போதனாவின் காதணிவிழாவும்! ருக்மணி அம்மாள் மறைவும்!


நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போல வாழ்க்கையிலும் இன்பங்களும் துன்பங்களும் கலந்து வருகின்றன. சென்ற வியாழக்கிழமை ஜோக் பதிவிட்டு உங்களை சிரிக்கவைத்துவிட்டு, நானும் மகிழ்வோடு எனது இரண்டாவது மகள் போதனாவின் காதணி விழா ஏற்பாடுகளில் பிஸியாகி போனேன். மறுநாள் எங்கள் குலதெய்வ கோயிலான ஆண்டார்குப்பம் முருகர் கோவிலில் காது குத்துவிழா.
       பேஸ்புக்கில் பகிரலாம் என்ற போது இணைய இணைப்பு சதி செய்தது. சரி பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். வெள்ளியன்று காதணி விழா சிறப்பாக நடைபெற்றது. ஆனால் தாய் மாமன்கள் யாரும் வரவில்லை! ஏன் என்று கேட்டதற்கு உங்கள் மாமியாருக்கு உடல்நிலை மோசமாக இருக்கிறது வரமுடியாத சூழல் என்றார்கள்.
    சரி ரொம்ப முடியாது இருக்கிறதா? என்ற போது, இதெல்லாம் இங்கு சகஜம், அவர்கள் அடிக்கடி படுத்து எழுந்துவிடுவார்கள். நீங்கள் விழாவை நடத்துங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லிவிட்டார்கள்.  விழா அருமையாக நடைபெற்றது. காதும் குத்தியாகிவிட்டது. உறவினர்களுடன் அளவளாவியதில் அன்று இணையம் பக்கம் வர முடியவில்லை!
   சனியன்று காலை முதலே எனக்கு உடல்நிலை சரியில்லை! டூ வீலரும் காலையில் பூஜைக்கு செல்லும் போது மக்கர் செய்தது. மதியத்திற்கு மேல் தூறல் வேறு போட்டு குளிர் வாட்டியது. சரி இன்று வேண்டாம் நாளை வழக்கம் போல தமிழ் இலக்கண தொடர் எழுதுவோம் இரண்டு நாள் லீவ் விட்டுக் கொள்ளலாம் என்று  படுக்கையில் படுத்து விட்டேன்.
    அன்று இரவு 8.15 மணிக்கு மாமியார் ருக்மணி அம்மாள் இறந்து விட்டதாக தகவல் வந்தது போன் மூலம். உடனே கார் ஏற்பாடு செய்து கரூர் சென்று விட்டு தகன காரியங்கள் முடித்துவிட்டு திங்களன்று வந்தேன். உடல் அலுப்பும் சோர்வும் சேர்ந்து கொள்ள நேற்றும் பதிவுலகம் வரவில்லை! இன்று காலை முதல் பவர்கட்! மாலையில் ப்ளாக் ஓப்பன் செய்து பார்த்தால் வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியுள்ளேன்! புதிதாக மூன்று பாலோயர்கள் சேர்ந்துள்ளார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
       காதணி விழா மகிழ்ச்சி தந்தது. மாமியாரின் மறைவு வருத்தம் தந்தது, ஐந்து தினங்களாக பதிவு எழுதாமல் இருந்தது வருத்தம் தந்தது. அதே சமயம் பதிவு எழுதாவிட்டாலும் தொடர்ந்து வாசித்து ஆதரவு தரும் நம்பிக்கையான வாசகர்கள் அமைந்தது மகிழ்ச்சி தந்தது.

     மாமியார் ருக்மணி அம்மாள் அந்த கால மனுஷி! வெள்ளந்தியான சுபாவம், எதையும் நாசூக்காக சொல்ல தெரியாதவர், மாமனாரோ கோபக்கார மனுசர், அவரை சிறிய வயதிலேயே மணந்து  ஏறக்குறைய  60 ஆண்டுகளுக்கும் மேலாக குடித்தனம் நடத்தி தனது எழுபத்தைந்தாவது வயதில் காலமானார். இறப்பதற்கு ஒரு வாரம் முன்னர்தான் மாமனார் சதாபிஷேகம் செய்து கொண்டார். என் மனைவிக்கு சிக்குன் குனியா தாக்கியதால் அந்த விழாவுக்கு செல்ல முடியவில்லை! அன்று சென்றிருந்தால் உயிரோடு ஒரு முறை மாமியாரை என் மனைவி பார்த்திருக்க முடியும். சென்ற முறை சென்ற போதே அடுத்த முறை நீ வரும்போது நான் இருப்பேன் என்று சொல்ல முடியாது. உடல் முன் போல ஒத்துழைக்க வில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார். அதே போல் ஆகிவிட்டது.
         அவரது ஆத்மா சாந்தியடைய ப்ரார்த்திற்கின்றேன்! 
தொடர்ந்து வரும் நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் எனது நன்றிகள். இரண்டு லட்சம் ஹிட்ஸ் பதிவில் திரட்டிகளுக்கு நன்றி சொல்ல மறந்து போனேன். நமது பதிவுகளை பலருக்கும் எடுத்து செல்வதில் திரட்டிகளின் பங்கு அளப்பரியது. தமிழ் மண நீக்கத்திற்கு பிறகு எனது பதிவுகள் பார்வை குறைந்து இருந்தது. 
   பின்னர் இப்போது சராசரியாகநாளொன்றுக்கு 150 பக்க பார்வைகள் கிடைத்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் திரட்டிகள்தான். தமிழ்10 திரட்டி என்பதிவுகளை அவ்வப்போது முன்னிலைபடுத்தி ஆதரவளித்து வருகிறது. அதற்கு என் நன்றிகள். மேலும் இண்ட்லி, வலைப்பூக்கள், தமிழ்பதிவர்களின் நண்பன், தமிழ்வெளி, பதிவர் திரட்டி போன்ற பல்வேறு திரட்டிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    நாளை முதல் நமது வலைப்பூவில் வழக்கமான பகுதிகள் வெளிவரும். இந்த ஞாயிறும் தமிழ் அறிவு எப்படி வெளிவராது. அடுத்த ஞாயிறன்று கண்டிப்பாக வெளிவரும். மீண்டும் கரூர் பயணம் இருப்பதால் இடையில் இரண்டு நாட்கள் பதிவுலகத்திற்கு விடுமுறை! பின்னர் வழக்கம் போல் பதிவுகள் வரும்.

உங்களின்  அன்பான விசாரிப்பிற்கும், ஆதரவிற்கும் மீண்டும் ஒரு முறை நன்றி கூறி விடைபெறுகிறேன்! நன்றி!

Comments

 1. என் ஆழ்ந்த அனுதாபங்கள் & இரங்கல்கள் !
  போதனாவிற்கு என் செல்ல வாழ்த்துக்கள்!
  பதிவுகள் தொடர வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 2. வணக்கம் சகோதரர்
  வாழ்க்கையின் இன்ப துன்பங்களை மிக அழகாக உணர்ந்து வைத்துள்ளீர்கள். குழந்தையின் காதணி விழா நன்றாக நடைபெற்றதற்கு மகிழ்வதா! மாமியாரின் மறைவுக்கு வருந்துவதா! எனும் தங்கள் உணர்வு புரிகிறது. அம்மா அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை நானும் வேண்டுகிறேன். தங்கள் பணியை இவ்வளவு திட்டமிட்டு செய்யும் தங்கள் மனது கண்டு வியக்கிறேன். சந்திப்போம் நண்பரே. பணிகளில் கவனம் செலுத்தி செவ்வனே செய்து விட்டு வலைக்கு வாருங்கள். காத்திருப்போம்.

  ReplyDelete
 3. உங்கள் மகளுக்கு வாழ்த்துகள்......

  மாமியாரின் மறைவுக்கு இரங்கல்கள்.....

  ReplyDelete
 4. sako!
  ungal santhosangalukku vaazhthukkal!
  sangadangalukku aazhntha anuthaapangal!

  ReplyDelete
 5. இன்பமும் துன்பமும் இணைந்ததுதான் வாழ்க்கை.
  போதனாவிற்கு வாழ்த்துக்கள்
  மாமியாரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

  ReplyDelete
 6. மாமியாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்...

  ReplyDelete
 7. போதனா- நல்ல பெயர்.. வாழ்த்துகள்!! இறப்பு மனிதன் தவிர்க்க முடியாத ஒன்று.. - இரங்கல்கள்!

  ReplyDelete
 8. அம்மையாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். போதனாவிற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 6

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2