புகைப்பட ஹைக்கூ 62

புகைப்பட ஹைக்கூ 62


திக்கற்றவர்களுக்கு
தெய்வம் மட்டுமல்ல
நாயும் துணை!

இல்லாதவர்களுக்கும்
இருக்கும் ஒரே சொத்து
நாய்!

மனிதன் மறந்தாலும்
மனிதம் மறக்கவில்லை
நாய்!

தெருவுக்கு வந்தாலும்
உறவுக்கு வந்தது
நாய்!

கடைநிலை மனிதர்களின்
கனவு தொழிற்சாலை
தெருப்படுக்கை!

மண்படுக்கையில்
மனம் தவிக்கிறது
எதிர்காலவாழ்க்கை!

நிலை தடுமாறுகையில்
உதவிக்கு வருகிறது
நிலம்!

சொந்தங்கள்விலகுகையில்
சொந்தமாகிறது
நாய்!

வீதிகளில்
வெளிப்படுகிறது
வ(க)றுமை இந்தியா

வாயில்லா ஜீவன்கள்
வதங்குகிறது
வறுமை!

நிழல் விழுந்தும்
விலகவில்லை
நிழல்!

புரையேறிப்போன சமூகத்தில்
கரை ஏற முடியாத
ஜீவன்கள்!

வளரும் இந்தியாவின்
வறுமை
பக்கங்கள்!

துன்பங்கள் அழுத்துகையில்
வரவில்லை
துயில்!

விலங்கான மக்கள்
விலங்கோடு
மனிதன்!

டிஸ்கி}  சளிக் காய்ச்சலால் உடல் நலம் பாதிக்கப்பட்டமையால் பதிவுலகிற்கு கொஞ்சம் இடைவெளி ஏற்ப்பட்டுவிட்டது. விரைவில் வழக்கம் போல பதிவுகள் வரும்! நன்றி!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. அருமையான கவிதை..... படம் மனதைத் தொட்டது......

    ReplyDelete

Post a Comment