சோனியாவின் சொத்துமதிப்பு 1லட்சம் கோடியாம்! அம்மாடியோவ்!
இந்தியாவில் ஏழைகள் ஏழைகளாகவே இன்னும் இருக்கையில் அரசியல் தலைவர்களின் சொத்துமதிப்பு உயர்ந்துகொண்டே போகிறது. அந்த காலத்தில் அரசியலுக்கு வருபவர்கள் தங்களின் சொத்துக்களை பொதுப்பணிக்கு செலவழிப்பார்கள். இன்றோ அரசியல் என்பது பணம் சம்பாதிக்கும் ஒரு தொழில் ஆகிவிட்டது.
அரசியல் வாதிகளுக்கு எம்.எல்.ஏ வோ அல்லது எம்.பி ஆகவோ ஆகிவிட்டால் போதும் ஐந்து ஆண்டுகளில் அவர்களின் சொத்து பலமடங்கு எகிறிவிடுகிறது. இதில் அமைச்சர், முதலைமைச்சர், பிரதமர் என்று ஆகிவிட்டால் நாடே அவர்களுடையதுதான்!
நீங்கள் நினைப்பதை விட உங்கள் தலைவர்கள் உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் என்ற தலைப்பில் உலகின் முன்னனி இணைய தளங்களில் ஒன்றான ஹபீங்க்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில் உலகின் கோடீஸ்வர தலைவர்களை பட்டியல் இட்டுள்ளது. ரஷ்யாவின் விளாடீமீர் புடின் இதில் முதல் இடத்தில் உள்ளார்.
நம்ம அன்னை சோனியா 12 வது இடத்தில் ஒரு லட்சம் கோடி சொத்து மதிப்புடன் உள்ளார். இவர் இங்கிலாந்து ராணி எலிசெபத்தை விட முந்திய இடத்தில் உள்ளார். அவர் எவ்வளவு சொத்து வைத்திருந்தாலும் நமக்கு ஒன்றும் இல்லைதான். ஆனால் பொதுவாழ்விற்கு வந்த பிறகு பொய் பேசலாமா?
அப்படி செய்தால்தானே அரசியலில் நிலைத்திருக்க முடியும் என்கிறீர்களா? அந்நியரான அவரிடம் நமது நாட்டை அடகு வைத்துவிட்ட பின்னர் அவர் எவ்வளவு சம்பாதித்தால்தான் என்ன?
சோனியாவின் சொத்து மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாய்' என, அந்த இணையதளம் தெரிவித்துள்ள நிலையில், 2009 லோக்சபா தேர்தலில், உ.பி.,யின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட, சோனியா தாக்கல் செய்த வேட்பு மனுவில், அவரின் சொத்து மதிப்பு, 1.38 கோடி ரூபாய் தான் என, அவர் கூறியுள்ளார்.இது, அவர் மகனும், காங்கிரஸ் துணைத் தலைவரும், அமேதி தொகுதி, எம்.பி.,யுமான ராகுலின் சொத்து மதிப்பை விட, 1 கோடி ரூபாய் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
தன் கைவசம் உள்ள சொத்துகளாக, வேட்பு மனுவில் சோனியா குறிப்பிட்டு உள்ள சொத்துகள் பற்றிய விவரம்:கையில், 75 ஆயிரம் ரூபாய் ரொக்கம் உள்ளது. வங்கிகளில், 28 லட்சம் ரூபாய் இருப்பு உள்ளது. பரஸ்பர நிதித் திட்டங்களில், 20 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளேன். ரிசர்வ் வங்கியில், 12 லட்சம் ரூபாய் முதலீடு உள்ளது. போஸ்ட் ஆபீசில், 2 லட்சம் ரூபாய், பி.பி.எப்., திட்டத்தில், 25 லட்சம் ரூபாய் முதலீடு செய்து உள்ளேன்.மொத்தம், 11 லட்சம் ரூபாய் மதிப்பில், 2.5 கிலோ தங்கம், 18 லட்சம் ரூபாய் மதிப்பில், 88 கிலோ வெள்ளிப் பொருட்கள் உள்ளன.இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பில், இரண்டு விவசாய நிலங்கள், இத்தாலியில், 18 லட்சம் ரூபாய் மதிப்பில், மூதாதையர் வீடு உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நான்கு ஆண்டுகளில் அவர் 99 ஆயிரம் கோடிகளை சம்பாதித்துவிட்டாரா? இல்லை அந்த இணைய தளம் புளுகுகிறதா? ஒன்றும் புரியவில்லை! அவனவன் ஒத்தை ரூபாய் சம்பாதிக்க எவ்வளவோ கஷ்டப்பட இந்த அரசியல் வாதிகளிடம் கொட்டுகிறது பாருங்கள் பண மழை!
இந்த அம்மாவின் கையில் இன்னும் ஐந்து வருடங்கள் ஆட்சியை கொடுத்தால் நாடே இருக்குமா என்று தெரியவில்லை!
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி இதை மறுத்துள்ளார். அமெரிக்க இணைய தளம் தவறான தகவல் வெளியிட்டுள்ளது என்கிறார் அவர்.
அமெரிக்காவைச் சேர்ந்த இந்த இணையதளம், 2005ல் துவக்கப்பட்டது; நியூயார்க்கில், தலைமையகம் உள்ளது; உலகம் முழுவதும் செய்தியாளர்கள் உள்ளனர்.'அமெரிக்கா ஆன் - லைன்' என்ற, மிகப் பெரிய இணையதளத்தின், துணை நிறுவனமாக, இது கருதப்படுகிறது.இணையதளங்களின் தரவரிசை பட்டியலை நிர்வகிக்கும், 'அலெக்சா' நிறுவனம், இந்த இணையதளத்திற்கு, உலக அளவில், 68வது இடம் வழங்கியுள்ளது.ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷ், இத்தாலியன், ஜப்பான், ஜெர்மன் மொழிகளில் இது வெளி வருகிறது.மிகச் சிறந்த செய்தி நிறுவனங்களுக்கு வழங்கப்படும், 'புலிட்சர்' விருது, கடந்த ஆண்டு இந்த இணையதளத்திற்கு கிடைத்து உள்ளது.
எப்படியோ நம்ம நாட்டை சுரண்டிய இங்கிலாந்து ராணியையே மிஞ்சிட்டாங்க இந்த இத்தாலிய ராணி! நம்ம ஜனங்க எப்பவுமே அடிமைங்கதானே! சலாம் போட்டுகிட்டு இருப்போம்!
இது தினமலரில் வந்த செய்தி அதை சுருக்கி என் பாணியில் கொடுத்துள்ளேன்! மதுரை தமிழனுக்கு ஹபிங்க்டன் போஸ்ட் பற்றி தெரிந்து இருக்கலாம்! ஒரு வேளை இந்த பதிவை அவர் படித்தால் அந்த தளத்தின் நம்பகத்தன்மை குறித்து பின்னூட்டமோ பதிவோ இட்டால் மகிழ்வேன்! நன்றி!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
naasamaa pochi....!
ReplyDeleteநாங்க அரசியலை தெரிவுசெஞ்சதே கோடீஈஈஈஈஈஸ்வரராகத்தானே :)
ReplyDeleteஎன்ன கொடுமை...!
ReplyDeleteHuffington Post' edits report, puts footnote stating Sonia Gandhi's name has been removed from rich list
ReplyDeleteஅமெரிக்காவின், 'ஹபிங்டன் போஸ்ட்' இணையதளம், நேற்று, உலகின் கோடீஸ்வர தலைவர்கள் பட்டியலில் இருந்து, சோனியா மற்றும் கத்தார் நாட்டின் முன்னாள் மன்னர் ஹமித் பெயர்களை நீக்கிஉள்ளது. இதுகுறித்து, அந்த இணையதளத்தின் ஆசிரியர் எழுதியுள்ள குறிப்பில், 'காங்கிரஸ் தலைவர், சோனியாவின் சொத்து மதிப்பு குறித்து, எங்களுக்கு, மூன்றாம் நபர் நிறுவனம் ஒன்று செய்தி அளித்தது. அது சரியானதாக இல்லை என, தெரிய வந்ததும், செய்தி அளித்த நிறுவனத்திடம் தகவல் கேட்டுள்ளோம். அந்தச் செய்தியால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு வருந்துகிறோம்' என, எழுதிஉள்ளார். அதையடுத்து, அந்த பட்டியல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ReplyDelete"அவர்கள் உண்மைகள்" சொன்ன மாதிரி, சோனியாவின் பெயரை நீக்கிவிட்டார்கள். ஆனால் எப்படி அந்த மூன்றாம் நபர் நிறுவனம், சோனியாவின் பெயரை பரிந்துரைத்திருக்கும். அந்த செய்தி உண்மையாக கூட இருக்கலாம். யார் கண்டது. ஏற்கனவே அவருடைய மருமகனின் பெயர் ஊழலில் புகாரில் சிக்கியுள்ளதை இந்த நேரத்தில் நினைவு படுத்திக்கொள்ள வேண்டும்,
ReplyDelete