தளிர் ஹைக்கூ கவிதைகள்! 4

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

வானம் வரையும்
வரைபடம்
மின்னல்

பின்னிரவில் எங்கோ
ஒலிக்கும் பாடல்
தாலாட்டு

விரட்ட விரட்ட
விடாமல் துரத்துகிறது
காய்ச்சல்!

அதிகாலையிலும்
வியர்த்தன புற்கள்
பனி!

கை கால்களை உடைத்தும்
சிரித்துக் கொண்டிருந்தார்
பிள்ளையார்!

மழை
பூமிக்கு குடை
காளான்கள்!

பரபரப்பான உலகில்
அமைதியாக நின்றது
சிலை!

விசிறி
ஓய்வு எடுக்கிறது
மின் தடை!
உன் முகத்திலுமா
பருக்கள்
நிலவு!

பூட்டிய வீட்டில்
சிணுங்கல் சத்தம்
தொலைபேசி

யாருக்கு இசைக்கின்றன
இரவு நேரத்தில்
புல்லினங்கள்

கருப்பு போர்வையில்
சிகப்பு பொட்டுக்கள்
நட்சத்திரங்கள்

காலை மாலை
அணிவகுப்பு
எறும்புகள்

நெஞ்சில் ஏறி மிதித்தும்
அழவில்லை அப்பா
குழந்தை

படைப்பு தளிர் அண்ணா சுரேஷ்பாபு.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

 

Comments

  1. அருமையான ஹைக்கூ கவிதைகள் பாஸ் அருமையாக இருக்கு

    ReplyDelete
  2. //விரட்ட விரட்ட
    விடாமல் துரத்துகிறது
    காய்ச்சல்!//

    எனக்கும்தான்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2