என் இனிய பொன்நிலாவே! பகுதி 15

என் இனிய பொன்நிலாவே!  பகுதி 15

             ‘ப்ரியம்வதா’

முன்கதை சுருக்கம்} அபிஷேக்கும் மதுமிதாவும் காதலிக்கிறார்கள்!. அபி மது வீட்டிற்கு பெண் கேட்டு வருவதாக சொல்கிறான். அதற்குள் வீட்டில் மதுவிற்கு வரன் வந்திருப்பதாகவும் அவளை பார்க்க வரப்போவதாகவும் தகவல் வருகிறது. அபியிடம் இதை மது கூறியபோது பிடித்திருந்தால் ஒத்துக் கொள்ளேன் என்றான்.
   யூ யூ! அப்போது எதற்கு வெட்டியாக உங்களுடன் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருப்பது! உங்களை நம்பினேன் பாருங்கள்! எனக்கு! தலையில் அடித்துக் கொண்டாள் மது!
  மது ரிலாக்ஸ் ஏன் இப்படி எதற்கெடுத்தாலும் டென்ஷன் ஆகிறாய்?
 ஏன் சொல்ல மாட்டீர்கள் என்னுடைய நிலையில் நீங்கள் இருந்திருந்தால் உங்களுக்குத் தெரிந்திருக்கும்!
  ஏன் அப்படி என்ன பெரிய நிலைமை உனக்கு நேர்ந்துவிட்டது?
ஐயோ கடவுளே முதலில் இருந்து மீண்டும் சொல்ல வேண்டுமா? எத்தனை தரம் சொன்னேன். என்னை பெண் பார்க்க வரப் போகிறார்கள் என்று!
   அவ்வளவு தானே!
என்ன அவ்வளவுதானே? நான் உங்களை காதலிக்கிறேன்!
  என்ன என்ன சொன்னாய்?திரும்ப ஒரு முறை சொல்லு சரியாக காதில் விழவில்லை!
   ஐயொ ராமா இதென்ன விளையாட்டு அபி!
ஐயோ ! இதில்லையே நீ சொன்னது! வேறு ஏதோ காதலிக்கிறேன் என்ற மாதிரி அல்லவா காதில் விழுந்தது!
  போதும் விளையாட்டு அபி!
இல்லை மது மீண்டும் ஒரு முறை சொல்லேன்! இதுவரை உன் வாயில் வராத அந்த வார்த்தை இப்போதுதான் வந்த்திருக்கிறது ப்ளீஸ்!
  அப்போதுதான் மதுமிதா உணர்ந்தாள் இதுவரை தான் அவனை காதலிப்பதாக சொன்னதில்லையே! அவன் தான் சொல்வான்! இப்போது கூட பெண் கேட்டு வரப்போவதாக அவனே கூறினான். தான் மறுக்கவில்லையே தவிர சம்மதம் என்று சொன்னதில்லையே ஆனால் மனதில் அவன் நினைவு இருக்கவே இன்று தானாக வார்த்தை வந்திருக்கிறது! மெல்ல முறுவலித்தவள் சாரி அபி! என்றாள்
   எதற்கு! நீ சொன்ன வார்த்தைக்கா! அப்படி என்றால் வேண்டாம்! மீண்டும் ஒரு முறை அல்ல பல முறை அதை கேட்க என் காதுகள் தயாராய் இருக்கின்றன ஆனால் நீதான் வேறு எதை எதையோ என் காதுகளில் வேண்டாதவையெல்லாம் திணித்துக் கொண்டிருக்கிறாய்! ப்ளிஸ் மது மிண்டும் ஒரு முறை சொல்லேன்! என்றான் அபிஷேக்.
   மது வெட்கத்துடன்! ஐ லவ் யூ! என்றாள்!
  அப்பாடா! என் காதுகளில் தேன் பாய்ந்தது! இப்போது சொல் உனக்கு என்ன பிரச்சனை என்றான் எதுவும் தெரியாதது போல!
 அபி விளையாடாதீர்கள்! நான் எத்தனை முறை சொல்வது? என்னை பெண் கேட்டு வர இருக்கிறார்கள்! மாப்பிள்ளைக்கு என்னை பிடித்துவிட்டதாம்! என் சம்மதம் தான் தேவையாம்! என்றாள்.
  ஒக்கே உனக்கு என்ன சம்மதம்தானா?
 அவனை முறைத்த மது சம்மதம் என்றால் இங்கு உங்களுடன் பேசிக் கொண்டிருப்பேனா? என்றாள்.
 ஒக்கே அப்படி என்றாள் சொல்லிவிடு!
எதை?
 சம்மதமில்லை என்பதை!
 அதைத் தான் எப்படி சொல்வது என் அப்பா எப்படி எடுத்துக் கொள்வாரோ? என்று பயமாக இருக்கிறது என்று ஆலோசனை கேட்க வந்தால் நீங்கள் வேறு பயமுறுத்துகீறீர்களே!

  இதில் பயத்திற்கு இடமில்லை மது! உன் அப்பா உன் விருப்பமில்லாமல் கல்யாணம் செய்ய மாட்டார் அல்லவா? மாப்பிள்ளைக்கு உன்னை பிடித்திருந்தால் போதுமா? உனக்கு மாப்பிள்ளை பிடிக்க வேண்டாமா? பிடிக்கவில்லை என்று கூறிவிடு!
  காரணம் கேட்பார்களே! என்ன வென்று கூறுவது?
அப்போது என்ன தோன்றுகிறதோ அதை சொல்லிவிடு! இதற்குப் போய் பெரிதாய் என்ன காரணம் என் மனதிற்கு பிடிக்கவில்லை என்று கூறீவிடு
  அப்போது மனதிற்கு பிடித்தவர் யார் என்று கேட்டால் என்ன செய்வதாம்?
  மனதிற்கு பிடித்தவரை சொல்லிவிடு!
சரி நேரமாகிறது வீட்டிற்கு கிளம்பு! எப்போதும் போல் இரு பதட்டம் அடையாதே! ஸீ யூ!
அன்றிலிருந்து ஆறு நாட்கள் போனதே தெரியவில்லை மதுவிற்கு அவ்வளவு வேகமாய் ஓடி விட்டது! அலுவலகப் பணிகளும் பெரிதாக பளுவில்லாமல் சென்று விட்டது.
  முன்பெல்லாம் வேண்டா வெறுப்பாக அலுவலகம் வருபவள் இப்போது ஆர்வத்துடன் வர ஆரம்பித்தாள்! குறிப்பாக அபியை அவள் ரசிக்க ஆரம்பித்தாள் தொழிலில் அவனது ஈடுபாடு , தாயிடம் அவன் காட்டும் அன்பு, வாடிக்கையாளர்களிடம் பழகும் பண்பு என்று பலதும் அவளை கவர்ந்தது. எனவே எப்பொழுது பொழுது விடியும் என்று காத்திருந்து அலுவலகம் செல்ல ஆரம்பித்தாள். மாலை ஐந்து மணி ஆகிவிட்டால் ஐயொ  இன்றைய பொழுது சீக்கிரம் போய்விட்டதே என்று வருந்தும் அளவிற்கு அவள் வந்துவிட்டாள். என்ன செய்வது எல்லாம் காதல் படுத்தும் பாடு என்று சொல்லிக் கொள்ளவும் செய்தாள்.
  இந்த ஒரு வாரத்தில் அபியும் மதுவும் பெண்பார்க்க வரும் விசயம் குறித்து மீண்டும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை! அலுவலக விசயங்கள் பறிமாறினார்களன்றி சொந்த விசயங்கள் அலுவலகத்தில் பேசுவது கிடையாது.
  அன்றைய பொழுதுகழிந்து அலுவலகத்தில் இருந்து விடைப்பெற்றாள் மது. மாலைபொழுது இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே நாளை ஞாயிற்றுக் கிழமை வேறு! அபியை பார்க்க முடியாதே என்று வருந்தியவளுக்கு அப்போதுதான் ஞாபகத்திற்கு வந்தது நாளைக்குத் தான் தன்னை பெண் பார்க்க வரப் போகிறார்கள் என்று சரி வரட்டும் என்று நடந்தவள் பின்னால் குரல் கேட்டுத் திரும்பினாள்.
 என்ன மது பலமான யோசனை! நாளை லீவாயிற்றே இந்த சனியன் தொந்தரவு இல்லை என்று நிம்மதியாக இருக்கலாம் என்று யோசனையா?
  இல் இல்லை! ஆணால் உங்களைத்தான் நினைத்தேன்! ஒரு நாள் முழுக்க உங்களை பார்க்காமல் இருக்க போகிறோமே என்று!
  அப்படியெல்லாம் விட்டுவிடுவேணா என்ன?
எப்படி என்ன செய்ய போகிறீர்கள்?
நாளை உன் வீட்டிற்கு வரப் போகிறேன்!
ஐயோ! வேறு வினையே வேண்டாம்! நாளைத் தான் என்னை பெண் கேட்டு வரப் போகிறார்கள்!
 வரட்டுமே! அவர்கள் வந்தால் நான் வரக் கூடாதா? என்னை பிடித்து வெளியில் தள்ளி விடுவாரா என்ன உன் தந்தை?
 இல்லை இல்லை அப்படி எல்லாம் செய்ய மாட்டார்தான் ஆனால் !
என்ன நீ ஆனா ஆவன்னான்னு சொல்லிகிட்டு நாளைக்கு நான் உங்கள் வீட்டுக்கு வரேன்! ஓக்கேயா!
  ஓக்கே  யோசனையுடன் தலையாட்டினாள் மதுமிதா!
மறுநாள் அபி வந்தபோது மது பயந்த மாதிரி எதுவும் நடக்க வில்லை! மாறாக விழுந்து விழுந்து வரவேற்றார் விநாயகம்!
நிலவு வளரும்(15)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபல படுத்தலாமே!


Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2