிட்டேன்!
ஏண்டா எப்படி தெரியாம போகும் இது போற வற சந்து தானே யார் மேலேயாவது கொட்டியிருந்தால்!
கவனிக்காம செஞ்சிட்டேன்னே!
இல்லடா நீ வேணுமின்னே செஞ்சிருக்கே மிச்சமிருந்தா இந்த சுவத்து மேல ஊத்தறது தானே! என்ன பழி வாங்க அப்படி செஞ்சிருக்கேலே நீ!
இதற்கு மேலும் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தேன்! முழிக்கிறத பாரு! இனி ஒருக்க கடை பக்கம் வந்துற போற? போலே போ என்று விரட்டினார் அந்த கடைக்காரர்!
விட்டால் போதும் என்று ஓட்டம் பிடித்தேன்.
சாதாரண ஒரு விசயம்! குடித்த நீர் மீதமானால் வெளியே வீசுவது அதைக் கூட செய்ய கூடாதா? இதில் என்ன தவறு? வீசலாம் ஆனால் கடைவீதியில் அப்படி செய்தால் மற்றவர்கள் மீது தண்ணீர் தெளித்தால் என்ன செய்வாய் என்பது கடைக்காரர் வாதம்!
இது அப்போது எனக்கு புரியவில்லை! பின்னர் தான் புரிந்தது!
என்ன நண்பர்களே காமெடியான மேட்டர்னு வந்தா இப்படி சொதப்பிட்டியேன்னு கேக்குறீங்களா? நான் தான் முதல்லேயே சொல்லிட்டேனே இது நிஜம் சீரியஸ் மேட்டர்னு! வரட்டுமா?
தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே வாக்களித்து பிரபல படுத்தலாமே!
Comments
Post a Comment