ரவிக்கையில பெரிய ஜன்னலா கணவர் வைக்க சொல்வது ஏன்? - ஜோக்ஸ்

ஜோக்ஸ்!


 1. ஜெயிலுக்கு போயிட்டு வந்ததுல இருந்து நம்ம தலைவர் டிவியில விளம்பரம் கூட பார்க்க மாட்டேங்கிறாரா? ஏன்?
    அடிக்கடி டிவியில முறுக்கு ‘கம்பி’ விளம்பரங்கள் போடுறாங்களே!
                        மித்ரன்.

 1. அவரு வெச்சிருக்கிறது போலி நிறுவனமா இருக்கும் போல!
எப்படி சொல்றீங்க?
உங்களுக்கு வேற கிளைகள் இருக்குதான்னு கேட்டதுக்கு இல்ல தோப்புதான் இருக்குன்னு சொல்றாரே!
                     ஆர். சோமு.

 1. ரவிக்கையில பெரிய ஜன்னலா வைன்னு உன் கணவர் சொல்றாரே… ஏன்?
விக்கிற விலைவாசியில துவைக்கறப்ப சோப்பு செலவு 
கம்மியாகுமாம்!
                     ஜாகீர்

 1. நாட்டுல நல்லவங்க ரொம்ப குறைவா இருக்காங்கன்னு தலைவர்கிட்ட சொன்னது தப்பா போச்சு!
ஏன்?
நல்லவர்களை சிறுபான்மையினர் பட்டியல்ல சேர்க்கணும்னு உண்ணாவிரதம் இருக்க போறாராம்!
                    வீ. விஷ்ணுகுமார்.

 1. தலைவர் ரொம்பவும் பயந்து போய் இருக்கார்னு எதைவச்சு சொல்ற?
தன் அமைச்சர் பதவியை இன்சூரன்ஸ் செய்ய முடியுமான்னு கேக்கறாரே!
                        வெற்றிமாறன்.

 1. இத்தனை நேரமும் தமிழ் பாட்டுக்களை உட்கார்ந்து கேட்ட ஆடியன்ஸ் எல்லாம் இப்ப கடைசில பாடற இந்திபாட்டுக்கு எழுந்து நிக்கறாங்களே ஏன்?
    தலைவரே! இது தேசிய கீதம்!
                     லெ.நா. சிவகுமார்.

 1. பணம் எடுக்க பாங்க் போன தலைவர் என்ன புலம்பறார்?
அவரு பத்தாம் கிளாஸ் பெயிலுன்னு தெரிஞ்சுகிட்டே பாஸ்புக் கேட்டாங்களாம்!
                 ஆ. பயூஷிதா.

8.ஜெயில் வாழ்க்கை தலைவரை ரொம்பவே மாத்திருச்சு!
  எப்படி ரொம்ப பக்குவம் அடைஞ்சிட்டாரா?
ஊஹும்! இப்ப எல்லாம் சிக்கன் இல்லேன்னா அவருக்கு சோறு இறங்க மாட்டேங்குது!
                      கே. ஆனந்தன்.

9.அந்த பல் டாக்டர் எதுக்கு போர்டுல கடிக்கும் நேரம்னு போட்டிருக்கார்?
கண் டாக்டர் பார்வை நேரம்னு போடற மாதிரி இவர் இப்படி போட்டுக்கிறாராம்!
                     பா. ஜெயக்குமார்.

10. தலைவரு புதுசா ரேக் செய்யறாரே சாமான் எல்லாம் அடுக்கி வைக்கிறதுக்கா?
 ம்ஹூம்! சம்மன் எல்லாம் அடுக்கி வைக்கிறதுக்கு!
                          சி. சாமிநாதன்

11. என்னது உங்க பொண்ணுக்கு பதினோராவது மாசம் வளைகாப்பு வச்சாங்களா?
  ஆமாங்க… நவம்பர் மாசம்!
                      ஜக்கி.

12.நம்ம தலைவரு ஜெயிலுக்கு போயும் மாறலை!
  என்ன சொல்றார்?
  குற்றப்பத்திரிக்கையோட ஆசிரியருக்கு வக்கீல் நோட்டீஸ் விடச் சொல்றாரு!
                      ஆர். அருண்குமார்.

13. தங்களை துரத்தி வந்த எதிரி மன்னனை கைது செய்துவிட்டனர் மன்னா!
  சபாஷ்! யார் கைது செய்தது?
 மிருக வதை தடுப்பு அதிகாரிகள்!
                     சா. சுந்தரராமன்.

14. யோவ்! வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா?
   ச்சேச்சே! சின்ன வீட்டுக்கு போறதை எப்படி சொல்ல முடியும்!
                 அ. பேச்சியப்பன்.

15.அந்த தயாரிப்பாளர் எத்தனை ரீல்ல படம் எடுத்தாரு?
  எடுத்ததெல்லாமே ரீல் தானே!
                  எஸ்.சடையப்பன்.

16.நேத்து என் மனைவி கேட்ட சேலையை கடையில வாங்காம வீட்டுக்கு போயிட்டேன்!
  ஐயோ… அப்புறம்
வீட்டுல அவகிட்ட நல்லா வாங்கி கட்டிக்கிட்டேன்!
                         கா. பசும்பொன்.

17. மன்னர் அதிகாலையிலே மாறுவேடத்தில் கிளம்பிவிட்டாரே! நகர் வலமா?
  இல்லை சுகர்வலம் மன்னருக்கு சர்க்கரை வியாதி!
                       இரா.ஜெயக்குமார்.

18. வெப்பத்தினால் பொருட்கள் விரிவடைகின்றன என்பது உண்மையா?
  உண்மைதான் சார்! எங்க மம்மி சூடாயிட்டாங்கன்னா டாடியோட முதுகு விரிஞ்சுடும் சார்!
                          வி. சுபஸ்ரீ

19.குடிச்சுட்டு வந்தா உங்களை பார்க்க சகிக்கலைங்க!
   குடிக்காம வந்தா உன்னை பார்க்க எனக்கு சகிக்கலை பானு!
                      பி.பரத்

20.மழைபெய்தாலும் உன் நினைப்புவருது வெயில் அடிச்சாலும் உன் நினைப்பு வருது!
   என் மேல அவ்வளவு பாசமா?
இரவல் வாங்கிட்டு போன என் குடையை தந்து தொலைடா!
                       எம்.ஏ.நிவேதா.

21.          ப்ளவுஸ் தைக்கிற டைலர்கிட்ட எதுக்கு இஞ்சி கொண்டு போற?
  ரெண்டு இஞ்சி பத்தலைன்னு சொன்னாரே!
                       தமிழ்நாயகி.

22. உன் மாமியார் நீ எது செஞ்சாலும் குத்திக்காட்டுவாங்கன்னு சொல்றீயே நிஜமாவா?
 கையில எப்பவும் குண்டூசியோட நிப்பாங்கன்னா பாரேன்!
              கலைவாணி

நன்றி: வாரமலர்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!Comments

 1. ஹா.... ஹா.... செம கலக்கல் போங்க... ஹா.... ஹா....

  நன்றி...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. ஒரே காமெடி தான் போங்க!!

  ReplyDelete
 3. மன்னர் சுகர் வலம் போறது நல்ல ஜோக் . மற்றவையும் ரசிக்கும் படி இருந்தன .

  ReplyDelete
 4. செம காமெடி பாஸ் ... தொகுப்புக்கு நன்றி

  ReplyDelete
 5. நகைச்சுவைகளை தொகுத்து வழங்கியதற்கு நன்றி

  ReplyDelete
 6. அனைத்தும் ரசித்தேன்.

  நன்றி.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 6

வெற்றி உன் பக்கம்! கவிதை!