டெண்டுல்கர் மகனின் பேட்டிங், பவுலிங் திறமை-டீன் ஜோன்ஸ் வியப்பு

மெல்போர்ன்: சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூனின் கிரிக்கெட் திறமை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் வியப்பும் பாராட்டும் தெரிவித்துள்ளார். அர்ஜூன் மிகப் பெரிய வீரராக உருவெடுப்பார் என்றும் பாராட்டியுள்ளார் ஜோன்ஸ்.

அரசியல், சினிமாவில் மட்டுமா வாரிசுகள் வர வேண்டும். கிரிக்கெட்டிலும் கூட ஏகப்பட்ட வாரிசுகள் கிட்டத்தட்ட அத்தனை நாடுகளிலுமே உள்ளனர். அந்த வரிசையி்ல் சச்சினின் வாரிசான அர்ஜூன் தந்தையைப் போலவே கிரிக்கெட்டில் இப்போதே பிரமாதப்படுத்தி வருகிறார்.

பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பந்து வீச்சிலும் அவர் ஜொலிக்கிறார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் வந்துள்ள சச்சினுடன் அர்ஜூனும் வந்துள்ளார். மெல்போர்ன் மைதானத்தில் வெள்ளிக்கிழமையன்று அவர் தந்தை சச்சின் மற்றும் வீரேந்திர ஷேவாக்குடன் இணைந்து பந்து வீசி, பேட்டிங் செய்து பயிற்சியும் எடுத்தார்.

கிட்டத்தட்ட அரை மணி நேரம், நடந்த இந்த பயிற்சியின்போது சச்சின் தனது மகனுக்கு பந்து வீசினார். அதேபோல அர்ஜூன், ஷேவாக்குக்குப் பந்து வீசினார்.

இந்த பயிற்சியை டீன் ஜோன்ஸ் அமர்ந்திருந்து வேடிக்கை பார்த்து ரசித்தார். பின்னர் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அசத்துகிறார் அர்ஜூன். அவருடைய தந்தையின் திறமையில் 100ல் ஒரு பகுதியை மட்டும் அவர் வெளிப்படுத்தினால் போதும் மிகப் பெரிய வீரராக முடியும்.

தனது மகனின் கிரிக்கெட் திறமை குறித்து கூர்ந்து கவனித்து வருகிறார் சச்சின் என்று நினைக்கிறேன். சமீபத்தில் அர்ஜூனுடன் நான் பேசியபோது, தான் பள்ளி கிரிக்கெட் போட்டி ஒன்றில் சதம் அடித்தது குறித்தும், ஒரு போட்டியில் 8 விக்கெட் வீழ்த்தியது குறித்தும் அர்ஜூன் சிலாகித்துக் கூறினார்.

அவருக்குள் நல்ல திறமை உள்ளது. நிச்சயம் பெரிய வீரராக வருவார் என நம்புகிறேன் என்றார் ஜோன்ஸ்.

மேலும் அவர் கூறுகையில், அர்ஜூனுக்கு யார் பயிற்சி தருகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இதுபோல முக்கிய வீரர்களுடன் அவர் பயிற்சியின்போது உடன் இருந்து கவனித்தாலே போதும் நல்ல பயிற்சி கிடைக்கும் என்றார் ஜோன்ஸ்.

நன்றி தட்ஸ் தமிழ்

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2