புகைப்பட ஹைக்கூ 61

புகைப்பட ஹைக்கூ 61


ஊற்றும் இல்லை!
உரமூட்டும் மழையுமில்லை!
சொட்டுநீர்!

தாகம் பெரிது!
தானமோ சிறிது!
வாடும்பயிர்!

தடைபடும் மின்சாரத்தால்
உடைபட்டன
பயிர்கள்!

உலர்ந்த வயலுக்கு
   ஊட்டுகிறார்
   உயிர்!

   உயிர்போகும் முன்னே
   ஒரு வாய்
   தண்ணீர்!

   விவசாயிகளின் கண்ணீர்!
   விளைச்சலுக்கு இல்லை
   தண்ணீர்!

   உருவாகும் முன்னே
   கருகினபயிர்கள்!
   மின்வெட்டு!

   வயல் வெடித்ததும்
   புதைந்தது விவசாயியின்
   நெஞ்சம்!

   வானம் கருக்கவில்லை!
   வதங்கிப்போனது
   பயிர்!

   ஈரம் இருந்தும்
   போதவில்லை
   ஈரம்!

   வாடும் பயிர்
   ஊட்டுகிறார்
   உயிர்!

   பம்ப் நீருக்கு பதில்
   சொம்பு
   நீர்!

   பாய்ச்சல் இல்லாமையால்
   மேய்ச்சல் ஆகிப்போயின
   நிலங்கள்!

   வளம் குறைந்ததால்
   வளம் குறைந்தன
   பயிர்கள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

 1. வாடும் பயிர் ஊட்டுகிறார் உயிர்...! உட்பட அனைத்தும் அருமை... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. வருத்தம் தோய்ந்த வரிகள்... அருமை

  ReplyDelete
 3. விவசாயிகளின் கண்ணீர்!
  விளைச்சலுக்கு இல்லை
  தண்ணீர்!.. உண்மைதான்.. அத்தனையும் அநியாயமாகிப் போமே...

  அனைத்தும் அருமை!
  வாழ்த்துக்கள் சகோ!

  ReplyDelete
 4. இரண்டு லட்சம் ஹிட்ஸ் பதிவை மொபைல் மூலம் படித்ததால் கருது தெரிவிக்க முடியவில்லை.. வாழ்த்துக்கள் சார்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 6