திண்ணை!

திண்ணை!


எட்டாப்பு படிக்கையிலே
ஒரு மாச லீவுக்கு ஒடிடுவோம்
தாத்தா ஊருக்கு!
தாத்தாவோடு கைப்பிடித்து நடக்கையில்
தெருவெல்லாம் வேடிக்கை பார்க்கும்!
திண்ணை வைத்துக் கட்டப்பட்ட
கூடல்வாய் ஓட்டுவீடுகளில் முற்றத்தில்
நிலா முகம் காட்டும்!
ஓடி பிடித்து விளையாட கல்லாங்காய்
கண்ணாமூச்சி எல்லாத்துக்கும் சாட்சியாய்
நிற்கும் திண்ணையில் படுத்திருக்கும் பெரிசுகள்!
மத்தியான போதினிலே திண்ணையிலே சாய்ந்திருக்கும்
பாட்டிமார்கள் கதைக்கும் ஊர் கதைக்கு தனிமவுசு!
எப்பொழுதும் கூட்டமிருக்கும் எதிர்வீட்டுத் திண்ணை!
முப்பொழுதும் அங்கு நடக்கும் ரம்மி!
முன்னிரவு வேளையிலே சிறுசுகளை சேர்த்து
முனியாண்டி கதை சொல்லும் முனியம்மா!
எப்போதும் திண்ணையிலே கால்நீட்டி படுத்திருக்கும்
செல்லம்மாக் கிழவி!
திண்ணையிலே மெத்தைவிரித்து கைவிசிறிக்கொண்டு
விசிறி தூங்கும் ரத்னம் தாத்தா!
ஓவ்வொருவராய் உலகைவிட்டு விடைபெற
இன்று நம்மை விட்டு விடை பெற்றது திண்ணை!
பல ஆண்டுகழித்து பட்டணம் சென்று ஊர் திரும்புகையில்
பல அடுக்குமாடிகள் ஊரிலே நிறைந்திருக்க
பாந்தமான திண்ணை மட்டும் காணவில்லை!
சொந்தங்களையே மறக்கும் நமக்கு
திண்ணையை மறந்ததில் ஆச்சரியமில்லை!
ஆனாலும் என்னவோ செய்தது
திண்ணை இல்லா கிராமங்களை பார்க்கையில்!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2