ஈ. என்.டி டாக்டர் கிட்ட பசி காதை அடைக்குதுன்னு ஏன் சொல்லக்கூடாது? ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!


1.      உங்களுக்கு சர்க்கரை ஓவரா இருக்கு அதனால நீங்க தினமும் ’ஓட்’ கஞ்சி சாப்பிடனும்!
கள்ள ஓட்டா… நல்ல ஓட்டா டாக்டர்?
                       சம்பத்குமாரி
.
2.      அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்றே?
மார்ச்சுவரியிலே பாடியை பார்க்க வாங்கன்னு கூப்பிட்டா… ஏன் பனியன் கிடையாதான்னு கேக்கறாரே!
                     பி. இக்பால்.
3.      தலைவர் அஹிம்சாவாதியா இருக்கலாம்.. அதுக்காக இப்படியா?
         ஏன் என்ன ஆச்சு?
    ஆயுத எழுத்துக்கு தடைகோரி வழக்கு போட்டிருக்காரே!
                               யாழ்நிலா.
 4.சேவல் கூவுறதுக்கு முன்பாகவே எழுந்து என் பையன் வேலையை ஆரம்பிச்சுடுவான்!
 அப்படி என்ன வேலை?
கோழி திருடறதுதான்!
                  வி. வள்ளிமணாளன்

5.பார்க்கிறதுக்கு ஒல்லியா இருக்காரு இவரைப்போய் குத்துச்சண்டை சாம்பியன்னு சொல்றீங்களே!
 உள்குத்து பண்றதிலே இவர் ஒரு நிபுணருங்க!
                        என்.குமார்.

6.பார்ல சரக்கு அடிக்கும்போதுகூட தலைவருக்கு காவிரிப்பிரச்சனையை பத்திதான் நெனப்பு?
 எப்படி சொல்ற?
பேரர்கிட்ட ,90டி.எம்.சி விஸ்கி கொண்டுவரச்சொல்றாரே!
                  ஆதில் ஆதம்.

7. அந்த டூ விலர் மெக்கானிக் போலின்னு எப்படி கண்டுபிடிச்சே?
   யூ டியுப் வாங்கிப்போடுங்கன்னு சொல்றாரு!
                         எஸ்.ராமு.

8.பொய்சொல்லும் போட்டி ஆரம்பித்த முதல் வினாடியே முதல் போட்டியாளனுக்கு அமைச்சர் பரிசுவழங்கிவிட்டாராமே.. எப்படி?
 மன்னரை பார்த்து மாவீரனே என்று ஆரம்பித்தானாம்!
                          வெ.ராஜாராமன்.

9. எதிரிநாட்டு மன்னன் மீது நம்ம மன்னர் ஏன் கோபமாய் இருக்காரு?
  இப்போதெல்லாம் சதைப்பற்று இல்லாத மெலிந்த புறாவையே தூது அனுப்புகிறாராம்!
                    எஸ்.டிசோசா.

10. மன்னா தங்களைப்போலவே இளவரசரும் வாளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்!
     சபாஷ் போருக்கா?
  ஹி…ஹி… பேரிச்சம்பழம் வாங்க மன்னா!
                       என். உஷாதேவி.

11. பேஷண்டுகளை டிஸ்சார்ஜ் பண்ணாம ரொம்ப நாளா தங்கவச்சது தப்பா போச்சு!
     ஏன்?
நர்ஸ் நற்பணி மன்றம், ரசிகர்மன்றம்னு ஆஸ்பத்திரிக்குள்ளே ஆரம்பிச்சிட்டாங்க!


12. மன்னர் ஏன் மகாராணியை போர்க்களத்திற்கு அழைத்துச்செல்கிறார்?
எதிரியிடம் தாலிப்பிச்சை கேட்கத்தான்!
                    சி.சாமிநாதன்.

13. மனைவியும் உங்க அம்மாவும் ஊக்கமருந்து சாப்பிட்டு சண்டை போடுவாங்களா… அப்ப நீங்க!
 நான் தூக்கமருந்து சாப்பிட்டு தூங்கிடுவேன்!
                 ஷம்மா முபீன்.

14. தலைவரோட பெரிய ரோதனையா போச்சு!
    ஏன்? என்ன செய்தார்?
  காதலர்களுக்காக ‘முத்த தான முகாம்’ நடத்தப் போறாராம்!
                   பி.பாண்டியன்.

15. அந்த ஈ.என்.டி டாக்டர் கஞ்சப்பிசினாரியா இருக்காருப்பா!
  ஏன் அப்படி சொல்றே?
  பசி காதை அடைக்குதுசாமி. பிச்சை போடுங்கன்னு கேட்டா காதுல ரெண்டு சொட்டு டிராப்ஸை ஊத்தி அனுப்பிட்டாரு!
                     வி. ரோகிணி.

16. எதிரி மன்னனின் தலையை சீவிட்டு வாங்கன்னு மன்னரிடம் நீங்க சொல்லியிருக்க கூடாது மகாராணி!
   ஏன் என்ன ஆச்சு?
ஒரு சீப்பை கையில் எடுத்துக்கிட்டு வேகமா போய்கிட்டு இருக்கார்!
                      ராசி.

17.தலைவரே! நீங்க காலேஜ் கட்டப்போறதா ஊரே பேசிக்கிறாங்களே!
 பேசறவங்களுக்கு என்னய்யா… பொறம்போக்கு நிலம் கிடைக்கவேண்டாமா?
              தீபா ஆதித்யநாதன்.

18. என் கணவர் தூக்கத்திலே சினிமா வசனமெல்லாம் பேசுறார்டி!
 அப்போ… தூக்கத்துல நடிக்கிற வியாதின்னு சொல்லு!
                  நெ.ராமன்.

19. ஒருவிதத்துல பொண்ணு மாப்பிள்ளை ரெண்டுபேருமே எனக்கு சொந்தம்!
  அதுக்காக நீங்க ஒருத்தரே ரெண்டுஜோடி செருப்பு எடுத்து வச்சிக்கிறது ரொம்ப ஓவர்ங்க!
                       வி.ரேவதி.

20.          நம்ம மன்னருக்கு பேரிச்சம்பழம்னா சுத்தமா பிடிக்காது!
  அதுக்காக பழைய இரும்பு வியாபாரிகிட்ட வாளை கொடுத்துவிட்டு மாம்பழம் கொடுன்னு சண்டை போடுறது நல்லாவா இருக்கு!
                         அ. பேச்சியப்பன்.

21. ஏங்க உங்கள மாதிரி ஒரு மாப்ள இனிமே கிடைக்கவே மாட்டாருன்னு எங்கப்பா சொல்றாருங்க!
  அதெல்லாம் சும்மா… இல்லாட்டி உன் தங்கச்சிக்கு ஏன் வேற மாப்ள பாக்கிறாராம்!
                      டி. சீனிவாசன்..
 22.எவ்வளவு பட்டாலும் என் புருஷணுக்கு புத்தியே வரமாட்டேங்குது!
           எதை வச்சு சொல்றே?
          பூரிக்கட்டையை இரும்புல வாங்கிட்டு வந்துருக்காரு பாரேன்!
                        அ. சக்திவேல்.

   
நன்றி: வாரமலர்.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. சிரிப்புக் குவியல் அருமை.

    ReplyDelete
  2. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_6.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  3. அருமையான சிரிப்புக் கொத்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2