அமெரிக்காவும் இண்டலிஜெண்டும்!

 அமெரிக்காவும் இண்டலிஜெண்டும்!


    ஒரு பள்ளியில் இரண்டு மாணவர்கள். ஒருவன் அமெரிக்கா, மற்றவன் இண்டலிஜெண்ட், இருவரும் சுத்த முட்டாள்கள். இவர்களை சமாளிப்பது டீச்சருக்கு ரொம்பவே கஷ்டம்! இந்த சமயத்தில் பள்ளிக்கு இன்ஸ்பெக்சனுக்கு அதிகாரிகள் வந்து விட்டனர். டீச்சருக்கு இந்த பசங்களால் பள்ளியின் பெயர் கெட்டு விடுமே என்று கவலை.
       என்ன செய்யலாம் என்று யோசித்தவர், இண்டலிஜெண்டை பெஞ்சுக்கடியில் ஒளிந்துகொள்ள சொன்னார் அமெரிக்காவை பாத்ரூமில் ஒளிந்துகொள்ளச் சொன்னார். அப்பாடா! இனி தொல்லை இல்லை என்று பெருமூச்சுவிட இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைந்தார்.
       வாங்க சார் வாங்க! இவங்கள நீங்க எது கேட்டாலும் சரியா பதில் சொல்லுவாங்க என்று வழிந்தார் டீச்சர். இன்ஸ்பெக்டர் முதல் கேள்வி கேட்டார். இங்க யாரு இண்டலிஜெண்ட்?
   பெஞ்சுக் கடியில் இருந்த இண்டலிஜெண்ட் எழுந்து நான் தான் சார் இண்டலிஜெண்டு! என்று குரல் கொடுத்தான். டீச்சர் தலையில் அடித்துக் கொள்ள  அப்படியா? இதுக்கு பதில் சொல்லு? என்றார் இன்ஸ்பெக்டர்.
     அமெரிக்கா எங்க இருக்கு? என்ற கேள்வியை அவர் கேட்க  இண்டலிஜெண்ட் ஆர்வமாய் சொன்னான்  சார் அமெரிக்கா பாத்ரூமில இருக்கு!
    டீச்சர் தலையில் அடித்துக் கொண்டார்.
   இது எப்படி இருக்கு?

எப்பொழுதோ யாரோ சொன்ன ஜோக்!

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!