மாசானி அம்மா.. எப்படியாவது அவனை மந்திரி பதவிலருந்து தூக்கு!' -அதிமுகவினர் மிளகாய் நேர்த்தி!

பொள்ளாச்சி: 'தாயே.. மாசானி அம்மா... இந்த மந்திரியை எப்படியாவது அமைச்சரவையிலருந்து தூக்கி அருள்புரியனும்...' - பொள்ளாச்சி அருகே மாசானியம்மன் கோயிலில் அதிகமாகக் கேட்கும் அதிமுகவினர் வேண்டுதல் குரல் இது.

அதுவும் சாதாரணமாக அல்ல, மிளகாய் அரைத்துப் பூசி படு தீவிரமாக வேண்டுவதால், அதிமுக மந்திரிகைகள் ஏக கலக்கத்தில் உள்ளனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 'முன்னாள் உயிர்த்தோழி' சசிகலா பல்வேறு காரணங்களால் போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றப்பட்டதால், சசிகலா, ராணவன், திவாகர், மகாதேவன், எம்.நடராஜன், பவனிவேல், ராமசந்திரன் ஆகியோரால் பரிந்துரைக்கப்பட்ட அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக மாற்றம் செய்து வருகிறார். மேலும், சமீபத்தில், தமிழக அமைச்சரவையில் இருந்து வேலுமணி மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நீக்கப்பட்டனர்.

ஆனால், முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட பல அமைச்சர்கள் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக நிர்வாகிகள் அமைச்சர்களின் அடாவடி, அத்துமீறல், சட்ட விதி மீறல், திமுகவினருடன் உள்ள தொடர்புகள் குறித்து வழக்கம் போல் போயஸ்கார்டனுக்கு புகார் அனுப்பிவைத்த வண்ணம் உள்ளனர்.

மிளகாய் அரைத்து வழிபாடு

இந்த நிலையில் இதன் உச்ச கட்டமாக தங்களது எதிரிகளாக உள்ள அமைச்சர்களை முதல்வர் ஜெயலலிதா நீக்க கோரி, பொள்ளாச்சி அருகே உள்ள மாசானி அம்மன் கோவிலுக்கு அதிமுகவினர் படையெடுத்து வருகின்றனர். அங்கு மிளகாய் அரைத்து பூசி நேர்த்திகடன் செய்கின்றனர். 'தாயே.. மாசானி அம்மா... இந்த மந்திரியை எப்படியாவது அமைச்சரவையிலருந்து தூக்கி அருள்புரியனும்...' என்று வாய்விட்டு சத்தமாகக் கூறி வேண்டுகின்றனர்.

இவ்வாறு செய்வதால் எதிரிகள் பலம் இழந்து போவார்கள், அழிந்து போவார்கள் என்பதும் ஐதீகம். பொள்ளாச்சி மாசானி அம்மன் கோவிலுக்கு நாளுக்கு நாள் அதிமுகவினர் கூட்டம் அலை மோதுகின்றது. இதனால் ஏராளமானேருக்கு இப்போதே கிலி பிடிக்கத்தொடங்கியுள்ளது.

நன்றி தட்ஸ் தமிழ்

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2